
ம்... Splendor என்ற வார்த்தைக்கு என்ன தமிழ் சொல் என்று தெரியாததால் இந்த தலைப்பு. நேற்றிரவு எனது வீட்டிற்கு அருகில் நடைபெற்ற India Splendor என்ற நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். இந்தியில் ஆட்டம் பாட்டும் கொண்டாட்டம்! சோனு நிகம் நன்றாகவே பாடினார். பிபாஷா பாசு (எ) மாமி ரொம்பவும் கஷ்டப்பட்டு ஆடினார். லாஸ் ஏஞ்சலீஸிலேயே இருக்கும் ஒரு நடனக்குழு கலக்கினார்கள்.
பல வருடங்களுக்கு பிறகு சுதந்திர தினத்துக்காக நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். இலவசமாகக் கலை நிகழ்ச்சிகளைப் பார்க்க கசக்குமா என்ன? சுபின் மேத்தா, விக்ரம் சந்திரா, மணிரத்னம், விது வினோத் சோப்ரா உள்ளிட்ட பல பேருக்கு எதோ உருப்படாத விருதெல்லாம் கொடுத்தார்கள். அவர்களில் பலரும் பேசிக் கழுத்தறுத்தார்கள்! மணி 'நன்றி' மட்டும் சொல்லி புண்ணியம் கட்டிக்கொண்டார். இந்தியாவின் 61 ஆவது சுதந்திர தினத்தை உலகிலேயே கடைசியாகக் (பசிபிக் நேரம்) கொண்டாடி மகிழ்ந்தோம்!
No comments:
Post a Comment