Monday, May 21, 2007

பாரீஸ், நான் உன்னைக் காதலிக்கிறேன்!


ஐயா, பிரஞ்சுக்காரர்களே உங்களுக்கு இரக்கமேயில்லையா? சினிமா என்றால் தமிழ் நாட்டில் எடுப்பதுபோல் படுமட்டமாக எடுக்கவேண்டும். அப்படியில்லாமல் நீங்கள் உங்களின் Paris, je t'aime போன்ற திரைப்படங்களின் மூலம் இயற்கைக்கும் அம்மாக்களுக்குமே உரித்தான அதிசிய படைப்புத்திறனை அபகரிக்கலாமா? உங்கள் படங்களைப் பார்த்துவிட்டு நான் எப்படி சிவாஜி போன்ற குப்பைகளுக்காக ஆவளுடன் காத்திருக்கமுடியும்?

சரி போனால் போகிறது, லைலா பேக்தி போன்ற ரதிகள் உங்கள் நாட்டில் நிஜமாகவே இருக்கிறார்களா? நான் கூகுள் சொல்வது போல் அட்லாண்டிக் சமுத்திரத்தை நீந்திக்கடந்து வந்தால், அவளைச் சந்திக்கமுடியுமா?

Friday, May 11, 2007

நந்திகிராம் பயங்கரம்

Thursday, May 10, 2007

பெரிய குட்டிச்சுவர்!

அனில் அம்பானியின் சபக் நிறுவனம் 'big adda' என்னும் 'சமூக உறவுகள்/தொடர்புகள்' தளத்தை (அதாவது கடலை போடுமிடம்!) ஆரம்பித்துள்ளது. 'adda' என்றால் குடில், கூடுமிடம் என்று பொருளாம். நம்ம ஊரில் குட்டிச்சுவர் என்போம். 'big' என்பது அம்பானியின் பன்பலை அலைவரிசைகளின் பெயரும்கூட. ஆர்கூட்டிலேயே பழியாய்க்கிடந்து கூகிளின் வருமானத்தை அதிகரித்துவரும் இந்தியர்கள் இனி அனில் அம்பானிக்கு சம்பாதித்துக் கொடுக்கலாம்.

இவர்கள் 'big flicks' என்னும் இணைய திரைப்படத்தளத்தையும் ஆரம்பிக்கப் போகிறார்களாம். இது நல்ல முயற்சிதான் என்றாலும் எவ்வளவு வெற்றிபெறுமென்று தெரியவில்லை. தமிழில் ஜி.வி. திரைப்பட நிறுவனம் ஆரம்பித்த திரைப்படத்தளம் வெற்றிபெற்றதாகத் தெரியவில்லை. வெட்கங்கெட்ட தமிழன் (நானும் தான்!) திருட்டுத்திரைப்படத் தளங்களில் காசு கொடுத்தும், டாரண்ட்சுகளிலும், நிரோஜன் சக்திவேல் உள்ளிட்டோரின் கூகிள் 'அன்பளிப்புகளிலும்' மஜா பண்ணிக் கொண்டிருக்கிறான்.

Wednesday, May 09, 2007

உயிர்க்களஞ்சியம்

இரண்டு அறக்கட்டளைகளின் முதலீட்டில் பல கல்வி நிறுவனங்கள் இணைந்து உயிர்க்களஞ்சியம் என்னும் திட்டத்தை அறிவித்துள்ளன. இக்களஞ்சியம் பூமியிலுள்ள அனைத்து உயிரினங்களையும் பற்றிய விவரங்களை தொகுத்து வழங்குவதாகும். இணையம் வழியாக அனைவருக்கும் இலவசமாக இந்த விவரங்கள் கிடைக்கும். இந்த முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்!

முதலில் ஆங்கிலத்தில் உருவாகவிருக்கும் இது பிற்காலத்தில் பிற மொழிகளிலும் கொண்டுவரப்படும். அதன் தமிழ் பதிப்பிற்கு நீங்களும் பங்களிப்பீர்கள் தானே?

Wednesday, May 02, 2007

வலை விடு தூது!

வலைப்பதிவு என்பது ஒருவரின் தனிப்பட்ட புலம்பல் என்பதுபோய் இப்போதெல்லாம் சில பதிவுகள் இந்தியாவின் தலைவிதியையே நிர்ணயிக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டன! நாரயண மூர்த்தி குடியரசுத் தலைவராக வருவதற்கு பெரிய வேட்டு வைத்தது சுர்முரி என்கிற கூட்டுப்பதிவுதான்!

எனக்கு தெரிந்த சில சமூகப்பொறுப்புள்ள பதிவுகளை கீழே தருகிறேன். இப்பதிவுகளில் சில பத்திரிக்கைகளாலும் சேரியமாய் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இவர்கள் தமக்கே உரிய தனித்தன்மையோடு செய்திகளையும் சில சமயம் பிரச்சாரங்களையும் வெளியிடுகிறார்கள்! நீங்கள் இதுபோன்ற பிற உருப்படியான பதிவுகளைப் படித்தால் எனக்குத் தெரியப்படுத்தவும்.

1. சுர்முரி.
2. தேச நலம்.
3. இந்தியா அண்கட்.
4. ஸ்பார்க்ஸ்.
5. சாஸ்வத்.
6. பத்ரி.
7. ரவி.
8. கிரிஷ்.