விகடன் குழுமம் ஆரம்பித்திருக்கும் 'பசுமை விகடன்' பத்திரிக்கை மிகவும் வரவேற்கத்தகுந்த முயற்சியாகும். விவசாயத்திற்கும் எனக்கும் மிகவும் தூரமென்றாலும் விரும்பிப்படிக்கிறேன். சுற்றுலா, விவசாய வரலாறு மற்றும் துணுக்குகள் பகுதிகள் எல்லோரும் ரசிக்கும்படி இருக்கின்றன.
"சினிமாக்காரி படம் போட்டு ஆனந்த விகடன் குட்டிச்சுவராப் போச்சு!" என்று என் பாட்டி அங்கலாய்த்தாலும் விகடனை வாரம் தவறாமல் படிக்கிறேன். சில காலமாக வரும் 'வெளிச்சம்: உலக சினிமா' பகுதி சிறப்பாகவுள்ளது. நேரமிருந்தால் நான் சமீபத்தில் ரசித்த பின்வரும் படங்களை நீங்களும் பாருங்களேன்!
1. சில்ரன் ஆப் ஹெவன்.
2. தி ரிடர்ன்.
3. தி குக்கூ.
4. மூன்று நிறங்கள்: நீலம்.
Tuesday, February 13, 2007
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
பாலாஜி, உலகத்துப் பதிவு எல்லாம் திரட்டி GRல படிச்சுட்டு உங்க பதிவ படிக்காட்டி எப்படி? vplay செய்திக்குப் பிறகு, உங்க பதிவ என் subscription listல போட்டேன். பசுமை விகடன இன்னும் புரட்டல..முன்ன மதன் பதில்கள் வழக்கமா படிப்பேன்..இப்ப அதயும் விட்டாச்சு. சினிமா விமர்சனம், உலக சினிமா - இது இரண்டோட சரி..
children of heaven என் லேப்டாப் theatreல 100வது நாளை நோக்கி வெற்றிகரமா ஓடுது..போற வாரவன் யாரு வந்தாலும் பிடிச்சு அத போட்டுக் காட்டாம விடுறது இல்ல..ஆங்கில உரைத்துணையும் புரியாத பாரசீகமும் புரியாத எங்க ஊர் கிராமத்துப் பிள்ளைகளுக்கு கூட அலி, சாராவின் கதை பிடித்தது. அது..அது..சினிமா :)
Post a Comment