Sunday, August 12, 2007
இனி நான் நாத்திகனில்லை...
... கிரைஸ்டாஃப் கெய்ஸ்லாவ்ஸ்கி அவர்களை கடவுள் என்று ஒத்துக்கொள்கிறேன்! இப்போதுதான் 'வெரோனிகாவின் இரட்டை வாழ்க்கை' என்ற படத்தை பார்த்து முடித்தேன். இப்படியெல்லாம் படம் எடுக்கமுடிந்தவர் கடவுளாகத்தான் இருக்கவேண்டும்!
இது நான் பார்க்கும் அவருடைய 15ஆவது படமாகும். அத்தனையும் காலத்தால் அழியாத பொக்கிஷங்கள். மிச்சம் இருப்பவற்றையும் பார்க்காமல் விடுவதாகயில்லை. நீங்களும் பாருங்கள்! இது வரை நான் பார்த்திருப்பவை,
1. மூன்று நிறங்கள்: நீலம், வெள்ளை, சிவப்பு.
இந்திரா படத்தில் வரும் நாயகி சுவரில் கையை உராசும் காட்சியை சுஹாசினி நீலம் படத்திலிருந்துதான் எடுத்தார்.
2. Dekalog.
10 பாகங்கள். 1, 5 மற்றும் 7 அற்புதமானவை. இதில் இரண்டு பகுதிகள் முழு படமாக வந்தன. இது பற்றிய எனது ஆங்கில பதிவு இங்கே. Stanley Kubrick இந்த தொடர்தான் உலக திரைப்பட வரலாற்றின் ஒரே Master Piece என்று குறிப்பிட்டார்!
3. Blind Chance.
சமிபத்தில் மறைந்த இயக்குனர் ஜீவா, 12B கதையில் வரும் 'பேருந்தை நாயகன் பிடித்தால், பிடிக்காவிட்டால்' என்கிற நுட்பத்தை இங்கிருந்துதான் எடுத்திருந்தார். அவரை குறைசொல்லிப் பயனில்லை. Run Lola Run என்கிற புகழ்பெற்ற ஜெர்மானிய படத்திலும் இதே நுட்பத்தை கொஞ்சம் மாற்றி பயன்படுத்தியிருந்தார்கள்.
4. வெரோனிகாவின் இரட்டை வாழ்க்கை.
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
இதுபோன்றவற்றை திருட்டு என்று சொலவதைக் காட்டிலும் Inspiration என்று சொல்லலாமே?
நீங்கள் குறிப்பிடும் படத்தைக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் பார்த்ததில்லை. பார்க்கத் தூண்டுகிறீர்கள்.
ஜீவா சொன்னது போல இன்ஸ்பிரேஷன் சரி. அதாவது இயக்குனராக ஜீவா செய்தது. காட்சியைக் காப்பியடித்திருப்பது இன்ஸ்பிரேஷன் அல்ல. அதாவது நீங்கள் சொல்லியிருப்பது போல சுஹாசினி செய்திருப்பது.
காப்பி என்றாலும் தவறேதும் இல்லை என்பேன் நான்....
ஏனென்றால் இவையெல்லாம் சதாரண மக்களுக்கு கிடைப்பதற்கு இது ஒன்றே வழி. Of course. நிலைமை மாறிக்கொண்டு இருக்கிறது. அன்னிய மொழி திரைப்படங்கள் தமிழில் மொழிமாற்றத்துடன் வந்து கொண்டு இருக்கின்றன. இருப்பினும் my 2 cents for them!
ம்... திருட்டு என்பது கொஞ்சம் காட்டமாகத்தான் தெரிகிறது. மாற்றியிருக்கிறேன்.
தமிழ் இயக்குனர்கள் பாலிவுட் அளவுக்கு முழுப்படத்தையும் காப்பியடிப்பதில்லை என்பது ஆறுதல். ஆனால் இயக்குனர் ஜீவா முதல் படத்திலேயே பெரிய வித்தியாசத்தை செய்துகாட்டியதாகப் பத்திரிக்கைகள் பாராட்டிக் கொண்டிருந்தபோது, இந்த தழுவலை அவர் ஒப்புக்கொண்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
கி.கே படங்களை பார்க்கவேண்டுமானால் நீலம் மற்றும் Dekalog-லிருந்து ஆரம்பிக்கலாம்.
ya i havt to watch that movies
Post a Comment