Thursday, August 02, 2007

கிருஷ்ணா நீ பேகனெ பாரோ...

1984 தில்லி கலவரத்துக்கு மன்மோகன் சிங் அழுது முக்காடு போட்டாகிவிட்டது. பாகல்பூர் கலவரம், மும்பை மற்றும் கோவை குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்கு காரணமான கயவர்கள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். குஜராத் கொலை வெறியர்கள் முழுமையாக தண்டிக்கப்பட வாய்ப்பில்லாவிட்டலும் எதாவது கொஞ்சமாவது நீதி கிடைக்க சிலர் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் 1993 மும்பை கலவரத்துக்கு காரணமானவர்களின் மீது ஒரு துரும்புகூடப் படவில்லை. நாட்டின் ஒன்றாம் நெம்பர் தருதலை பால் தாக்கரே தண்டிக்கப்படுவதற்கான முகாந்திரமேயில்லை. நீங்கள் இதுகுறித்து ஏதாவது செய்ய விரும்பினால் அமித் வர்மா சுட்டிக்காட்டிய இந்த வேண்டுகோளில் கையெழுத்திடலாம். குறிப்பு: இது தீஸ்தா செட்லாவத்தால் ஆரம்பிக்கப்பட்டது. அவரை உங்களுக்கு பிடிக்காதென்றால் நான் முன்னமே தெரிவிக்கவில்லை என்று என்னிடம் எகிரிப் பயனில்லை.

ம்... இவ்விசயத்தில் ஏதாவது நடக்கவாவது வாய்ப்பிருக்கிறது. ஆனால் மும்மை 7/11 கோர தாக்குதலுக்கு நீதி கிடைக்க வாய்ப்பேயில்லை. 7/11/06 அன்று நான் எழுதிய பதிவு இங்கே. அதற்கு காரணமானவர்கள் என்னவானார்களென்று யாராவது மன்மோகன் சிங்கிடம் கேட்டுச்சொன்னால் தேவலாம்.

No comments: