Wednesday, September 26, 2007

விடிவு காலம் பொறந்தாச்சு?!

திரைப்படங்களை திருட்டுத் தகடுகளில் பார்ப்பதில் பல சாதனைகள் புரிந்த அமெரிக்காவாழ் தமிழன் திருந்துவதற்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. அமெரிக்கர்களிடம் Netflix மற்றும் Blockbuster நிறுவனங்களின் கடிதசேவை (postஇல் தகடு வரும்) பிரபலமாகயிருக்கிறது. நானும் Netflix சந்தா வைத்திருக்கிறேன். அதில் தமிழ் படங்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது! நீங்கள் அமெரிக்காவிலிருந்தால் Netflix சந்தா வாங்கி தன்மானத்தோடு தமிழ் சினிமா பாருங்கள். திருட்டுத்தளங்களில் காசு கொடுத்துப் பார்க்கும் இழிநிலை இனி வேண்டாம்! Netflix உலகத்திரைப்படங்களைப் பார்ப்பதற்கு நல்ல வழி என்பது கூடுதல் சிறப்பு.

என்னுடைய தற்போதைய வழிமுறை:

1. உலக மற்றும் இந்திய திரைப்படங்கள்: Netflix.
2. வணிக நோக்கமுள்ள புதிய படங்கள் (தமிழ், ஆங்கிலம், உலகம்): திரையரங்கு.
3. பாடல்கள்: யூடூப்.

பி.கு: நீங்கள் Netflixஇல் படம் பார்த்தால் அதற்கு மதிப்பெண் வழங்கத் தவறாதீர்கள். மற்றவர்களுக்கு உபயோகமாயிருக்கும்.

Monday, September 24, 2007

ஓ போடு!!!!!!!!!!!

Saturday, September 15, 2007

மென்விடுதலை நாள் வாழ்த்துக்கள்!


அனைவருக்கும் எனது மென்விடுதலை நாள் வாழ்த்துக்கள்! நீங்கள் இதுவரை கட்டற்ற மற்றும் திறந்தநிலை மென்பொருட்களை தழுவாதிருந்தால் இன்றே தொடங்கிடுக!

சரி இந்நாளைக் கொண்டாட இதோ ஒரு நல்ல வழி! எடுபுண்டுவின் அங்கமான ஜிகாம்பிரிஸில் போய் விளையாடுங்க! உங்களுக்கு தெரிந்த குழந்தைகளுக்கும் அறிமுகப்படுத்துங்க! தமிழே பேச, எழுதத்தெரியாமல், கல்வி, விளையாட்டு, கேளிக்கை என்றாலே ஆங்கிலம் மூலம்தான் என்கிற இழிநிலை நம் தலைமுறையோடு போகட்டும். வருகிற தலைமுறையேனும் சிறப்பாக வளரட்டும்!

நன்றி: உபுண்டு தமிழ் மற்றும் சென்னை லி.ப.கு. மடலாடர் குழுக்கள்.

Thursday, September 13, 2007

ஸாஹித்யம்

எனது நன்பர் விஜய் சுட்டிக்காட்டிய ஸாஹித்யம் என்னும் கர்னாடக சங்கீத விக்கி அருமை. சிறிகாந்த் உருவாக்கியுள்ள இத்தளத்தில் வர்ணங்கள் மற்றும் கிரிதிகளுக்கு பல மொழிகளில் பாடல் வரிகளும் அர்த்தங்களும் கிடைக்கின்றன. இதற்காக அவர் தானே உருவாக்கிய transலிபி என்கிற கருவியை பயன்படுத்தியிருக்கிறார். பாராட்டுக்கள்!

Wednesday, September 12, 2007

வாழ்வா சாவா?


IUCN என்கிற 'உலக இயற்கை மற்றும் இயற்கை வளங்கள் பாதுகாப்புக் கூட்டமைப்பு' அழிந்துகொண்டிருக்கும் உயிரினங்களின் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. நீங்களும் நானும் செய்யும் அட்டுழியங்களால் புல்், பூண்டு, பூச்சிகளென உயிரினங்கள் முற்றிலுமாய் அழிந்துகொண்டிருக்கும் கொடுமையை என்னவென்று சொல்வது?

உயிர்வலி எண்ணிக்கையில்...

16,306 - IUCN கணக்கெடுப்பில் அழிந்துகொண்டிருப்பதாக அறியப்பட்ட உயிரினங்கள்.
7850 - விலங்கினங்கள்்.
8456 - பறவையினங்கள், மற்றவை.
12%-52% - பெரிய உயிரினங்களில் அழிந்துகொண்டிருப்பவைகளின் சதவீதம்.
8% - பறவையினங்கள். (8 இல் 1)
22% - பாலூட்டிகள். (4 இல் 1)
31% - நீர் மற்றும் நிலத்தில் வாழ்பவை - Amphibians (3 இல் 1)
43% - ஆமை வகைகள்.
28% - Conifers என்கிற மரங்கள்.
52% - Cycads என்கிற செடிகள்.


பட விளக்கம்: காசிக்குப் போய் பாவத்தை கழுவினார்களோ இல்லையோ கங்கையை அசுத்தப்படுத்தி, அதன் மூலம் கரியால் என்கிற முதலையினத்தையே அழித்து மேலும் பாவம் செய்தனர் எம் மக்கள்!

படம் நன்றி: G. & H. Denzau.