Friday, August 10, 2007

அடுத்தது என்ன? ஒருங்குறி 1.0

தமிழ் இணையதளங்களை ஒருங்குறி வழிக்குக் கொண்டுவர என்ன செய்யவேண்டுமென்று பத்ரி அவர்கள் இங்கு எழுதியிருக்கிறார். முயன்று பார்க்கவேண்டியவைதான்! இது சம்பந்தமா மாற்று! மடலாடர் குழுவில் நான் போன வாரம் தெரிவித்த யோசனை கீழே! அவசரத்தில் ஆங்கிலத்தில் எழுதியதை இங்கு ஒட்டுவற்கு மன்னிக்கவும்.

why don't we start a campaign to make tamil news papers/magazines/portals to turn unicode and firefox/linux friendly? if there are 2000 tamil bloggers, it looks incredibly stupid on the part of these sites not to use unicode. i have something like a petition/hall of shame in mind. say we create a wordpress blog and redirect something.maatru.net to it.

we write a general request to papers urging them to turn to unicode,blah, blah... (if I remember correctly Ravi has written something like this already). we request bloggers to come and sign this petition (with name, email, tamil blog url and few optional words) as comment. in the utopian event that some site actually heeds our advice or does it by itself, we remove them from the hall of shame.

why shud maatru do it? b'cos we need to choose our targets carefully. appealing to some random movie site doesn't make sense. also we need to delete junk comments and the ones without proper blog url. lets be authentic. if there are 200 comments then 200 serious tamil bloggers
have signed the petition!

மேலே என்ன உளரியிருக்கிறேன் என்றால், "ஒருங்குறியில் தளத்தை வெளியிடமாட்டேன், பயர்பாக்ஸில் தெரியுதா என்று எங்களுக்குக் கவலையில்லை" என்று அழிச்சட்டியம் செய்யும் தளங்களுக்கு எதிராகவொரு கூட்டுப்பதிவு தொடங்குவது. தில்லி லினக்ஸ் பயனர் குழு முன்பு வைத்திருந்த பக்கம் நல்ல உதாரனம். கோரிக்கை, அவமானச்சின்னமாக அறிவிப்பது, எச்சரிக்கை, புறக்கனிப்பு என்று சாம, பேத, தாண, தண்டம் எல்லாவற்றையும் செய்துபார்க்கவேண்டும்!

ஆளாளுக்கு இதைச்செய்யலாம், ...லாம், ...லாம் என்று ஆரம்பித்துவிட்டோமோ? இன்னும் சில யோசனைகள் வைத்திருக்கிறேன். அடுத்த சில தினங்களில் சொல்லிடறேனே!

3 comments:

Voice on Wings said...

ஒரு முடிவோடதான் கிளம்பியிருக்கீங்கன்னு தோணுது :)

வவ்வால் said...

ஒருங்குறிக்கு மாற வேண்டும் என்று கேட்கலாம் கட்டளை இட முடியாது , ஏன் எனில் இந்தியாவில், தினசரிகள் எல்லாம் ,இணையத்தில் இலவசமாகவே படிக்ககிடைக்கிறது , அவர்கள் எல்லாம் ஏதோ தர்மம் பண்ணுவதாக நினைத்தே இணையத்தில் ஏற்றுகிறார்கள்.ஒரு வேளை இணையத்தில் தங்களின் இருப்பு இருக்கிறது என்று காட்ட மட்டும் போடுகிறார்களோ என்னமோ.இதில் நாம் இப்படி தான் உங்கள் காகிதம் வர வேண்டும் என்று சொன்னால் கேட்பார்களா?

ஏற்கனவே இணைய வெளியீட்டால் தங்கள் பதிப்பு தினசரிக்கு விற்பனை பாதிக்க கூடாது என சில கோல்மால்கள் செய்கிறார்கள்.

உதாரணம் மாலைமலர், அதன் இணையபதிப்புக்கும் அச்சு பதிப்புக்கும் 108 வித்தியாசங்கள் இருக்கிறது, இப்படி தான் அனைத்து தினசரிகளும் இருக்கிறது.

ஒரு வேளை கட்டணம் நிர்ணயித்தால் இணையத்திலும் கூடுதல் கவனம் செலுத்துவார்களோ என்னமோ!

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

http://www.petitiononline.com மூலம் முயலலாமா? ஒருங்கிணைக்க இலகுவாக இருக்கும்