Wednesday, August 08, 2007

அடுத்தது என்ன? திரை விமர்சனம்

இதுவொரு கும்மி யோசனைதான்! ஆங்கிலத்திலுள்ள அழுகியதக்காளி மாதிரியான தளத்தை தமிழில் கூட்டுப்பதிவா ஆரம்பிக்கலாம். இ-தமிழர்கள் முடிந்தவரை தமிழில் எழுதுவதையோ படிப்பதையோ தவிர்க்கிறார்கள். பண்ணிரண்டாம் வகுப்புக்குமேல் தமிழே பயன்படுத்தாத ஒரு 'படித்த' சமூகம் உருவாகிக்கொண்டிருக்கிறது. ஆனால் பெரும்பாலான இ-தமிழர்கள் தமிழ் திரைப்பட விமர்சனங்களை ஆங்கிலத்தில் படிக்கத்தான் செய்கிறார்கள். இங்கதான் நாம் வருகிறோம்!

அதாவது சற்றுமுன், மாற்று! மாதிரி ஒரு கூட்டுபதிவோ தளமோ ஆரம்பிக்க வேண்டியது. அங்கு தமிழில் வெளிவருகிற திரைப்படங்களின் பத்திரிக்கை விமர்சனங்களுக்கு இணைப்பு தருவது. ஒருங்குறியில் இந்த பதிவு இருந்தாலும் தமிழ் படிக்க சிரமப்படுபவர்களுக்கும் ஏதுவாக ஆங்கில வார்த்தைகளையும் தேவையான அளவு பயன்படுத்துவது. ம்... என்ன சொல்ல வருகிறேனென்றால், சாதாரணமாக தமிழ் படிக்க எத்தனிக்காத தமிழனை திரைப்பட ஆசைக்காட்டி இணைத்தமிழ் உலகுக்கு அழைத்துவரவேண்டும்!

ஒவ்வொரு திரைப்படத்துக்கும் இதுவெல்லாம் நம்ம பதிவில் இருக்கவேண்டும்.

1. திரைப்படத்தின் இணையதளத்துக்கான சுட்டி.
2. தமிழ் மற்றும் ஆங்கில விக்கிபீடியா, IMDB தளங்களிலுள்ள இந்த படத்தின் பக்கங்கள். த.வி.யில் இல்லையென்றால் சும்மா ஒரு குறுங்கட்டுரையாவது எழுதிப்போட்டுவிடவேண்டும்.
3. இந்த கூட்டு பதிவிற்கு பங்களிப்பவர்கள், ஆர்வமுள்ளவர்களின் சொந்த விமர்சனங்கள். ஆங்கிலத்தில்கூட இருக்கலாம்.
4. பத்திரிக்கைகளில் (இந்து, sify) வரும் விமர்சனங்களுக்கான இணைப்புகள்.
5. வலைப்பதிவுர்கள் எழுதும் விமர்சனங்களின் இணைப்புகள். கூகுளில் தேடியோ, ரீடரில் சேர்த்தோ இவற்றை பெறலாம்.

மாற்று! மாதிரி 'சிறுதுளி பெருவெள்ளம்' விதிமுறைதான் இதுக்கு சரிப்படும். இது மாதிரியான பதிவிற்கு பங்களிக்க எனது நன்பர்கள் சிலர் விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். நீங்களும் விரும்பினால் சொல்லுங்கள். சேர்த்து வைக்கிறேன்!

மேலும் வரும்...

3 comments:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

நல்ல யோசனை. நீங்க நிரோஜன் வழியா :)

ஏற்கனவே திரைப்பட விமர்சனக் கூட்டுப் பதிவு யோசனை சில பேர் சொல்லி இருக்காங்க. ஏற்கனவே வந்திருச்சான்னும் தெரில..ஆனா, இந்த யோசனை நல்லா போணி ஆகும் போல இருக்கு..பதிவா இல்லாம தளமா இருந்தா முழுமையா இருக்கும்.

ஏற்கனவே இருக்க tamil cinema wikiaல் செய்யலாம்னு நினைக்கிறேன். அனுமதி எல்லாம் கோராம அவங்கவங்க இணைப்பைச் சேர்த்துட்டுப் போறதுக்கு விக்கி தான் வசதி.

✪சிந்தாநதி said...

ஏற்கனவே தொடங்கி இருக்கிறோம். ஆனால் இன்னும் முழுமையான செயல்பாட்டுக்கு வரவில்லை.

http://talkietalks.blogspot.com/

✪சிந்தாநதி said...

முழுக்க தமிழுக்கென்றும் ஒன்று தொடங்கி (துண்டு போட்டு) வைத்தேன். இன்னமும் யாரையும் அழைக்கவில்லை

http://thiraiparvai.blogspot.com/