Monday, October 01, 2007

மெல்ல இனி எல்லாம் சாகும்...

வேடிக்கையாக இருக்கிறது. உலகில் இன்று பேசப்படும் 7000 மொழிகளில் பாதி இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் காணாமல் போய்விடுமாம்! ஆறு பேர் பேசும் மொழிகளைக்கூடக் காப்பாற்ற ஒரு கூட்டம் அலைந்து கொண்டிருக்கிறதாம். இன்னொரு கூட்டம் இதைப் பற்றியெல்லாம் இங்கு அரட்டையடித்துக் கொண்டிருக்கிறதாம்.

ஹாஹா! ஆறு கோடி பேர் பேசும் தமிழே சாகப்போகிறது. தமிழானாகிய நான் (!!!!?) பேசும் தமிழில் சுமார் 80 சதவீதம் வார்த்தைகள் தமிழே கிடையாது. இந்த அழகில் மொழிகளைக் காப்பாற்றுவதாவது வெங்காயமாவது. போங்கடா, போய் (ஆங்கிலத்தில்) வேலையைப் பாருங்கடா...

6 comments:

ரவிசங்கர் said...

ஏன் இந்த விரக்தி பாலாஜி :) மெல்லத் தமிழினி நல்லாவே வாழும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு..வாழாட்டி வாழ வைப்போம் :)

Balaji said...

விரக்தியெல்லாம் இல்லை. சும்மாதான் அடித்துவிட்டேன்! ஆனாலும் நான் பேசும் 'தமிழ்' குறித்து எனக்கே பயமாகயிருப்பது உண்மைதான்!! எங்க அப்பா அம்மா கூடவே நான் ஆங்கிலம் கலந்த தமிழில்தான் பேசுகிறேன்.

பொதுவாவே பேச்சுத்தமிழ் கொஞ்சம் செத்துக் கொண்டுதான் இருக்குதுன்னு நினைக்கிறேன்.

ரவிசங்கர் said...

போன நூற்றாண்டில் தனித்தமிழ் இயக்கம் வந்த பிறகு ஊடகத் தமிழ், பேச்சுத் தமிழ்ல வேறுபாடு வந்த மாதிரி இந்த நூற்றாண்டில் ஆங்கிலம் கலக்கா தமிழுக்கு ஒரு இயக்கம் வைக்கணும் போல இருக்கு..ம்ம்..

ரவிசங்கர் said...

இன்னிக்கு உறவுக்காரங்க ஒருத்தங்க கூட 20 நிமிடம் பேசும்போது வேண்டும் என்றே கவனிச்சுப் பார்த்தேன்..99% தமிழ்ச் சொற்கள்..தட்டுத்தடுமாறாம பேசுறாங்க..எப்படின்னு கேக்குறீங்களா :) அவங்க தொ.கா பார்க்குறதில்லை..பண்பலை வானொலி கேட்பதில்லை..பள்ளிக்கூடத்தில் படித்ததில்லை என்பதால் எந்த வாசிப்பும் கிடையாது..அவங்க உலகம், சிந்தனை முழுக்க இயல்பாவே தமிழ்ல தான் இருக்கு...எங்கள் ஊர் வயலில் வேலைக்கு வர்ற பாமர மக்கள் தமிழ் இன்னும் அருமை..இதுக்கு என்னடா தமிழ்லன்னு நான் 5 நிமிசம் யோசிச்சு நினைவுபடுத்துற சொற்களை அசராம பேசுவாங்க..ஆக, படிக்காதவங்க கிட்ட தான் தமிழ்ச் சிந்தனை இருக்கா :(

நான் நினைக்கிறேன்.. நாம சும்மா நம்ம பேச்சில தமிங்கிலம் இருக்கேன்னு புலம்புவதை விடுத்து நல்ல தமிழில் பேசணுங்கிறதை ஒரு உறுதியாவே எடுத்துக்கணும்னு..ஆங்கிலம் பேசும்போது தமிழ் கலக்குறமா..ஒவ்வொரு சொல்லும் ஆங்கிலத்துல தான பேசுறோம்..அது போல் தமிழுக்கும் உறுதி எடுக்கலாம்..நவீனத் தமிழ்க் கலைச்சொற்களைப் போட்டு எதிராளியை பயமுறுத்தாவிட்டாலும் பல நூற்றாண்டுகளாய் பேச்சுத்தமிழில் இருக்கிற எளிய சொற்களையாவது பயன்படுத்தப் பழக வேண்டும்..

சிவபாலன் said...

பாலாஜி,

//பொதுவாவே பேச்சுத்தமிழ் கொஞ்சம் செத்துக் கொண்டுதான் இருக்குதுன்னு //

உங்கள் கருத்து ஏற்புடையதே.

தினகரனில் கூட இந்த நூற்றண்டுக்குள் தமிழ் அழியும் அபாயம் உள்ளதாக ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தனர்.

ஹிந்தியும் பெங்காளியும் தவிர அனைத்து மொழிகளும் அழிந்துவிடும் என்கிறது அந்த கட்டுரை.

இதை ஒரு எச்சரிக்கையாக எடுத்து அனைவரும் செயல்படவேண்டிய நேரமிது.

Balaji said...

ரவி,

>> சிந்தனை முழுக்க இயல்பாவே தமிழ்ல

நான் பல சமயம் ஆங்கிலத்திலேயே யோசிப்பவன் என்னும் அசிங்கத்தை இங்கே ஒப்புக்கொள்ள வேண்டியதுதான்!

பேச்சுத்தமிழ் குறித்து நண்பர்களுடன் பேசியதில் புரிந்தது.
1. நாம் விவாதிக்கும் விசயம் குறித்து தமிழில் படிக்காததால், படிக்கக் கிடைக்காததால் ஆங்கிலப் பதங்களை பயன்படுத்துவது புரிதலை அதிகமாக்குகிறது.
2. தமிழ் வாக்கியங்கள் கொஞ்சம் நீளமாக இருப்பது. நீங்களே இதுபற்றி 'பண்ணித்தமிழ்'ன்னு எழுதியிருந்தீங்க.

சிவபாலன்,

பெங்காளியுமா தப்பித்தது? ஆச்சரியமாகயிருக்கிறது. வங்காளத்தில் ஆங்கில வழித் தொடக்கக் கல்வி சமீபத்தில்தான் ஆரம்பித்தென்று நினைக்கிறேன். அதுவும் ஒரு காரணமாயிருக்கலாம்.