Monday, November 05, 2007

சூரியன் இன்னும் மிளிர்கிறது!

நிழலாக...

என்னை மிகவும் பாதித்த Sophie Scholl - Die letzten Tage என்னும் ஜெர்மானிய படத்தைப் பற்றி விலாவரியாக எழுதவேண்டும் என்று நினைத்திருந்தேன். பல வாரங்கள் உருண்டோடிவிட்டன. நாசிக்களை எதிர்த்து நின்ற ஒரு 21 வயது மாணவி சோபி ஸ்கோலின் உண்மைக்கதை. அவளும், அவளது சகோதரனின் நண்பர்களும் செய்த தியாகங்கள், என்னைப் போல் தினந்தோறும் திண்றுவிட்டுத் தூங்கிக்கொண்டிரும் உருப்படாத கேஸ்களுக்கு நல்ல பாடம்.

நிஜமாக...

அநியாயத்தை எதிர்த்துப் போராடாவிட்டால் நாம் மனிதராய்ப் பிறந்ததில் அர்த்தமேயில்லை என்பதை சோபி பொட்டில் அடித்தார்போல் சொல்கிறாள். இத்தனைக்கும் அவளும் அவளது நண்பர்களும் ஜெர்மானிய கிறிஸ்தவர்கள்தான். தனக்காக அன்றி பிறர்காக, இவ்வயகத்திற்காகப் போராடும் குணம் எல்லோர்க்கும் வாய்ப்பதில்லை. தான் தூக்கிலிடப்படுவதற்கு (இல்லை Guillotine) முன்னால் சோபி கடைசியாகச் சொன்னது - "சூரியன் இன்னும் மிளிர்கிறது!" (The Sun still shines!)

பி.கு: இப்படத்தின் நாயகி ஜூலியா ஜென்ட்ச் நடித்த The Edukators என்ற மற்றொரு ஜெர்மானிய படமும் பார்க்கவேண்டியதுதான்.

No comments: