
மசாலான்னா இது மசாலா! கன்ட்ரோல் (Kontroll) என்ற ஹங்கேரியப் படம் பார்த்தேன். படம் முழுக்க புடபெஸ்ட் மெட்ரோவில் நடக்கிறது. அதாவது முழுக்கத் தரைக்கடியில். படம் துவங்கும்போது புடபெஸ்ட் இரயில்வே நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர், இந்தப் படத்தில் காட்டப்படுவதுபோல் இங்கு ஒன்றும் நடப்பதில்லை என்று சொல்வதே ஹைக்கூ!
பயணச்சீட்டு சோதனையாளரான நமது நாயகன் Bulcsu, அவனது கிராதக சக ஊழியர்கள், அமீர்கான்-அர்ஜுன் மாதிரியான ரயிலுடன் ஓடும் சாகஸம், அழகான கரடியாக வரும் நாயகி!, நகைச்சுவை, ரயிலுக்கடியில் சிதறும் 'குதிப்போர்கள்', ஒரு முகமூடி அணிந்த மர்ம மனிதன் (இல்லை 'அது') என்ற இந்த காக்டெயில் கதை, ஹங்கேரியில் பெரும் வெற்றிபெற்றதில் வியப்பில்லை.
Nimrod Antal இன் படம். மசாலாக் கதையில் பல வாழ்வியல் உண்மைகள் பொதிந்துள்ளதாக விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்! பார்க்கலாம்!
No comments:
Post a Comment