'திங்கள்தோறும் தமிழ்' என்று ஒரு இயக்கம் ஆரம்பிக்கலாம். 'இந்த வாரம்... தமிழ் வாரம்' என்று நீங்கள் வைத்துக்கொண்டாலும் எனக்கு பரவாயில்லை! இந்த இயக்கத்தில் என்ன பண்ணனும்னா மாதத்திற்கு ஒருமுறையேனும் இணைத்தமிழுக்கு உருப்படியா எதாவது செய்யனும். சும்மா ஒரு கும்மி பதிவு போடுவதையெல்லாம் கணக்கில் சேர்த்துக்கொள்ள முடியாது!
உருப்படியா என்றால்?
1. த.வி.யில் ஒரு கட்டுரையோ, சில குறுங்கட்டுரைகளோ எழுதலாம். என் ஊர், நான் படித்த பள்ளி, கல்லூரி, பார்த்த படம், இன்று தெரிந்துகொண்ட விசயம் மாதிரி கட்டுரைகள் எழுதுவது உத்தமம். விக்சனரி, விக்கி மூலம் போன்றவற்றிலும் பங்கெடுக்கலாம்.
2. மதுரை திட்டத்திலோ, லினக்ஸ் குழுமங்களிலோ தேவைப்படும் ஒரு பக்கத்தை தமிழாக்கம் செய்தோ, விசையடித்தோ கொடுக்கலாம்.
3. நன்பர் ஒருவரைப்பிடித்து (அவர் வேண்டாம், வேண்டாமென்று சொன்னாலும்) அவர் கணினியில் தமிழ் எழுத்துருக்கள் சரியாக இருக்கிறதா என்று உறுதி செய்து, அவருக்கு தமிழில் எழுதவும் சொல்லித்தரவேண்டும்.
4. இ-தமிழ் எழுதப்படிக்க தெரிந்த ஒருவரை வலைப்பதிவு தொடங்கவைத்தோ, த.வி, மாற்று!, உபுண்டு போன்ற தன்னார்வு குழுக்களுக்கு அழைத்துச்சென்றோ கையை நனைக்கவைக்கவேண்டும்!
5. சற்றுமுன், மாற்று!, கில்லி, வாழ்த்தலாம் வாங்க மாதிரி இணைந்து பணியாற்றலாம்.
6. மென்பொருள் வல்லுனராகயிருந்தால் லினக்ஸ் குழுமங்களில் போய் ஒரு வழுவை கலைந்துகொடுக்கலாம்.
7. முக்கியமா இதெல்லாம் செய்துவிட்டு அதுபற்றி பதிவெழுதலாம். என்னைக் கேட்டால் பொறாமைதான் ஒரு நல்ல உந்து சக்தி! மற்றவர் செய்வதைப் பார்த்துவிட்டு 'நாம் ஒன்றும் செய்யாமல் இருக்கிறோமே!' என்று யோசித்தால்தான் எதுவுமே நடக்கும்.
இதையெல்லாம் தினமுமே செய்யும் சில புண்ணியவான்கள் இருக்கிறார்கள். அவர்கள் இந்த இயக்கத்தைப் பார்த்து சிரிக்கக்கூடாது, சரியா?
மேலும் வரும்...
Thursday, August 09, 2007
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
தமிழிணையத்தை முன்னேற்றாம விட மாட்டேன்னு கொலை வெறியோடு இருக்கீங்க போல :)
6, 7 - மயூரன்
5 - மணியன்
1 - த.வியில் செல்வா, கோபி, கனக ஸ்ரீதரன், உமாபதி, சுந்தர், நற்கீரன், profvk, மயூரனாதன்..இன்னும் பேர்.
2, 3 - அமாச்சு.
உங்கள் பட்டியலில் இதை தினமும் செய்யும் சட்டென நினைவுக்கு வரும் புண்ணியவான்கள்..
நல்ல வழிகாட்டல்கள்! நன்றி
ரவி,
இந்த தன்னடக்கம் உங்களுக்கே ஓவரா தெரியல? எனக்கு முதலில் நினைவுக்குவருவது நீங்கதான்!
மத்தபடி இன்னும் நிறைய ஐடியா குடுக்கப்போறேன். நான் சோம்பேறியா இருந்தாலும் மத்தவங்களாவது செய்வாங்கயில்ல!
அட என்னங்க நீங்க,
நான் கஷ்டப்பட்டு ஒரு பதிவ தட்டச்சி வச்சிகிட்டு இருக்கேன் தமிழில் என்ன பண்ணலாம்னு நீங்க எல்லாத்தையும் போட்டுட்டீங்க. அப்படியே சுட்டியா குடுத்துடலாம் போல இருக்கே.. சரி.. நல்லத
யார் சொன்னா என்ன..
நல்ல பதிவு.. தொடர் எத்தனை நம்பர் வரும்? ;-)
\\ரவி,
இந்த தன்னடக்கம் உங்களுக்கே ஓவரா தெரியல? எனக்கு முதலில் \\
அதானே!!!
நல்ல முயற்சி,
நான் ஆரம்பகாலத்தில் இருந்தே பார்க்கும் எல்லாரிடமும் பிளாக் பத்தி பேசுவதால் என் தலையைப்பார்த்தாலே எகிறி ஓடும் கூட்டம் அதிகம் என்றே சொல்வேன்!
ஆனாலும் அதனால் சில நன்மையும் இருக்கிறது இதுவரை 6 பேர் பிளாக் ஆரம்பித்து இரண்டு பேர் மட்டும் தொடர்ந்து போட்டு வருகிறார்கள், ஆனால் அவர்களுக்கு ஏதோ தயக்கம் தமிழ்மணம் பக்கம் வர! அந்த இரண்டு பேரும் தலா இரண்டு ,மற்றும் 3 வலைப்பதிவு போட்டு விட்டார்கள்.
நான் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான சிண்ரோம், எல்லாரும் ஆரம்பத்தில் ஆர்வமாக ஓடி வருகிறார்கள் ஆனால் அந்த ஆரம்ப்ப கட்ட ஜோர் சீக்கிரமே போய் விடுகிறது. இரண்டு பேர் பிளாக்கர் கணக்கை மட்டும் துவங்கி விட்டு தூங்கி கொண்டு இருக்கிறார்கள்.ஆர்வத்தை நீடிக்க வைப்பதற்கும் ஏதேனும் வழி இருந்தால் சொல்லவும்!
இது நாள் வறைக்கும் நான் செய்வது சரியல்லவோ என நினைப்பதுண்டு,ஏன் எனில் என் பிளாக்கை முதலில் காட்டி படிக்க வைத்து விடுவேன், அப்புறம் தான் தமிழ்மணம் எல்லாம்(சுயநலம்) ஆனால் தனி நபர்களாக இப்படி தூண்டி விடுவதும் சரி தான் என நீங்கள் பதிவிட்டதில் எனக்கும் மகிழ்ச்சியே!
என் அனுபவத்திலிருந்து:
என்னிடம் அடிக்கடி சந்தேகம் எனக்கேட்பது ஆடியோ பிளாக் போடுவது , பாட்காஸ்டிங் செய்வது பற்றி தான்.
அதே போல் பெண்களே அதிக்ம் ஆர்வமாக கேட்டுக்கொள்கிறார்கள்.ஆண்கள் அலட்சியமாக எல்லாம் எனக்கு தெரியும் என்று போய் விடுகிறார்கள்.
இந்த குறிப்புகள் உங்களுக்கும் உதவலாம்!
எல்லாப் பிளாக்கரும் எப்படியும் ஒரு 4 பேருக்காவது தங்கள் பதிவினை காட்டி அதன் மூலம் பிளாக் மகாத்மியம் பரவத்தான் செய்து கொண்டு இருப்பார்கள்.வாய்மொழி பிரச்சாரமே எளிதில் சென்றடையும். அதனியே ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்வாக செய்வதும் சிறப்பாகத்தான் இருக்கும்!
>> இரண்டு பேர் பிளாக்கர் கணக்கை மட்டும் துவங்கி விட்டு தூங்கி கொண்டு இருக்கிறார்கள்.ஆர்வத்தை நீடிக்க வைப்பதற்கும் ஏதேனும் வழி இருந்தால் சொல்லவும்!
உடனடியாக அவர்களை மாற்று! பங்களிப்பாளராக சேர்த்து வைக்கவும்! கரும்பு திண்ணக்கூலியா?! நல்ல பதிவுகளைப் படிக்கலாம். பிடித்தைப் பகிரலாம். அப்புறம் பொறாமையில் தானே நிறைய எழுத ஆரம்பித்துவிடுவார்கள்!
>> ஆண்கள் அலட்சியமாக எல்லாம் எனக்கு தெரியும் என்று போய் விடுகிறார்கள்.
பிகருங்க முன்னாடி மானத்தை வாங்காதிங்க சார்! நம்ம ரகசியம் நமக்குள்ளயே இருக்கட்டும்.
பாலாஜி - :)
வவ்வால் - வலைப்பதிவு என்று ஒன்று இல்லாவிட்டாலும் ஏதோ ஒரு விதத்தில் தன் கருத்தை வெளிப்படுத்தும் ஆர்வம் உள்ளவர்களுக்குத் தான் வலைப்பதிவு சரி. மற்றபடி என்ன தான் அறிமுகப்படுத்தினாலும் வலைப்பதிவில் நிலைக்க மாட்டார்கள். அப்படி மல்லுக்கட்டி அறிமுகப்படுத்தும் அவசியமும் இல்லை.
சத்தியா நீங்க எழுதிக்கிட்டிருக்கிறதையும் பதிவில போடுங்க
Post a Comment