Tuesday, August 07, 2007

அடுத்தது என்ன? பட்டறைகள்

தமிழ் வலைப்பதிவர் பட்டறைக்குப்பிறகு என்ன? என்று சில பதிவுகளில் படித்தேன். எதோ நம்மாலான உதவாக்கரை யோசனைகளை கொடுக்கலாமே...

BlogCamp - தமிழ் வலைப்பதிவர் பட்டறை.
BarCamp - ?
WikiCamp - ?

தமிழ் வலைப்பதிவர் பட்டறை ஆண்டு தோறும் நடத்தலாம். மாதத்துக்கு இரண்டு தடவை நடத்துவது இதை சாகடிக்க நல்ல வழி! பாரதியார், பாரதிதாசன் போன்ற பிற பல்கலைக்கழகங்களில் போய் நடத்தலாம்.

BarCamp போன்று தமிழ் மென்பொருள் பட்டறை ஒன்று ஆரம்பிக்கலாம். சும்மா லினக்ஸ் பிரசார நெடியடிக்காமல் தமிழ் தெரிந்த மென்பொருளாளர்களை Unconference-க்கு அழைத்து தமிழ் மென்பொருள் வளர்ச்சி குறித்து அரட்டையடிக்கலாம். தமிழர்களைவிடவும் கணினி அறிவுள்ள இளைஞர்கள் (எண்ணிக்கையில்) வேறு எங்கு இருக்கப்போகிறார்கள்! அவர்களை எல்லாம் தமிழ் மென்பொருள் வளர்ச்சிப்பணிக்கு அழைத்துவரவேண்டும்.

விக்கிகேம்ப் நடத்துமளவுக்கு தமிழ் விக்கிபீடியாவோ இன்னபிற மென்பொருள் விக்கிகளோ தமிழ்நாட்டில் பரிச்சயமடைந்துவிடவில்லை என்று நினைக்கிறேன். தமிழ்நாட்டிலிருந்து பலபேர் பங்களிக்க வரும்வரை இணையத்திலேயெ நடத்திக்கொள்ள வேண்டியதுதான்.

மேலும் வரும்...

2 comments:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

//தமிழ் வலைப்பதிவர் பட்டறை ஆண்டு தோறும் நடத்தலாம். மாதத்துக்கு இரண்டு தடவை நடத்துவது இதை சாகடிக்க நல்ல வழி! //

+1

ஆனால், வலைப்பதிவர்கள் நடத்தும் இணையம், கணினிக்கான தமிழ் வழி விளக்கப்பட்டறை என்று ஊருக்கு ஒன்றாக நிறைய அடிக்கடி நடக்க வேண்டும் என்று தான் தோன்கிறது. லினக்சு குறித்து பொறியியல் கல்லூரிகளில் அமைதியாக நடக்கும் பட்டறைகள் போல் தமிழை அதிகம் பயன்படுத்தும், தமிழை மட்டுமே அதிகம் அறிந்திருக்கும் தமிழ்க்கல்லூரி மாணவர்கள் போன்றவர்களுக்கு உதவ முன்னெடுக்கலாம்.

barcamp - தமிழா! குழு நினைத்தால் வலைப்பதிவர் சந்திப்பு போல் (பட்டறை அல்ல) சின்ன அளவில் ஒருங்கிணைக்க முடியும். இது தேவையும் கூட. VoW, தகடூர் கோபி, முகுந்த் போன்றவர்கள் மூவர் மட்டுமே சந்திப்பு வைத்தாலும் கூட நிறைய விசயங்களை முன்னெடுக்க முடியும் :) கேட்டுக் கொண்டே இருக்கிறேன். சீக்கிரம் நடக்கும் என்று பார்ப்போம்.

wikicamp - 2010ல் சாத்தியமாகலாம். அல்லது, தேவைப்படலாம்.

Balaji Chitra Ganesan said...

தமிழ் BarCamp நடத்தினா தமிழா! இல்லாமலா?! நிச்சயம் அவங்க இருப்பாங்க. ஆனா இதை பெரிய அளவில் நடத்தனும்னுதான் நினைக்கிறேன். BarCamp Chennai நடத்தினவங்களையும் இதில் கொண்டுவரணும்.

Software Engineer/Programmer ஆ இருக்கிற எல்லா தமிழர்களுக்கும் தமிழ் மென்பொருளை அறிமுகப்படுத்தனும். அதனால எண்ணிக்கையும் முக்கியம்னு நினைக்கிறேன்.