Thursday, August 23, 2007

நம்ம சென்னை!

சரி, சரி உங்களுக்குத் தெரிந்ததுதான்...இன்று சென்னை தினமாம். அதாவது நாயக்கர்கள் இன்றைய சென்னை மாநகரத்தின் சில பகுதி நிலங்களை ஆங்கிலேயருக்கு ஆகஸ்ட் 22, 1639 இல் விற்றதை சென்னை தினமாக அனுசரிக்கிறார்கள். இதற்காக சென்னை வாரம் என்று சிலபல நிகழ்ச்சிகளுக்கும் எற்பாடு செய்யப்பட்டு நடந்துவருகின்றன. நீங்கள் சென்னையில் இருந்தால் கலந்துகொள்ளுங்களேன்!

சென்னை வாரம் பற்றிய சில பத்திரிக்கை செய்திகள் இதோ...இந்து1, இந்து2, இந்து3, CNN-IBN,

4 comments:

வவ்வால் said...

இன்று என்ன தேதி என்று தெரியுமா?

Balaji Chitra Ganesan said...

நீங்கள் தமிழ்மணம் போன்றவற்றிலிருந்து இந்த பதிவை தாமதமாகப் படித்தீர்களா? நான் என்ன தேதியில் எழுதினேன் என்றுகூடப் பார்க்காமல் பின்னூட்டமிட்ட தங்கள் ஆரவத்திற்கு எனது பாராட்டுக்கள்!

வவ்வால் said...

அடடா அப்படி வேற இருக்கா , நீங்க என்று எழுதி இருந்தாலும் , வெளியிட்ட நாள் தானே கணக்கு, தமிழ்மணத்தில் புத்தம் புதிய பதிவா எதுக்கு அப்புறம் போட்டிங்க அப்படியே உங்களோடவே வைத்து இருக்கலாமே , என்னிக்கு வெளியிட்டா என்ன நானும் வெளியிட்டேன் என்று பதிவை போடும் உங்கள் ஆர்வத்தை பாராட்டுகிறேன்!

Balaji Chitra Ganesan said...

ம்...ஏட்டிக்குப் போட்டியாக பின்னூட்டமிடுவதற்கு வருந்துகிறேன்.

நான் தமிழ்மணம், தேன்கூடு போன்றவற்றிலிலெல்லாம் ஆர்வம் காட்டுவதில்லை. (மாற்றுவுக்கு பங்களிப்பது மட்டும் உண்டு) எதோ அவர்களுடைய நிரலை எனது பதிவில் சேர்த்துள்ளேன். அது என்ன செய்கிறதென்றெல்லாம் நான் கண்டுகொள்வதில்லை!