1. நான் விகடன் இணையதளத்தில் சந்தா செலுத்திப் படிக்கிறேன்.
2. சில வருடங்களுக்கு முன்பு ஒரு நன்பர் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவருக்கு அத்தளத்திற்கான எனது மின்னஞ்சல் பயணர் கணக்கையும் கடவுச்சொல்லையும் தெரிவித்திருந்தேன். (தப்புதான்! மன்னிச்சுடுங்க விகடன் தாத்தா!)
3. சில மாதங்களுக்கு முன்பு நான் விகடன் தளத்தில் ஒரு இ-புத்தகத்தை வாங்கியதாகவும் (?!!) அதை தரவிறக்கம் செய்ய இங்கே செல்லவும் என்று எனக்கு மின்னஞ்சல் வந்தது! அந்த நன்பர் எனது கணக்கை இன்னும் பயன்படுத்துகிறாரா என்றே தெரியாததால் அதை அப்படியே விட்டுவிட்டேன்.
4. நேற்று எனது கடவுச்சொல்லை நான் மறந்து (?!) அதை மாற்றக்கோரியதற்கு இணங்க புதிய கடவுச்சொல் இதுதான் என்று விகடனிடமிருந்து மின்னஞ்சல் வந்தது!
5. இன்று எனது மின்னஞ்சலின் கடவுச்சொல்லையே நான் மறந்துவிட்டதாகவும் (?!!), அதை மாற்றக் கோரியதற்கிணங்க, அதற்கான வழிமுறை இதுதான் என்று அந்நிறுவனத்திடமிருந்து வேறோரு முகவரிக்கு மின்னஞ்சல் வருகிறது!
"சும்மா தெருவில் போறவங்களையெல்லாம் பிடித்து இ-தமிழ் படிக்க வைக்கவேண்டும்"னு பதிவாடா போடுற? வேணும்டா உனக்கு!
"நான் விகடன் படிக்கிறேன்" என்று முன்னாடி எழுதிய பதிவைப் படித்த யாரோ ஒருத்தர்தான், இப்போ என் கடவுச்சொல்லை அடைய நினைக்கிறாரோ? நேரடியா கேளுங்கப்பு! நானே காசு கொடுத்து உங்களுக்கு சந்தா வாங்கித்தருகிறேன்.
Friday, August 10, 2007
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
இதுக்கெல்லாம் feel பண்ணலாமா? என் நண்பனின் விகடன் கடவுச்சொல் நூறு பேரிடமாவது இருந்திருக்கிம் :)
//நானே காசு கொடுத்து உங்களுக்கு சந்தா வாங்கித்தருகிறேன்.//
இப்படி ஒரு சேவை செய்ய உங்களுக்கு திட்டமிருந்தால் என்னைப்போன்ற ஏழை பாழைகள் மீது கருணை காட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன் :-))))))
எனக்கு கிடைக்கும்மா...?
>> நண்பனின் விகடன் கடவுச்சொல் நூறு பேரிடமாவது இருந்திருக்கிம் :)
விகடன் கடவுச்சொல் போனால் பரவாயில்லிங்க! இங்க என்னோட மின்னஞ்சல் கடவுச்சொல்லிற்கே இல்ல வேட்டு வைக்கப் பார்க்கிறாங்க!
அப்படியே எனக்கும் ஒண்ணு பார்சல்!
உங்கள் கடவு சொல் களவு போன சொல் ஆகிடுச்சே! :-))
Post a Comment