Monday, August 13, 2007

அடுத்தது என்ன? ஒருங்குறி 1.1

தமிழ் இணையதளங்களை ஒருங்குறியில்(யிலும்) வழங்குமாறு கோரி இந்த தளத்தின் மூலம் கோரிக்கை வைக்கலாம் என்கிற ரவியின் யோசனைக்கு எனது முழு ஆதரவு உண்டு! ஆனால் என்ன கோரிக்கை வைப்பது என்பது கொஞ்சம் மூலையை கசக்க வேண்டிய விசயமாகத் தெரிகிறது! இருந்தாதானே கசக்குவதற்கு! அதனால் இதை விசயமறிந்தவர்கள் செய்யுமாறு வேண்டுகிறேன். எனக்கு தோன்றும் சில விசயங்கள் கீழே!

1. தமிழில் படிப்பதற்கும் எழுதுவதற்கும் எழுத்துரு, எ-கலப்பை, அஞ்சல், தமிழ்விசை என்று எதையாவது நிறுவித்தான் ஆகவேண்டும் என்கிற நிலை ஒழியும்வரை நாம் போராடித்தான் தீரவேண்டும்.
2. அந்த உடோப்பியா வெகுதொலைவில் இருந்தாலும், குறைந்தபட்சம் தமிழ் இணையதளங்கள் எந்த தரத்தையுமே கடைபிடிக்காமல் விட்டேத்தியாக ஏதோவொரு எழுத்துருவை பயன்படுத்துவதற்கு எதிராக முதலில் போராடவேண்டும்.
3. 'நாளிதழ்களுக்கு ஒருங்குறி பற்றிக் கவலையில்லை' என்பது சரியான வாதமில்லை போலிருக்கிறது. தினமலர் நாளிதழ் 'கடைசி செய்திகள்' பக்கத்தை ஒருங்குறியில் வெளியிடுகிறார்கள். அவர்கள் அதையே பிறபகுதிகளுக்கும் செய்தால் நன்றாக இருக்கும். இதை ஊக்குவிக்கும் 'Shawshank Redemption' மாதிரி முயற்சியாய் தினமும் இரண்டுமுறையேனும் அவர்களின் ஒருங்குறி பக்கத்திற்கு செல்லப்போகிறேன்.
4. 'சக்கரத்தை திரும்பவும் கண்டுபிடிக்காதே' என்கிற மாதிரி, இது சம்பந்தமா ஏற்கனவே நடந்த முயற்சிகள் குறித்து விசயமறிந்தவர்கள் எழுதுங்கள். திஸ்கியில் இதுகுறித்து என்ன பேசிக்கொண்டார்கள் என்று தெரிந்துகொள்ள இங்கு போய் படிக்கலாம்.
5. மொசில்லா உலாவியில் திஸ்கியை கொண்டுவர என்ன செய்யலாம் என்று பேராசிரியர் கல்யாண் எழுதிய மடல்தான் கடைசியாய் எனக்குக் கிடைத்த செய்தி. அதற்குப்பிறகு என்ன ஆயிற்று என்று அறிய ஆவல். அந்த மடல் கிழே.

Dear Mani and friends:

Soon after we got the good news that TSCII is now officially part of the international IETF/IANA charset registry, I made some suggestions on avenues we can pursue further work.

With formal registration, any web browser can include TSCII as one of the charsets for users to display webpages. I indicated that with Mozilla Firefox browser (which works almost like open source product), with some volunteers effort, we can get them to automatically recognize a TSCII-based webpage and display it using any TSCII font chosen in the font preferences.

With auto-recognition of the encoding used in a given text (in the way it is done with file convertor of Murasu Anjal), browser can put up a pop up message for a TSCII based webpage (but using user-defined charset) that it can display the page using TSCII text as a choice.

I am sure there are many in this forum like Mugunth who worked on open source office and plug-ins for Mozilla have better ideas and suggestions than I can give.

IMHO this is an area we can have some brain-storming here to see what is possible and to assemble a team subsequently.

anbudan
Kalyan


இது என்ன சங்கதி? ஒருங்குறியும், திஸ்கியும் 'default' ஆக கணினியில்/இணையத்தில் இருப்பதுதான் நமது உடோப்பியாவா? ஒன்றுமே செய்யாமல் படிக்க ஒருங்குறிப்பக்கம், நன்றாக/அழகாகத் தெரிகிற திஸ்கி பக்கம் என்பதுதான் இணையதளங்களுக்கான தாரக மந்திரமா? யாராவது கேட்டுச் சொல்லுங்களேன்...

12 comments:

ரவிசங்கர் said...

இப்ப திஸ்கியைப் பயன்படுத்தும் தேவை என்னவென்று எனக்குப் புரியவில்லை. யாராவது விளக்குங்கள்.

தினமலரின் ஒரு பக்கம் ஒருங்குறியில் இருப்பது புது செய்தி. ஒருவேளை இது முன்னோட்டமாகக் கூட இருக்கலாம். பார்ப்போம்.

Non-unicode Tamil sites petition என்ற பெயரில் தினமலர், தினகரன், தினமணி, தினத்தந்தி போன்ற முன்னணி தமிழ் நாளிதழ்கள், விகடன், குமுதம் போன்ற இதழ்கள், தமிழ் இணையப் பல்கலைக்கழகம், தமிழ் நாடு அரசு இணையத்தளம் போன்ற முக்கியத் தளங்கள் ஒருங்குறிக்கு மாற வேண்டும் அல்லது கூடுதலாக ஒருங்குறிப் பதிப்பும் தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கலாம்.

petition எழுதும் அனுபவம் உள்ளவங்க யாராவது இருந்தா சொல்லுங்கப்பா :)

இதற்கு மக்கள் ஆதரவு, எதிராளி response பார்த்து அடுத்தடுத்த petition யோசனைகளை அள்ளி விடுவோம் :)

ILA(a)இளா said...

// 'நாளிதழ்களுக்கு ஒருங்குறி பற்றிக் கவலையில்லை' //
இதற்கு வேறு காரணமும் உண்டு, அவர்களது செய்தியையோ, கருத்துக்களையோ யாரும் சுலபமாக காப்பி-பேஸ்ட் செய்யக்கூடாது என்பதுதான் அவர்களது முதல் குரலாய் ஒலிக்கிறது. ஏன் ஆங்கிலத்தில் காப்பி-பேஸ்ட் செய்வது இல்லையா என்று கேட்டால் அமைதியாகி விடுகிறார்கள்.

ஒருங்குறி வருவதற்கு முன் அவர்களாகவே உருவாக்கி, தட்டி பழகிய எழுத்துருவிலிருந்து மாற விருப்பமில்லாத்தும் இன்னொரு காரணம்.

//1. தமிழில் படிப்பதற்கும் எழுதுவதற்கும் எழுத்துரு, எ-கலப்பை, அஞ்சல், தமிழ்விசை என்று எதையாவது நிறுவித்தான் ஆகவேண்டும் என்கிற நிலை ஒழியும்வரை நாம் போராடித்தான் தீரவேண்டும்.//
ஆமாம், OS கண்டுபிடிப்பாளர்கள் ஏதாவது செய்தால் ஒழிய இதற்கு இப்பொழுது வேறு வழியில்லை.

PRINCENRSAMA said...

முழுமையாக ஒருங்குறியைப் பயன்படுத்தும் நாளிதழ் என்ற பெருமை "விடுதலை"(viduthalai.com) நாளிதழுக்கு உண்டு! விண்டோஸ்'98-இல் சிக்கல் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட உடன் மறுநாள் முதல் அதை செயல்படுத்தியது 'விடுதலை'யின் தனிச்சிறப்பு!
தொடர்ந்து 'உண்மை'
(unmaionline.com) இதழிலும், அது நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது.

அதற்கு உதவிய பாலபாரதி, ஹை கோபி ஆகியோருக்கு எங்கள் நன்றிகள்!

Balaji said...

ரவி,

>> இப்ப திஸ்கியைப் பயன்படுத்தும் தேவை என்னவென்று எனக்குப் புரியவில்லை.

ஒரே கூடையில் எல்லா பழங்களையும் போடாதே என்கிற மாதிரி ஒரேடியா எல்லேரும் ஒருங்குறிக்கு மாறிவிடுவது சரியா என்று தெரியவில்லை. சும்மா அதுகுறித்து படிக்கலாமே என்று ஆரம்பித்ததில் திஸ்கியில் நடந்த உரையாடல்கள் பற்றித் தெரிந்துகொண்டேன். இது சம்பந்தமா முகுந்த் அவர்களிடம் பேச முடியுமா?

>> ஒருவேளை இது முன்னோட்டமாகக் கூட இருக்கலாம்.

ஆமாம். அந்த பக்கத்தை Trial Page என்றுதான் குறிப்பிட்டுள்ளார்கள்!

>> ... போன்ற முக்கியத் தளங்கள் ஒருங்குறிக்கு மாற வேண்டும் அல்லது கூடுதலாக ஒருங்குறிப் பதிப்பும் தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கலாம்.

ஆமாம். இனிமே இதை எப்படி செய்வது என்று யோசிக்கவேண்டும். நிறைய பேரை இதில் கையெழுத்திட வைக்கவேண்டுமென்பதால் என்ன கோரிக்கை வைப்பது என்று கொஞ்சம் யோசிப்பது நல்லது.

'கூடுதலாக ஒருங்குறிப் பதிப்பும் தர வேண்டும்' என்பது இப்போதைக்கு Politically Correct கோரிக்கையாகத் தெரிகிறது!

>> விகடன், குமுதம் போன்ற இதழ்கள், தமிழ் இணையப் பல்கலைக்கழகம், தமிழ் நாடு அரசு இணையத்தளம்

இவங்கெல்லாம் தமிழ்நாடு அரசு பரிந்துரைக்கும் TAB/TAM தரத்தை பயன்படுத்துவதாகத் தெரிகிறது. ஒருவேளை இவர்களை ஒருங்குறிக்கு மாறச்சொல்வதைவிடவும் TAB/TAM-ஐ உலாவிகளிலும், கணினிகளிலும் தெரியவைப்பதுதான் சரியான வழியோ?

ரவிசங்கர் said...

//அவர்களது செய்தியையோ, கருத்துக்களையோ யாரும் சுலபமாக காப்பி-பேஸ்ட் செய்யக்கூடாது என்பதுதான் அவர்களது முதல் குரலாய் ஒலிக்கிறது.//

சிரிக்கத் தான் முடிகிறது :)

//ஒருங்குறி வருவதற்கு முன் அவர்களாகவே உருவாக்கி, தட்டி பழகிய எழுத்துருவிலிருந்து மாற விருப்பமில்லாத்தும் இன்னொரு காரணம்.//

நிறைய மக்களிடம் உள்ள தவறான புரிதல் இது. typewriting layoutக்கும் encodingக்கும் தொடர்பில்லை. எப்படி வேண்டுமானாலும் தட்டச்சு செய்து எந்த குறிமுறையில் வேண்டுமானாலும் பதிவேற்றலாம்.

//OS கண்டுபிடிப்பாளர்கள் ஏதாவது செய்தால் ஒழிய இதற்கு இப்பொழுது வேறு வழியில்லை.//

Mac OSல் அஞ்சலும் தமழ்99ம் தானாகவே இருப்பதாக பகீ தெரிவித்திருக்கிறார். லினக்ஸ் நம்ம கட்டுப்பாட்டில் தான் என்பதால் அவற்றையும் எளிதாக வழிக்கு கொண்டு வரலாம். windowsல் defaultஆக inscript முறை தட்டச்சு இருக்கிறது. அதை மாற்றி அஞ்சலும் தமிழ்99ம் தரச் செய்ய வேண்டும். பெரிதாக கண்டுபிடிக்க ஒன்றுமில்லை. யாராவது தமிழ் தெரிஞ்ச மைக்ரோசாப்ட் இருக்கீங்களா? இல்லை, அதுக்கும் தனி petition போட வேண்டியது தான் :)

//ஒரே கூடையில் எல்லா பழங்களையும் போடாதே என்கிற மாதிரி ஒரேடியா எல்லேரும் ஒருங்குறிக்கு மாறிவிடுவது சரியா என்று தெரியவில்லை.//

utf-8 போய் வேற utf வரலாம். ஆனா, ஒருங்குறி தாங்க வருங்காலம். ஒவ்வொரு மொழிக்கும் ஒரு குறிமுறைங்கிறத தலைசுற்ற தான் வைக்குது.

//ஒருவேளை இவர்களை ஒருங்குறிக்கு மாறச்சொல்வதைவிடவும் TAB/TAM-ஐ உலாவிகளிலும், கணினிகளிலும் தெரியவைப்பதுதான் சரியான வழியோ?//

உலாவில படிக்க முடியலைங்கிறது மட்டும் பிரச்சினை இல்லை, பாலாஜி. அதை விட முக்கியப் பிரச்சினை, ஒருங்குறில இல்லாட்டி கூகுள், யாகூன்னு எந்த தேடு பொறிலயும் அகப்படாது. நாம tam / tab உலாவி ஆதரவு கொடுக்கப் போய் எல்லா தளமும் அதை விட்டு வராம தங்கிடுச்சுன்னா அப்புறம் கூகுளுக்கும் யாகூவுக்கும் petition போடுவதில் போய் தான் நிற்கும்.

Balaji said...

அஞ்சல் திஸ்கியைத்தானே பயன்படுத்துகிறது? இல்லையா?

எதோ விசயம் தெரியாமல் நான் உளருவது எனக்கே புரிந்தாலும், ஒருங்குறி மற்றும் வேறோரு தரம் என்பதுதான் நமது இலக்காக இருக்கனும்போலத் தெரிகிறது.

மைக்ரோசாப்டில் என்னுடைய நன்பர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் என்னைப் போலவே அவர்களும் இப்போதுதான் கல்லூரிகளிலிருந்து வந்தவர்கள். எதாவது விசயம் தெரியவேண்டுமென்றால் நான் அவர்கள் மூலமாக முயற்சி செய்துபார்க்க முடியும்.

ILA(a)இளா said...

//typewriting layoutக்கும் encodingக்கும் தொடர்பில்லை//
ரவி, இன்னும் அந்த மக்கள் keyboard layout மாற்ற விருப்பமில்லாம் இருப்பதுதான். ஏனெனில் அவர்கள் பழகிய லே அவுட்டை மாற்றலை விரும்பாதவர்கள்.

ரவிசங்கர் said...

முரசு அஞ்சல் என்று ஒரு மென்பொருள் இருக்கிறது. அதில் இருந்து 8 விதமான keyboard layout, 7 விதமான தமிழ் குறிமுறைகளில் எழுத முடியும். இந்தக் குறிமுறைகளுள் tscii, unicode எல்லாம் அடங்கும். விசைப்பலகை வடிவமைப்புகளில் தமிழ்99, old typewriter, அஞ்சல் என்னும் தமிங்கில விசைப்பலகை எல்லாம் கிடைக்கும். நமக்கு என்ன முறை வேண்டுமோ தெரிந்தெடுக்கலாம்.

கூகுள் இந்தி மீது அதிகம் கவனம் செலுத்தக் காரணமாய் அதில் உள்ள இந்தி நண்பர்களைச் சொல்லலாம். முன்பு சுந்தர் (wikipedia user) யாகூவில் இருந்த போதும் தமிழ் சார்ந்த செயலிகளை முடுக்கி விட்டார். எல்லா பெரிய நிறுவனத்திலும் தமிழார்வம் உள்ள தமிழர்களைப் பிடித்து lobbying செய்வது அவசியம். இது ஒன்று தான் சுலபமாக முடிகிற குறுக்குவழி.

ila, பழகிய layoutஐ மாற்ற விரும்பாதது புரிந்து கொள்ளத்தக்கதே. ஆனால், குறிமுறையை மாற்ற layoutஐ மாற்றத் தேவை இல்லை. அவர்கள் எப்போதும் தட்டச்சு செய்வது போலவே செய்யலாம். ஆனால், கணினிக்கு அனுப்பும்போது குறிமுறையை மட்டும் மாற்றலாம்.

Balaji said...

>> எல்லா பெரிய நிறுவனத்திலும் தமிழார்வம் உள்ள தமிழர்களைப் பிடித்து lobbying செய்வது அவசியம்.

என்ன லாபி செய்யவேண்டும்? ஆட்களைப் பிடித்துத்தர நான் தயார்!

ரவிசங்கர் said...

microsoft - அஞ்சல், தமிழ்99 விசைப்பலகைகளை தானே தருவது, office-windowsல் முழுமையான தமிழ் பதிப்புகள், உதவி ஆவணங்கள் முழுக்கத் தமிழில் தருதல்.

google - ஜிமெயில் முதல் ப்ளாகர் வரை தமிழ் இடைமுகப்பில் தர வேண்டும். தற்போது இதன் தமிழாக்கங்கள் தன்னார்வ அடிப்படையில் நடைபெறுகிறது. ஆனால், அதில் ஒருங்கிணைப்பில்லாமல் சரி சொதப்பலாக இருக்கிறது. இதற்கான மொழிபெயர்ப்பு வேலைகளை launchpad கொண்டே po கோப்புகள் கொண்டோ செய்தால் தான் உருப்படும். ஆனால், இது எல்லா மொழி மொழிமாற்றங்களுக்கும் உள்ள பொதுவான பிரச்சினை. மொத்த translation systemஐயே மாற்றணும். ta.blogger.com கொண்டு வந்தால் பாதி தமிழ் வலைப்பதிவுலகப் பிரச்சினைகள் முடிந்து விடும் :) அனேகமாக, இந்த வேலைகள் நடந்துக்கிட்டு இருக்கலாம். கூகுள் செய்திகள் இந்தியில் வந்தாச்சு. பிற இந்திய மொழிகளுக்கும் வரும்னு சொல்லி இருக்காங்க. அதை முடுக்கி விடணும். ப்ளாகரில் இந்தி எழுத்துப்பெயர்ப்புக்கு பொத்தான் இருப்பது போல் தமிழுக்கும் தரணும். அது தமிங்கில transliterationஆக மட்டும் இல்லாமல், பாமினி, தமிழ்99 பிற பிரபலமான முறைகளை ஆதரிக்கிறதா இருக்கணும்.

மேல உள்ளது போல் yahoo products and servicesலும் தமிழ் ஆதரவு வரணும். yahoo messengerல இன்னும் எ-கலப்பை வைச்சு நேரடியா தமிழ்ல எழுத முடியாம இருக்குன்னு நினைக்கிறேன். அதை சரி செய்யணும்.

nokia, motorola, samsung - தமிழ் இடைமுகப்பு தர வேண்டும்.
இந்த செல்பேசி தயாரிப்பாளர்களோடு சேர்ந்து airtel, hutchனு சேவை வழங்குறவங்களும் தமிழ் text sms ஆதரவு தர வேண்டும்.

mobile phoneக்கு என்று பிரத்யேகமா தமிழ் விசைப்பலகை வடிவமைக்கணும். இரண்டு மூணு வாரம் விடுப்பு போட்டா நாமளே கூட முழு மூச்சா இறங்கி இதைச் செய்யலாம்.

பிரச்சினைகளா இல்லை..நீங்க சீக்கிரம் புள்ளை பிடிக்கப் பாருங்க :)

✪சிந்தாநதி said...

ரவி

மைக்ரோசாப்ட் விண்டோஸ் ஏற்கனவே முழுக்க தமிழில் இடைமுகத்துடன் கிடைக்கிறது. நண்பர் ஒருவர் அமெரிக்காவில் வாங்கிய மடிக்கணினியில் அங்கேயே os நிறுவும்போது மொழி கேட்டார்களாம். தமிழ் தெரிவு செய்து முழுக்க தமிழில் வந்திருக்கிறது என்று சொன்னார். ஆபீஸ் -ம் தமிழில் கிடைக்கிறது.

இயல்பான விசைப்பலகை முறை மட்டுமே பிரச்சினை. இதை மட்டும் மைக்ரோசாப்ட் மாற்ற மறுக்கிறது. யாரோ ஒரு இன்ஸ்க்ரிப்ட் ஆசாமி தான் தமிழ்ப்பிரிவுக்கு பொறுப்பாளராக இருக்கக் கூடும். ;)

✪சிந்தாநதி said...

யூனிகோடு வருவதற்கு முன் பொதுமைப்படுத்தப்பட்ட எழுத்துருவாக திஸ்கியை உருவாக்கினார்கள். யூனிகோடில் தரப்படுத்தவும் அதே குறிமுறையை பயன்படுத்தாமல் வேறு குறிமுறையில் யூனிகோடு வந்து விட்டது.... திஸ்கி-யூனிகோடு விவாதமும் கடந்துஇப்போது யூனிகோடில் வெகுதூரம் வந்து விட்டோம்.இன்னும் இரட்டை முறை அவசியமா என்று தெரியவில்லை.