Saturday, November 17, 2007

சாவதற்கென்றே பிறந்தோம்...


சிதர் என்று பெயரிடப்பட்டள்ள புயல் பங்களாதேஷைத் தாக்கி ஆயிரத்துக்கும் அதிகமானோரை பலிகொண்டிருக்கிறது. 'வருங்கால வல்லரசான' இந்தியா ஆபத்திலிருப்போரைக் காப்பாற்றவும், மீட்புப் பணியிலும் விரைந்து இறங்கியிருக்கும் என்று நீங்கள் நினைத்தால், அதுதான் இல்லை!

இந்தியாவின் தமாசு பத்திரிக்கைகள் பற்றிச் சொல்லவா வேண்டும்? அவர்கள் பங்களாதேஷ் பற்றி தெரிவிக்கவோ, கவலை கொள்ளவோ இல்லை. இந்தியா தப்பித்ததை இரண்டு நாட்களுக்குக் கொண்டாடிவிட்டு, இராகுல் காந்திக்கு முடிசூடக் கிளம்பிவிட்டன! வெட்கம் கெட்டவர்கள்.

ஆனால் நல்லெண்ணம் கொண்டவர்கள் உலகில் இருக்கத்தான் செய்கிறார்கள். Scienceblogs என்னும் வலைப்பதிவில் கடந்த சில நாட்களாக புயல் அபாயம் குறித்தும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது குறித்தும் எழுதிவருகிறார்கள்.

அபாயம் வருகிறதென்று நன்கு தெரிந்திருந்தும், அரசாங்கங்களும், ஊடகங்களும் மெத்தனமாக இருந்ததால், பலியான நூற்றுக் கணக்காணோர் சாவதற்கே பிறந்தனரோ? உயிர் பிழைத்தவர்களையாவது காப்பாற்றுவோம் வாருங்கள்.

No comments: