சொன்னால் நம்பமாட்டீர்கள். நேற்றிரவு விகடனில் இராசையா இளந்திரையனின் பேட்டி படித்தேன். பின்னர் அதுபற்றி மனதில் அசைபோட்டுக் கொண்டிருந்தபோது ஒரு பெயர் நினைவுக்கு வராமல் கொஞ்சம் மூலையைக் கசக்கிக்னேன். ஒரு கூகுள் தேடலில் கிடைத்திருக்கும். தூங்கிவிட்டேன்.
காலையில் எழுந்தவுடன் (இல்லை படுத்துக்கொண்டே) நான் செய்வது இணையத்தில் செய்தி படிப்பதுதான். முதல் செய்தியாக அதே பெயர். தமிழ்ச்செல்வன். மரணமடைந்திருந்தார்.
தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய தாக்குதல். பிரபாகரன் கொல்லப்பட்டு தமிழ்ச்செல்வன் புலிகளின் தலைவராவதுதான் அமைதிக்கான நிரந்தர வழியாகயிருந்திருக்கும். அனுராதபுரம் தாக்குதலுக்குப் பழிவாங்க எளிதான ஒரு இலக்கை இலங்கை இராணுவம் அடித்துவிட்டதாகத் தெரிகிறது. ஈழம் இனி எங்கு செல்லுமென்று வருத்தமாயிருக்கிறது. அந்தப் புன்னகை மறைந்திருக்கத் தேவைவில்லை.
Saturday, November 03, 2007
Subscribe to:
Post Comments (Atom)
20 comments:
//பிரபாகரன் கொல்லப்பட்டு தமிழ்ச்செல்வன் புலிகளின் தலைவராவதுதான் அமைதிக்கான நிரந்தர வழியாகயிருந்திருக்கும்.//
!!!??? தவறான புரிதல். தலைமையா பிரச்சினை?
புலிகளே இல்லாத காலத்திலும் அமைதியும் சமத்துவமும் இலங்கையில் இருந்ததா என்ன?
தலைமைதான் பிரச்சனை என்று நினைக்கிறேன். பத்மநாபா, நீலன் திருச்செல்வன், கதிர்காமர் இவர்கலெல்லாம் தமிழர்களுக்காதத்தானே உழைத்தார்கள்? பிரபாகரன் என்கிற சர்வாதிகாரியை ஈழத்தின் அதிபதியாக்க யாரும் தயாராகயில்லை.
2-3 ஆயிரம் ஆண்டுகள் அடித்துக்கொண்டிருந்தவர்கள் திடீரென கட்டித்தழுவிக்கொள்வார்களா என்ன? 1972 இல் இலங்கை குடியரசான பின்பு என்ன ஆனது என்பதுதான் முக்கியம். 1984க்கு தக்க பதிலடி தந்தாகிவிட்டது. இப்போது சிங்களவரும், தமிழரும் பேசி, ஒன்றாகி இலங்கைக்காக உழைக்கும் நேரம் வந்துவிட்டது. ஈழம் என்னும் கனவு நிறைவேறப் போவதில்லை. நிறைவேறவும் தேவையில்லை.
//பத்மநாபா, நீலன் திருச்செல்வன், கதிர்காமர் இவர்கலெல்லாம் தமிழர்களுக்காதத்தானே உழைத்தார்கள்?//
நல்ல கண்டுபிடிப்பு. டக்ளஸ் தேவானந்தா, ஆனந்தசங்கரி, கருணா, இபோழுது பிள்ளையான் இவர்களும் தமிழர்களுக்காகத்தான் உழைக்கிறார்கள். பிரபாகரன் இல்லையேல் புலிகள் இயக்கமே இல்லை. தலைவருக்கு எதுவும் நடந்திடக் கூடாது என்பதுதான் ஈழத்தமிழர்களின் பிரார்த்தனையே.
//ஈழம் என்னும் கனவு நிறைவேறப் போவதில்லை. நிறைவேறவும் தேவையில்லை.//
தயவுசெய்து யோசியுங்கள். பிரபாகரன் செத்துத் தமிழ்ச்செல்வன் தலைவராகணும் என்று சொல்லுமளவுக்கு ஈழ நிலை சிறிதுகூட விளங்காத உங்களுக்கு " ஈழம் தேவையில்லை" என்று சொல்ல உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?
>> பிரபாகரன் இல்லையேல் புலிகள் இயக்கமே இல்லை.
உங்களுக்கு முக்கியம் ஈழமா, புலிகள் இயக்கமா? புலிகள் இல்லாவிட்டால் தமிழருக்கு வேறு வழியேயில்லை என்ற (உருவாக்கப்பட்ட) போலித்தோற்றம் ஈழத்தை சீரழிக்கிறது.
உங்கள் தலைவர் சீக்கிரம் சாவது எல்லோருக்கும் நல்லது. பிரபாகரனை எதோ தலாய் லாமா மாதிரி பாவிக்கிறீர்கள்.
>> உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?
ஒன்றும் இல்லைதான். ஆனால் மூன்றாம் மனிதரின் பார்வையில் பிரச்சனையைப் பார்ப்பதும் சில சமயம் உதவும்.
ஈழம் முக்கியம். புலிகளோ பிரபாகரனோ அல்ல.
ஈழத்துக்காக ஆயுதம் தூக்கியோரில் தொடர்ந்து போராடுவது யார்?
யாருக்கும் விலை போகாமல் போராடுவது யார்?
தமிழீழத் தாயகம் ஒன்றுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தது யார்?
தமிழீழம் என்ற ஒன்று வந்தபின்னர் பிரபாகரனால் அதற்குத் தலைமைதாங்கக் கூட முடியாத நிலைதான் வரும்.
புலிகள் தோற்றால் ஒட்டுமொத்த ஈழத் தமிழருக்கும் தோல்வி அது. இதனை நீங்கள் விளங்கிக் கொள்வதே ஈழத் தமிழருக்கு நீங்கள் செய்யக் கூடிய உதவியாகும்.
ஈழத்தமிழர்கள் பிரச்சன சாதாரணமானதல்ல. யாரையும் யாரும் தலைவனாக வரவிடமாட்டாங்க. இதில பிரபாகரன் ஒரு விதிவலக்கா இருக்கிறார். வேற எந்த தலைவனையும் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டாங்கள். பிரபாகரனுக்கு முந்திய காலத்தில உயர்சாதிக்காரங்கள் தலைவரா இருந்தாங்கள். அவங்க ரொம்ப மோசமானவங்க. தாழ்தப்பட்ட ஈழத்தமிழங்கள சிங்கள அரசாங்கங்களோட சேர்ந்து அழிக்க துணைபோனாங்கள. கதிர்காமர் நீலன் திருச்செல்வம் அமிர்தலிங்கம் எல்லாம் இவங்க தான். ஈழத்தில கம்மினியுசம் பேசுறவங்க கிட்ட இருந்து தான் உழைப்பாழிங்க விடுதல பெற வேண்டி இருந்தது.
புளட் ன்னு ஒரு இயக்கம் இருந்தது. அவங்க தான் பொண்ணுங்கள ஆரம்பத்தில அதிகம் சேர்த்தாங்க. அந்த இயக்கத்துக்கு போன பொண்ணுங்கள்ள நூற்றுக்கு தொண்ணூறு பொண்ணுங்களும் என்ன ஆனாங்க ன்னு தெரியாது. கடசிய அவங்க இருந்த கேம்புக்குள்ள நிறைய பொண்ணுங்க எலும்புக்கூடுங்கள எடுத்தாங்க.
புளட் இலங்கையில ஈழத்த மீட்கிறதுக்கு பதிலா மாலதீவ ஆக்கிரமிக்க கப்பல்ல போய் இந்திய இராணுவம் மாலதீவ காப்பாற்றியது.
ரெலோ இயக்கத்த புலிகள் தடை செய்ய முன்னாடி அவங்களுக்குள்ள சுட்டுக்கிட்டாங்க. பபி ன்னு ஒருவன் தாஸ் ன்னு ஒருவன் ரெலோவுக்குள்ள மோதிக்கிட்டாங்க. ஏராளமானவங்க செத்தாங்கள்.
இன்னைக்கு ஈழத்தமிழங்கள் கொஞ்சமாவது உயிரோட இருக்கிறாங்கன்ன அது பிரபாகரன் இலங்க ராணுவத்தோட மோதுறதால இல்ல அவங்களுக்குள்ள ஆளுக்காள் இயக்கம் ஆரம்பிச்சவங்கள தடைபண்ணியது தான். கொஞ்சம் தாமதமா நடந்திருந்தா கூட புலியும் இல்ல ஈழத்தமிழனும் இல்ல. எல்லம் தாங்களே சுட்டுகிட்டு செத்திருப்பாங்க.
பிரபாகரன் தனிநாடு அமைக்கிறது சாத்தியமில்ல. பிரபாகரன் மட்டுமில்ல யாரும் அவங்களுக்குள்ள நாடு அமைக்க சாத்தியமில்ல. அதிகம் மக்கள் நாட்ட விட்டு வெளியேறிட்டாங்க. இருக்கிறவங்க புலிய தவிர யாரையும் நம்பவோ அல்லது யார் பின்னாடியும் போகவோ மாட்டாங்க. அந்த தீவு சிங்களவங்களுக்கு தான் கடைசில சொந்தமாகும். என்னும் அதிகம் மக்கள் இறக்க போறாங்க மிஞ்சிறவங்க சிங்களவங்கள மாறிடுவாங்க. இதான் என்னோட கணிப்பு. யாரும் திட்டாதீங்கப்பா. நான் கேள்விப்பட்டத வைச்சு திங் பண்ணி எழுதினன்
செந்தில்
செந்தில் கூறிய கடைசிப் பந்தியில் நிறைய உண்மையிருக்கிறது.
தமிழரில் ஒருசாரார் இறக்க மறுசாரார் வெளிநாடுகளுக்குத் தப்பி ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இறப்போரில் போரிட்டு இறப்போர், அப்பாவிகளாகக் கொல்லப்படுவோர் என்று இருவகையினர்.
குழந்தைகள் பிறப்பும் குறைந்து இறப்பும் இடம்பெயர்வும் அதிகரித்து தமிழர் எண்ணிக்கை அரைவாசியாகிவிட்டது. இன்னும் 5 - 10 ஆண்டுகள் போர் தொடர்ந்தால் ஈழத்தில் தமிழர் இருக்க மாட்டார்கள்.
மன்னாருக்குக் கீழே புத்தளம், சிலாபத்தில் தொடங்கி நீர்கொழும்பு வரை வாழ்ந்த தமிழர் சிங்களவர் ஆக்கப்பட்டுள்ளனர். இதுவே மாத்தறை முதல் அம்பாந்தோட்டை வரையும் இரத்தினபுரிப் பக்கங்களிலும் நடக்கிறது. தமிழ்ப் பாடசாலைகளை இழுத்து மூடுவதில் தொடங்கி எல்லா வேலைத்திட்டங்களையும் பயன்படுத்துகிறது சிங்கள அரசு.
சிங்கள அரசின் ஒரே நோக்கம் ஒரு சிங்கள பௌத்த நாடு.
மலையகத்தில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழர் எண்ணிக்கை திட்டமிட்ட வகையில் குறைக்கப்படுகிறது. அங்கே கட்டாய கருத்தடை செய்கிறார்கள். சுமார் 30 ஆண்டுகளாக.
முஸ்லிம்களை நேரடியாக அழிக்கவில்லையாயினும் தமிழருடன் மோதத் தூண்டுவதும் சிங்களக் குடியேற்றத்தால் முஸ்லிம்களின் செறிவைக் குறைப்பதும் நடக்கிறது. அம்பாறை முஸ்லிம் பெரும்பான்மை மாவட்டமாக இருந்து இப்பொழுது சிங்கள பெரும்பான்மை மாவட்டமாகி விட்டது.
முஸ்லிம்களும் மலையக்கத்தவரும் அரசாங்கத்தில் அங்கம் வகித்தாலும் இது எதனையும் தடுக்க முடிவதில்லை. அவர்கள் தத்தம் சுயநலன்களைப் பார்த்துக் கொண்டு இருந்து விடுகிறார்கள்.
தமிழர்களின் அபிலாசைகளை அறுதியாகவும் உறுதியாகவும் நின்று முன்னெடுக்கக் கூடிய பலம் புலிகளுக்கு மட்டுமே உள்ளது. புலிகள் இயக்கம் பிளவுபட்டுப் போகாமல் கட்டுக்கோப்பாக இருக்கக் காரணம் பிரபாகரனே.
பிரபாகரன் இல்லையேல் புலியியக்கம் இல்லை. புலியியக்கம் அழிந்தால் இப்போதுள்ள தமிழரில் அரைவாசிப்பேர் அழிந்துவிடுவர். அத்துடன் தமிழரின் உரிமைக்குக் குரல் கொடுக்கவும் யாரும் இருக்க மாட்டார்கள்.
சொன்னதை செஞ்சுகாட்டும் பதிவர் நீங்க ஒருத்தர்தான் சார்
தலைப்புல, குப்பை வலை: உபயோகமில்லாத சுட்டிகளின் மூலம் ஒரு குப்பை வலையை உருவாக்கும் திட்டம்! என்னு போட்டீங்க. அத புரூவ் பண்ற மாதிரி ஒரு பதிவு இதோ போட்ருக்கீங்க.
நீங்க அம்புலிமாமாக்கு அப்புறம் ட்ரெக்டா நெட்டுக்கு வந்தேளா?
உங்களது கருத்து மிகவும் சிறுபிள்ளை தனமாக இருக்கிறது. தமிழருக்கு சம உரிமை உண்டு என்று இது வரை ஆளும் கட்சியோ அல்லது எந்து ஒரு சிங்கள இயக்கமும் சொல்லக்கூட முற்படாத போது இப்படி ஒரு வாதத்தை வைப்பது மிகவும் சிறுபிள்ளை தனமானது தான். சிங்களம் என்னவோ எதற்கும் நாங்கள் தயார், வீணாக சண்டை வேண்டாம் பேச்சுவார்த்தைக்கு வாங்கள் என்று அழைத்துக்கொண்டே இருப்பதாகவும், புலிகள் ஈழம் தான் வேண்டும் என்று சண்டைக்கு போவதாக இருக்கிறது உங்களின் பதிவு. சுபாசந்திர போசும் சென்பகராமனும் எப்படி சுதந்திரம் தரும்வரை தாக்குதல் தொடுப்போம் என்று போர்கலம் பூண்டார்களோ அதோப்போல் இப்போது பிரபாகரன் இருக்கிறார். இதில் அவர் இல்லை என்றால் அமைதி கிடைக்கும் என்றால் அது தலை இருந்தால் தானே தலைவலி. தலையே இல்லை என்றால் என்று சொல்லும் சிறுபிள்ளை பேச்சாக்த்தான் இருக்கும். விடயங்களை ஓர்ந்து பார்க்கவும்.
என்னுடை இந்த வலைப்பதிவில் நான் முக்கியமான விசயங்களை அலசுவதில்லை! இது சும்மா சுட்டுவதற்காகத்தான். எனது ஆங்கிலப் பதிவில் நான் நீட்டி முழங்கி ஆராய்வதுண்டு. கடந்த இரண்டாடுகளில் நான் ஈழம் பற்றி ஆங்கிலத்தில் ஆராய்ந்தது கதிர்காமர், திருச்செல்வம் போன்றோரின் கொலைகளைக் கண்டிக்கத்தான்!
0. நான் சிங்களரை ஆதரிக்கிறேன் என்று நீங்கள் நினைத்தால், இதைப் படிப்பதை நிறுத்திவிட்டு என்னைத் திட்டி பின்னூட்டமிட ஆரம்பியுங்கள். நம்மிருவருக்கும் நேரம் மிச்சம்.
1. புலிகளைப் பற்றி ஈழத்தமிழரும் உலகமும் இட்டத்தட்ட நேரதிரான கருத்துக்களைக் கொண்டிருப்பதுதான் பிரச்சனையே. தமிழர்கள் புலிகளைக் கட்டிக்கொண்டு அழும்வரை, தொடர்ந்து ஆய்துப்போரில் ஈடுபடும்வரை உலகம் ஈழத்தைப்பற்றி கண்டுகொள்ளப் போவதில்லை. இதில் இழப்பு ஈழத்துக்கேயன்றி யாருக்குமில்லை.
2. கதிர்காமர், திருச்செல்வம் போன்றோரை கொன்றுவிட்டு புலிகள் தமிழருக்காக போராடுகிறார்கள் என்று நீங்கள் வேண்டுமானால் சொல்லிக்கொண்டு திரியலாம். இதை நம்ப உலகத்தவர் எல்லாம் முட்டாள்களில்லை.
3. உலகில் ஆயுதமேந்தி சுதந்திரமடைந்த ஜனநாயகத்தை மதிக்காத இயக்கம் எதுவுமில்லை. புலிகள் ஆயுதப்போரைக் கைவிட்டு அறப்போராட்டத்துக்கு வந்தால் உலகம் ஒருவேளை உதவவரக்கூடும்.
4. 1984 ஆயதம் கொண்டே எதிர்கொள்ளவேண்டியது. அதை நான் குறைசொல்லவில்லை. ராஜீவ் காந்தி செய்த சில மடத்தனமான செயல்களால், பிரபாகரனின் தான்தோன்றித்தனத்தால் இன்று ஈழப்போர் முழுக்க ஆயுதப் போராகிவிட்டது. ராஜீவ் கொலையால் ஈழம் இந்தியத் தமிழரின் ஆதரவை இழந்தது. 9/11 உள்ளிட்ட நிகழ்வுகளால் உலகத்தவரின் ஆதரவையும் இழந்தது.
5. pragmatism இல்லாத போரால் யாருக்கு இழப்பு? புலிகளும் இதை ஓரளவு உணர்ந்துதான் இருக்கிறார்கள். அதுதான் சமீபத்திய பேச்சுவார்த்தைகளுக்கு அடித்தளம். அந்தப் பேச்சுவார்த்தைகள் உடனடியாக பலன்களைத் தந்துவிடும் என்று எப்படி எதிர்பார்க்கலாம். இந்தியா சுமார் நூறாாண்டுகள் போராடி சுதந்திரம் பெற்றது. தமிழ்நாட்டில் சுயமரியாதை இயக்கம் 70 ஆண்டுகளாகியும் இன்னும் நிறைவு பெறவில்லை. இலங்கை உருவாகியே 50 ஆண்டுகள்தான் ஆகிறது. புலிகள் வந்து அதில் பாதி வருடங்கள்கூட ஆகவில்லையே?! ஆயுதமேந்தியெல்லாம் பல ஆன்டுகள் போராடமுடியாது.
6. அரசியல் வழியிலும், அறப்போராகவும் ஈழம் தனது போராட்டத்தை தொடர்வதுதான் தமிழருக்கு நல்லது. தமிழ்ச்செல்வன் தலைமையில் புலிகள் கொஞ்சம் கொஞ்சமாக தங்களுது போராட்ட முறையை மாற்றியிருக்கலாம். பிரபாகரனோடு இந்தியா பேசவோ, அவரை ஆதரிக்கவோ முடியுமா? தமிழ்ச்செல்வனோ இல்லை இனி அவர் இல்லாததால் வேறு ஒரு அரசியல் தலைவரோ ஈழத்தலைமையை ஏற்றால் இந்தியாவிலும் அதன் வாயிலாக மற்ற நாடுகளிலும் ஈழப் பிரச்சனையைக் கொண்டுசெல்லமுடியும். இவ்வளவு பேர் உயிர்த்தியாகம் செய்தும் உலகம் ஈழத்தைக் கண்டுகொள்ளாதது வருத்தமாகயில்லையா?
தெரியாமல்தான் கேட்கிறேன். தன் கையில் ரத்தம் படியாத, நம்பகத்தன்மையுள்ள ஈழத்தலைவர் யாராவது இருந்தால் சொல்லுங்கள். நான் அவரைப் பற்றி படித்துத் தெரிந்துகொண்ட பின்பு இந்த விவாதத்தைத் தொடரலாம்.
பணிமலர்,
சுபாஸ் சந்திரபோஸின் வழியை அவர் இருக்கும்போதே காங்கிரஸ் இயக்கம் நிராகரித்தது. ஹிட்லரோடும் சப்பானியர்களோடும் சேர்ந்து அவர் செயத முயற்சிகள் தோல்வி அடைந்ததுதான் இந்தியாவுக்கு நடந்த மிகநல்ல காரியம். அணுகுண்டு வீச்சிலிருந்தும் நாஞ்சிங் மாதிரி படுகொலைகளிலிருந்தும் தப்பித்தோம்.
செண்பகராமனை நினைவு வைத்திருக்கும் இந்தியரை ஏன் தமிழரையேகூட விரல்விட்டு எண்ணிவிடலாம்.
செண்பகராமனும், போஸும் செத்தாலும் இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கித்தர காந்திகளும் நேருகளும் இருந்தார்கள். ஈழத்தில் யார் இருக்கிறார்கள்? சொல்லுங்கள். அவரைக் கொல்ல பிரபாகரன் உடனே ஆள்் அனுப்பிவிடுவார்!
கதிர்காமரையும் நீலன் திருச்செல்வத்தையும் தமிழர் தலைவர்களாக நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கும் வரை உங்களுடன் உரையாட ஒன்றுமில்லை.
ஈழத்துத் தமிழருக்கு எந்தப் பிரச்சினையுமில்லை என்று உலகெல்லாம் சென்று பரப்புரை செய்யவே அவர்கள் பயன்படுத்தப்பட்டனர். இப்பொழுது ஆனந்தசங்கரி, டக்ளஸ் பயன்படுத்தப்படுகின்றனர்.
தொடர்ந்து போரிட்டு எதுவும் சாதிக்க முடியாது. உண்மை. ஆனால் எந்த உரிமையும் தரும் நிலையில் இலங்கை அரசு இல்லை.
புலிகளை விட்டால் ஈழத்தமிழர் சார்பில் பேச யாரும் இலங்கையில் இல்லை. உடனே புலிகள்தான் அனைவரையும் அழித்துவிட்டனர் என நீங்கள் வந்தால் உங்களுக்காக வருந்துகிறேன்.
பரராஜசிங்கத்தையும் ரவிராஜையும் கொன்றவர்கள் யார்?
ரவிராஜ் தமிழ், ஆங்கிலம், சிங்களம் மூன்று மொழிகளிலும் தமிழர் பிரச்சினைகளைக் கதைத்தார். அதுவொன்றுதான் அவர்செய்த தவறு. டக்ளஸ் மூலம் போட்டுத் தள்ளிவிட்டார்கள்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் கதை வேறு. பிரித்தானியர் இந்தியரை அழித்து இந்தியாவில் குடியேற வரவில்லை.
இலங்கையில் தமிழர் பிரதேசங்கள் காலங்காலமாக ஆக்கிரமிக்கப்படுகின்றன. யார் வந்தாலும் யார் போனாலும் அது நடந்தே தீருகிறது.
முஸ்லிம்களும் மலையகத் தமிழர்களும் போரிடவில்லை. ஆனால் அவர்களது செறிவு காலங்காலமாகக் குறைந்தே வருகிறது. இதற்கு என்ன சொல்கிறீர்கள்?
இலங்கையில் தாக்கப்படுவது கிறிஸ்தவச் சிங்களவரும்தான் என்பதை விளங்கிக் கொள்ளுங்கள். இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு.
தமிழகத்தவர் ஈழத் தமிழர் முற்றாக அழிவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். கொஞ்சமாவது குரல் கொடுங்கள்
அதான் பிரச்சனையே! எங்களுக்குப் பிடிக்காதவங்களை, தெரிஞ்சோ தெரியாமலோ கெட்டது செயதவர்களை நாங்கள் கொன்றுவிடுவோம். நாங்களும் சிங்களவரோடு பேசமாட்டோம். ஆனாலும் எங்களினம் அழிகிறது என்று புலம்பிக்கொண்டிருப்போம். நல்ல வழி கண்டுபிடித்தார்கள் போங்கள்!
கருணாவை எடுத்துக்கொள்ளுங்கள் அவர் என்ன அமைதியை வேண்டி புலிகளை காட்டிக்கொடுத்தார். அல்லது இந்தியா உருவாக்கிய டக்லசு தேவராசும் இன்ன பிற அரசியல் பொம்மைகளும் என்ன செய்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று வலையில் படித்து தெரிந்துகொள்ளுங்கள். இந்தியாவிற்கு சுதந்திரம் தரும் எண்ணமும் அவசியமும் பிரித்தானியாருக்கு இருந்தது. ஆனால் சிங்களதிலோ அரசியல் சாசணம் இயற்றி உரிமைகள் இல்லை என்று சொல்லி கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் போராட்டம் நடந்ததை நீங்களும் அறிவீர்கள். அரப்போராட்டம் நடத்திய மக்களை கொன்று குவித்ததோடு இனியாரும் போராட்டமோ ஊர்வலமோ நடத்தாமல் இருக்க உதாரணங்களை சிங்களம் படைத்தமைக்கு பிறகுதான் ஆயுத போராட்டமே வெடித்தது.
உலகம் சிங்களத்தில் தலையிடாமல் இருப்பதற்கு காரணம் அங்கு சுற்றுலாவை தவிற வேறு ஒன்றும் கிடையாது அங்கு மட்டும் ஆப்ரிக்காவில் கிடைப்பது போல் வைரமும், அரபு நாடுகளில் கிடைப்பது போல் பெட்ரோரிலியமோ கிடைகிறது என்று சொல்லட்டும் பிறகு பாருங்கள் கண்மூடி திறப்பதற்குள் பெரியண்ணன் வந்து நிற்பார். திவிர நீங்கள் சொல்லுவதை போல் தீவிர வாதம் காரணம் இல்லை.
இன்றைக்கு சீனமும் பாக்கிட்த்தானும் சிங்களத்தில் அதிக கவனம் கொள்ளுவது இந்தியாவை எரிச்சல் மூட்டவே தவிற அவர்களது மேலோ அல்லது மக்களாட்சி மேலோ உள்ள அக்கரையால் அல்ல.
உங்களுக்கு புலிகளையும் அவர்களது சித்தாந்தகளையும் பிடிக்கவில்லை, அதனால் அவர்கள் பாவிகள் ஆகிவிட்டார்கள் என்று பொருள் அல்ல. நீங்கள் அப்படி முடிவு கட்டினால் எப்படி இருக்கும் தெரியுமா. புகை பிடிக்காதவன் புகைப்பவர்களை பார்த்து மனிதர்களே அல்லர் என்று சொல்லுவது போல் இருக்கிறது. பணம் இருப்பவன் பணம் இல்லாதவர்கள் எல்லாம் பாவி என்று சொல்லுவதைப்போல்.
நம்மோடு சுதந்திரம் பெற்றவர்கள் தான் பாக்கிட்த்தான், நாம் இவ்வளவு வளம் பெற்று இருக்கிறோமே ஏன் அவர்களால் முடியவில்லை. இன்றைக்கும் அமெரிக்கா பணம் இல்லை என்றால் அடுத்த வருட வரவு செலவு திட்டத்தை கூட தயாரிக்க இயலாத நிலையில் அந்த நாடு இருப்பது எதனால். சிங்களம் கொண்டுள்ள அதே இன வெறி.
//பரராஜசிங்கத்தையும் ரவிராஜையும் கொன்றவர்கள் யார்?
ரவிராஜ் தமிழ், ஆங்கிலம், சிங்களம் மூன்று மொழிகளிலும் தமிழர் பிரச்சினைகளைக் கதைத்தார். அதுவொன்றுதான் அவர்செய்த தவறு. டக்ளஸ் மூலம் போட்டுத் தள்ளிவிட்டார்கள்.//
ஐயா பாலாஜி, உங்களுக்கு ஈழத்து நிலை கொஞ்சமும் விளங்கவில்லை.
ரவிராஜ், பரராஜசிங்கம் ஆகியோர் இலங்கைப் பாராளுமன்ற தமிழ் உறுப்பினர்கள். இலங்கை அரசால் கொல்லப்பட்டவர்கள். தமிழர் சார்பாகப் பேசவல்ல அனைவரையும் கொன்றுகுவிப்பதில் தீவிரமாக இருக்கிறது இலங்கை அரசு. தமிழ்ச்செல்வன் கொலையும் அப்படியானதுதான்.
>> கொஞ்சமாவது குரல் கொடுங்கள்
பிரபாகரன் தலைவராக இருக்கும் வரை புலிகளுக்காக இந்தியத் தமிழர் எப்படி குரல் கொடுக்கமுடியும்?
ஆனாலும் ஈழத்தமிழர் நிலைக்காக வருந்தாத இந்தியத் தமிழனை நான் இதுவரைப் பார்த்ததேயில்லை. உங்களுக்கு உதவ எனக்கு உதவுங்கள்! அறவழியில் போராடும் ஈழ அமைப்புகள் இருந்தால் சொல்லுங்கள். நிச்சயம் ஆதரிக்கிறேன்.
//அறவழியில் போராடும் ஈழ அமைப்புகள் இருந்தால் சொல்லுங்கள். நிச்சயம் ஆதரிக்கிறேன்.//
உங்களை மாதிரியான ஈழவரலாறு அரசியல் ஞானம் உள்ளவர்கள் ஈழத்தவர்களுக்கு உதவமாட்டோம் என்று உறுதிமொழி தருவதே உங்களாலான பெரிய ஆதரவு நண்பரே.
Post a Comment