Friday, November 09, 2007

படிப்பும் இனிக்கும்!

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

பேச்சுத்தமிழ் செத்துவருவது பற்றி ஏற்கனவே புலம்பியாகிவிட்டது. இப்போது முதலுக்கே மோசம் என்றபடி, பள்ளி மாணவர்களுக்கே தமிழில் எழுதப்படிக்கத் தெரியவில்லையாம்! கோவை மாவட்டப் பள்ளிகளில் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரியவந்திருக்கிறது. இந்து பத்திரிக்கை செய்தி இங்கே.

நல்ல வேலையாக இந்த விவரங்கள் அதே பிரச்சனையை எதிர்கொள்ள தொடங்கப்பட்ட ஒரு தன்னார்வுத் திட்டத்தில்தான் தெரியவந்திருக்கிறது. Aid India அமைப்பு அரசு உதவியுடன் ஆரம்பித்திருக்கும் 'படிப்பும் இனிக்கும்' என்னும் குழந்தைகளுக்கு படிப்பை மகிழ்ச்சியான ஒரு அனுபவமாக மாற்றும் திட்டத்தில்தான் மேற்படி விசயம் தெரியவந்திருக்கிறது. இந்த திட்டம் வெற்றிபெறவும், தமிழகம் முழுவதும் இது விரிவடைந்து தமிழையும் குழந்தைகளையும் காப்பற்றவும் எனது வாழ்த்துக்கள்!

படிப்பை இலகுவாக்கும் ஜிகாம்பிரிஸ் முயற்சி பற்றிய என்னுடைய முந்தைய பதிவு இங்கே!

5 comments:

ரவிசங்கர் said...

தமிழ் வாசிப்பை வளர்க்க ஒரு தன்னார்வ நிறுவனம் செயல்படுவது மகிழ்ச்சி. தன்னார்வ நிறுவனங்கள் பலவும் கல்வியை வளர்க்கிறேன் பேர்வழி என்று குப்பத்தில் உள்ளவர்களைப் பிடித்து ஆங்கிலம் இல்லா விட்டால் உலகமே அசையாது என்ற மாயையும் தாழ்வு மனப்பான்மையையும் விதைக்கும் வண்ணம் அரைகுறை ஆங்கிலத்தையே முதன்மையாகக் கற்றுத் தர முனைவது எனக்குப் பிடிக்காத ஒன்று.

--

அப்புறம், இந்த ஆண்டு முதல் தமிழ்நாட்டுத் தொடக்கப்பள்ளிகளில் "செயல்வழிக் கற்றல்" எப்படிங்கிற புதிய கற்பித்தல் முறை கொண்டு வந்திருக்காங்கன்னு படிச்சேன்..அது நல்ல பயன் தரும்னு நினைக்கிறேன்..

துளசி கோபால் said...

என் தமிழே கொஞ்சம் பரவாயில்லை என்பதுபோல இருக்கு, இப்பத்து மக்கள்ஸ் பேசறதைக் கேட்டால்.

இது என்னப்பா தமிழுக்கு வந்த சோதனை(-:

இன்னொண்ணு சொல்லிக்கவா?

//படிப்பை இளகுவாக்கும் //

படிப்பை இலகுவாக்கும்

Balaji said...

ஊப்ஸ்... சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

cheena (சீனா) said...

தமிழர்களாகிய நாம்தான் தமிங்கிலம் பேசுகிறோம். தமிழனைத் தவிர அனைத்து இந்திய மொழியினரும் ஆங்கிலம் கலக்காத தாய் மொழியில் தான் பேசுகிறார்கள். நாம் கொஞ்சம் கொஞ்சமாக மாற வேண்டும். சில சொற்களுக்கு பேசும் போதோ எழுதும்போதோ - சரியான தமிழ்ச் சொல் (பேச்சுத் தமிழ்ச் சொல்லே கூட)எதுவென சிந்திக்கும் நிலையில் தான் நாம் இருக்கிறோம்.

ரவிசங்கர் said...

//தமிழனைத் தவிர அனைத்து இந்திய மொழியினரும் ஆங்கிலம் கலக்காத தாய் மொழியில் தான் பேசுகிறார்கள்.//

சீனு - எனக்குத் தெரிந்து இந்தி, தெலுங்கு காரர்கள் நம்மை விட அதிகம் கலந்து பேசுகிறார்கள். நாம் கலந்து பேசினாலும், பெரும்பாலும் தனித்தமிழ்ச் சொல் என்ன என்று அறிந்து இருப்போம். உரைத் தமிழ் போன்றவற்றில் இயன்ற அளவு தமிழில் எழுத இயலும். ஆனால், அவர்களுக்கு அது கூட இயலுமா என்று தெரியவில்லை. மலையாளத்தில் ஒரு வேளை ஆங்கிலம் குறைவாக இருக்கலாம். ஆனால், அதில் ஏகத்துக்கும் சமசுகிருதக் கலப்பிருப்பதாகச் சில தொல் மலையாளிகள் புலம்புவதைக் கேட்டிருக்கிறேன்..