Tuesday, August 28, 2007

இத்தாலிய இம்சைகள்!

உலக சினிமா ரசிகர்களிடையே இத்தாலிய திரைப்படங்களுக்கு நல்ல பெயர் இருக்கிறது. அது ஏனென்று எனக்கு சற்றும் விளங்கவில்லை! சரி 1950-60 களில் அவர்கள் பல புகழ்பெற்ற படங்களை எடுத்திருக்கலாம். அதற்கென்ன இப்போ? அடுத்த 50 ஆண்டுகளில் அவர்கள் நல்ல படங்கள் எடுத்ததாகக் தெரியவில்லை.

நான் பார்த்த இத்தாலியப் படங்களில் The Bicycle Thief மட்டும்தான் நல்ல படமென்று நினைக்கிறேன். சமீபத்தில் 8 1/2 பார்த்தேன். சுத்த பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது! Fellini தான் பெரிய இயக்குனராக்கும் என்கிற இருமாப்பில் கண்டதையும் எடுத்து மக்களை பார்க்கவைத்திருக்கிறார்! Cinema Paradiso, Life is Beautiful எல்லாம் கூட நல்ல படங்களில்லை என்று கருதுகிறேன். சும்மா மூன்று மணி நேரத்துக்கு ரசிகர்களின் கழுத்தறுத்து நல்ல பெயர் வாங்கிவிட்டார்கள்!


நான் ஒரு நாட்டின் (மொழியின்) சினிமா தரத்தை மதிப்பிடுவதற்கு சமீபத்திய படங்களைப் பார்ப்பது வழக்கம். அதாவது 1980க்கு பின்னர் நல்ல படங்கள் எடுத்திருந்தால் பாராட்டலாம். அதற்கு முந்தைய படமாக இருந்தால் Casablanca மாதிரி காலத்தை விஞ்சிய படமாக இருக்கவேண்டும். அந்த வகையில் சமீபத்திய இத்தாலியப் படமான Catarina in the Big City பார்த்தேன். சுமார்தான். என்னுடைய கணிப்பின்படி பிரஞ்ச்சு, போலிஷ், ஜெர்மன், ஸ்பானிஷ் மற்றும் இரானிய மொழிப்படங்கள் தற்காலத்தில் சிறப்பாகயிருக்கின்றன.

மேலும், ஞாயிறன்று எனது 'தெய்வம்!' கெய்ஸ்லாவ்ஸ்கியின் No End என்கிற படத்தைப் பார்த்தேன். சுமாரான படம்தான். ஆனால் American Beautyயின் முதல் சில காட்சிகள் இதிலிருந்து தழுவப்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன். நேற்றிரவு El Bola என்கிற ஸ்பானியப் படம் பார்த்தேன். பார்க்கலாம்!

10 comments:

Voice on Wings said...

Life is Beautiful நல்ல படம்தானே? எனக்குப் பிடித்திருந்தது.

Balaji said...

ம்... நல்ல? ஆமாம். நல்ல படம்தான்! சிறந்த படமில்லை என்று சொல்லவந்தேன்!

ரவிசங்கர் said...

//குறிப்பு: தமிழ் வலைப்பதிவு உலகம் எவ்வளவு சீரழிந்துள்ளது என்பது உங்களூக்கே தெரியும். மற்றபடி நீங்கள் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தாவிட்டால் உங்கள் கருத்து நிச்சயம் அனுமதிக்கப்படும்.//

??!!!

நான் நல்ல படம் என்று நினைப்பதில்லை எல்லாம் சகட்டு மேனிக்குத் தூக்கிப் போட்டு விடுகிறீர்கள் :) உங்கள் பார்வையில் எது நல்ல படம், சிறந்த படம் என்று வரையறையாகவே தந்து விட்டால், நீங்கள் அப்படி சொல்லும் படங்களில் என்ன எதிர்ப்பார்த்து பார்க்கலாம் என்று புலப்பட்டு விடும்..

Balaji said...

ம்...மடக்கிட்டீங்களே!

திரைப்படங்கள் அவரவர் ரசனைக்கேற்ப 'சிறந்த', 'நல்ல' மற்றும் 'மட்டமான' படங்களாக இருக்கும் என்பது உண்மைதான். என்னை பொருத்தவரை இதுதான் formula...

மட்டமான படம் - பாரப்பவரை முட்டாள்கள் என்று பாவிக்கும் படங்கள் (சிவாஜி, Transformers), காப்பியடிக்கப்பட்டவை etc. பெரும்பாலான ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் படங்கள் இந்த வகையைச் சேர்ந்தவைதான்! தெலுங்கு படங்கள் 'Defective by design' வகையைச் சேர்ந்தவை!

நல்ல படம் - ரசிகர்களின் ஒருசிலருக்கேனும் பிடித்திருக்கும் வகையில் அமைபவை. முயற்சி இருக்கும் ஆனால் அதை செம்மையாக செய்யத் தெரியாமலிருக்கலாம். மக்களின் உணர்ச்சிகளை வெறுமணே தூண்டிவிட்டுபவை. சேரன் எடுக்கும் படங்கள், மொழி etc.

சிறந்த படம்: 100 நிமிடங்களுக்கு அருகாமையில் இருக்கவேண்டும். ரசிகர்களை மதிக்கவேண்டும். அவரின் காது, கண் மற்றும் சிந்தனை எல்லாவற்றிற்குமான படமாகயிருக்கவேண்டும்.

தமிழில் சமீபத்திய சில உதாரணங்கள்: குருதிப்புனல், கன்னத்தில்..., ஜென்டில்மேன், குணா, காக்க காக்க.


VoW,

Life is Beautiful மற்றும் Au revoir, les enfants இரண்டுமே ஒரு வகையில் குழந்தைகளின் பார்வையில் Genocideஐ சொல்லும் படங்கள்தான். இரண்டாவதில் ரசிகர்களை அழவைக்க பெரிய முயற்சி எதுவும் செய்யப்படவில்லை. (நான் அழுதேன் என்பது வேறு விசயம்!) மூன்று மணி நேரத்துக்கு படம் எடுப்பதெல்லாம் எதோ ஒரு சுவையில் (சோகம், வெறி) மக்களை மூழ்கடிக்கும் முயற்சிதான்!

ரவிசங்கர் said...

//தெலுங்கு படங்கள் 'Defective by design' வகையைச் சேர்ந்தவை!//

நெதர்லாந்து மகேஷ்பாபு ரசிகர்கள் சார்பா இதைக் கண்டிக்கிறேன் :). இப்படி பொத்தாம் பொதுவா தெலுங்குத் திரையுலகை குற்றம் சொல்லக்கூடாது. ரசிக்கத்தக்க படங்களைத் தெலுங்கிலும் பார்க்க முடியுது. அத்தடு, பொம்மரில்லு படங்களை எத்தனை முறை பார்த்தேன்னு கணக்கே இல்லை. இலக்கணம் எல்லாம் இல்லாம திரும்பத் திரும்ப ஏதோ காரணத்துக்காகப் பார்க்கத் தூண்டும் என் பார்வையில் நல்ல படங்களே.

சிறந்த படங்கள்னு கன்னத்தில் முத்தமிட்டால், ஜென்டில்மேனைச் சொல்லி இருக்கீங்க..இரண்டுமே என் பார்வையில் டுபாக்கூர் படங்கள். க.மு பற்றி ஈழத்தவரைக் கேட்டால் நல்லா சிரிப்பாங்க. ஜெண்டில்மேன், இந்தியன், முதல்வன் எல்லாம் நல்ல மசாலா படம். அவ்வளவு தான்.

100 நிமிடத்துக்குள்ள தான் படம் இருக்கணும்னு எப்படி எதிர்ப்பார்க்கலாம். எந்த கலை வடிவத்தையும் அதன் நீளம் நிர்ணயிக்காது..குறுநாவல் அளவுக்குக் கூட சிறுகதைகள் இல்லையா? harry potter கதை ஏழு பாகமாக வரவில்லையா? படங்கள் மட்டும் நீளம் குறைவா இருக்கணும்னு என்ன விதி?

ரவிசங்கர் said...

சொல்ல மறந்துட்டேன்..விகடன் ரொம்ப படிக்கிறீங்களோ? இடுகைத் தலைப்பு எல்லாம் அந்த styleஅ இருக்கு..இடுகையைச் சூடாக்க உதவும் :)

Anonymous said...

//குருதிப்புனல், கன்னத்தில்..., ஜென்டில்மேன், குணா,//
:-))))))))))))))))

Balaji said...

ஆஹா, சண்டை போடுகிற மூடில் இருக்கீங்க போல...

>> ரசிக்கத்தக்க படங்களைத் தெலுங்கிலும் பார்க்க முடியுது.

நானும் அதைத்தானே Defective by Design என்று சொன்னேன். ரசிகர்களுக்குத் தேவையானதை அவர்கள் கொடுகிறாரகள். Logic, Art என்பது பற்றி எல்லாம் அவர்களுக்கு சிறிதும் கவலையில்லை!

>> சிறந்த படங்கள்னு கன்னத்தில் முத்தமிட்டால், ஜென்டில்மேனைச் சொல்லி இருக்கீங்க..இரண்டுமே என் பார்வையில் டுபாக்கூர் படங்கள்.

ம்... இது தற்காலத்தில் சிறந்த தமிழ் படங்களுக்கான எனது பட்டியல். உலகத்தரத்துக்கும் இவற்றிற்கும் ரொம்ப தூரம்தான். ஜென்டில்மேன் மசாலா படமாக இருந்தாலும் கொஞ்சம் Intelligence இருந்ததென்றுதான் நினைக்கிறேன். இந்தியன் - நல்ல படம். முதல்வன் - மட்டமான படம்.

கன்னத்தில் முத்தமிட்டால் குறித்து ஈழத்தவர் ஏன் சிரிக்க வேண்டும்? முதலில் அது ஈழம் பற்றிய படமில்லை. ஈழத்தை பின்னனியாகக் கொண்ட தாய்மை, தத்தெடுப்பு உள்ளிட்ட பல சமுக விசயங்களை அலசுகிற படம். இத்தனை விசயங்களை ஒரே படத்தில் பேசிய படம் வேறெதுவும் நான் பார்த்ததில்லை. நடிப்பு, இசை, கலை, ஒளிப்பதிவு என்று எல்லாவற்றிலும் கலக்கவில்லையா?

மிகச்சிறந்த இயக்குனாராயிருந்தால் ஒழிய 100 நிமிடங்களுக்கு மேல் ரசிகனின் கவனத்தை ஈர்ப்பது கடினம் என்று நினைக்கிறேன். ஹாரி பாட்டர் நாவல்கள் தேவையில்லாமல் நீளமாக இருப்பதாக புகார் இருக்கத்தானே செய்கிறது? ஏழாவது புத்தகத்தில் பாதி பக்கங்கள் waste!

விகடன்? கற்றதும் பெற்றதும் முடிந்துவிட்டது. வெளிச்சம் கொஞ்சம் போரடிக்கிறது. இப்போதைக்கு மிஸ்டர் கழுகு மட்டும் படிக்கிறேன்!

Balaji said...

>> //குருதிப்புனல், கன்னத்தில்..., ஜென்டில்மேன், குணா,//
:-))))))))))))))))

ஆஹா இன்னிக்கு நான் காலிடா...

இது என்னுடை contemporary தமிழ் பட்டியல். உலக அளவில் என்றால் Bleu, The Return, Children of Heaven, Dekalog, Au Revoir, The Cuckoo Annie Hall, Casablanca etc.

ரவிசங்கர் said...

children of heaven எனக்கும் ரொம்ப பிடிச்ச படம்..தற்காலப் படங்கள்லயே கூட இன்னும் எவ்வளவோ நல்ல படங்கள் சொல்ல முடியும் பாலாஜி. அதைப் பார்த்தா க.மு, ஜென்டில்மேன் எல்லாம் கணக்குலயே வராது. சரி..நீங்க சொன்ன எடுத்துக்காட்டுக்களை விட்டுடுவோம். எப்படியோ, உங்கள் வரையறை புரிந்தது..