ஆமாம். பானை ஒறி! 'கயிற்றில் தொங்கும் பானை' என்று பொருள்தரும் இந்த வார்த்தைகள் எழுதிய பானைத் துகடு ஒன்று கிடைத்திருக்கிறது. அதுவும் எகிப்து நாட்டின் குசேர்-அல்-காதிம் என்ற இடத்தில் கிடைத்திருக்கிறது. இது கி.மு. முதலாம் நூற்றாண்டில் செய்யப்பட்டிருக்கலாம் என்கிறார்கள்.
அதற்கென்ன இப்ப என்கிறீர்களா? இதுக்கு முன்னாடி இதே இடத்தில் கிடைத்த பானை 200 வருடம் பிந்தையது. பண்டைய காலத்தில் இந்தியாவுக்கும் உரோம சாம்ராஜ்யத்துக்கும் இருந்த வியாபார உறவுகளைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள இந்தக் கண்டுபிடிப்பு உதவப்போகிறது.
அதைவிட முக்கியமா தமிழ் பிராமி எழுத்து பற்றிய ஆராய்ச்சிக்கும் இது உதவும். இந்தியாவில் தமிழ்-பிராமி எழுத்து கி.மு. 500 வாக்கிலிருந்து கிடைத்திருக்கிறது. தமிழ் பிராமி எழுத்து, ஏன் பிராக்ரிதம் எழுதப்பட்ட அசோக பிராமி எழுத்தே இந்து சமவெளி (ஹரப்பா) எழுத்திலிருந்து வந்ததென்று ஐராவதம் மகாதேவன் உள்ளிட்ட சில ஆய்வாளர்கள் சொல்லிவருகிறார்கள். மத்தவங்க பிராமி அராமியாகிலிருந்து வந்ததுன்னு சொல்றாங்க. என்ன ஆகுதுன்னு பார்க்கனும்!
இந்து சமவெளி எழுத்துக்களை இன்னும் ஆய்வாளர்களால் படிக்கமுடியவில்லை என்பது இன்னொரு சங்கதி. ஐராவதம் மகாதேவன் அந்த எழுத்துக்கள் அரபு மொழி போல வலமிருந்து இடமாக எழுதப்பட்டதாகச் சொல்கிறார்! மேலும் அவர் ஆராய்ச்சிப்படி தொல்காப்பியம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்பு எழுதப்பட்டிருக்க வாய்ப்பில்லை!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment