Monday, March 31, 2008

கிழக்கே போகும் சனநாயகம்!

ம்... தொடர்ந்து ஈழம் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறேனோ? பிரபாகரனை அழிப்பதில் வருகிற மே 10 கிழக்கு மாகாணத் தேர்தல் முக்கியப் பங்கு வகிக்கப் போகிறது என்பதில் சந்தேகமில்லை. நான் போன வார இடுகையின் பின்னூட்டப் பக்கத்தில் குறிப்பிட்டது போல, விடுதலைப் புலிகளுக்கு சாவு மணி அடித்தாகிவிட்டது. அதன் ஓலம் தமிழகத்திலும் ஒலிக்கிறது. விடுதலைச் சிறுத்தைகள், பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவை தெரிந்தோ தெரியாமலோ புலிகளுடன் சேர்ந்து ஈழத்தமிழருக்கு நல்லது நடந்துவிடக்கூடாது என்பதில் தீவிரமாயிருக்கின்றன. என்ன நடக்கிறதென்று பார்ப்போம்.

வருகிற தேர்தல்கள் குறித்து இன்றைய இந்து நாளிதழ் தலையங்கம் இங்கே. விடுதலைப் புலிகளின் எடுபுடிகளான தமிழ் தேசிய கூட்டனி தவிர்த்த எல்லா கட்சிகளும் தேர்தலில் போட்டியிடுகின்றன. இழக்கு மாகாணத் தமிழரும், இந்தியா மற்றும் உலகத் தமிழர் அனைவரும் சேர்ந்து ஒரே அடியாக புலிகளைத் தலைமுழுக வாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி (கருணா, பிள்ளையன்), முக்கட்சி கூட்டனி (PLOTE, அனந்தசங்கரியின் TULF, EPRLF-Padmanaba Wing) மற்றும் டக்ளஸ் தேவானந்தாவின் EPDP ஆகியவற்றுக்கு எனது ஆதரவும் வாழ்த்துகளும்!

விவரம் புரியாதவர்களுக்கு: இலங்கை 9 மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தப்படி இலங்கையின் 13ஆம் அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் இந்த மாகாணங்களைக் கொண்டுவந்தது. இவற்றில் இரண்டு மாகாணங்கள் ஈழத்தில் இருக்கின்றன. கடந்த ஆண்டு கிழக்கு மாகாணத்திலிருந்து விடுதலைப் புலிகள் விரட்டியடிக்கப்பட்ட பின்பு முதல் முறையாக அங்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. ஈழமக்கள் கொடுத்து வைத்திருந்தால் வடக்கு மாகாணத்திலும் புலிகள் வேரறுக்கப்பட்டு அங்கும் தேர்தல் நடத்தும் நிலை வரலாம்.

9 comments:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

//தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி (கருணா, பிள்ளையன்), முக்கட்சி கூட்டனி (PLOTE, அனந்தசங்கரியின் TULF, EPRLF-Padmanaba Wing) மற்றும் டக்ளஸ் தேவானந்தாவின் EPDP ஆகியவற்றுக்கு எனது ஆதரவும் வாழ்த்துகளும்!//

புலிகளை விட இவர்கள் எப்படி மேம்பட்டவர்கள் என்று விளக்குவீர்களா?

Balaji Chitra Ganesan said...

ரவி,

உங்கள் கேள்வி எனக்கு விளங்கவில்லை. தீவிரவாத அமைப்பையும் அரசியல் கட்சிகளையும் ஒப்பிடவும் வேண்டுமா? ஆயுதப் போர் சிறந்தததா இல்லை அறப்போர் சிறந்ததா என்றால் எளிதாக விளக்கமளிக்க முடியும். ஆனால் நீங்கள் அதைக் கேட்கவில்லை என்று நினைக்கிறேன்.

இந்தக் கட்சிகளில் பல ஒரு காலத்தில் தீவிரவாத அமைப்புகளாக இருந்திருக்கின்றன. அவைகளுக்கு நடந்த சண்டையில் புலிகள் வெற்றிபெற்று தமிழரிடம் ஒற்றுமையை நிலைநாட்டியதாக புலி அனுதாபிகள் பொய் பிரசாரம் செய்வது நானும் அறிந்ததுதான்.

சிங்களப் பெரும்பான்மை நாட்டில் தமிழருக்கு இணையான உரிமைகளுக்காகப் போராடுவது ஏற்றுக் கொள்ளத்தக்கதே. ஆனால் தனி நாடு அதுவும் பிரபாகரன் என்னும் சர்வாதிகாரியின் ஆட்சி என்பது மட்டும்தான் தீர்வு என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது.

1948-1972-1983-1987 என்று பல கட்டங்களாக நடந்துவரும் போராட்டத்தில் நான் சுட்டிக்காட்டிய அமைப்புகளிடம் Exit Strategy இருந்தது. புலிகளிடம் இல்லை.

PLOTE, TULF போன்றவை 1987 உடன்படிக்கைப்படி ஆயுதப்போரை கைவிட்டன. 13ஆவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தமே தமிழரின் தேவைகளை ஓரளவு பூர்த்தி செய்தது. அப்போதே நிரந்ததர அமைதி ஏற்படுத்தியிருக்கலாம். அதிகார போதை தலைக்கேறியிருந்த பிரபாகரன் மட்டும் ஆயுதத்தை கைவிடவில்லை.

திமுக சொல்லி வி.பி.சிங்கால் பின்வாங்கப்பட்ட IPKF திரும்பிவந்து அமைதி ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக பிரபாகரன் ராஜீவை போட்டுத்தள்ளினார்.

சரி Provincial councils போதாதென்றால் Federal State என்று மேலும் இறங்கிவந்த ரணில் விக்ரசிங்கேவை எதற்காக தேர்தலில் தோற்கடிக்கவேண்டும்? சென்ற குடியரசுத்தலைவர் தேர்தலில் ராஜபக்ஸே ஜெயித்து மீண்டும் போர் வரவேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக தமிழர்களை தேர்தலைப் புறக்கணிக்கவைத்தார் பிரபாகரன். ராஜபக்ஸே ஜெயித்துவந்து புலிகளை சாத்திக்கொண்டிருக்கிறார் என்பது தனி irony!

தான் ராஜாவாகும் வரை ஈழத்தமிழர் செத்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று நினைக்கும் ஈனப்பிறவி பிரபாகரன். கிட்டத்தட்ட பிரபாகரன் ஒரு psycho என்றுதான் சொல்லவேண்டும். பிரச்சனை முடிவுக்கு வருகிறமாதி தெரிந்தால் goal postஐ நகர்த்தி மீண்டும் போர் கொண்டுவருவது வாடிக்கையாகிவிட்டது.

இப்போது கிழக்கு மாகாணத்தில் தேர்தல் நடைபெற இருக்கிறது. புலிகளின் டம்மி கட்சிகள் மட்டும் தேர்தலைப் புறக்கணிக்கின்றன. அதனால் தேர்தலில் பங்கேற்கும் எந்த கட்சியையும் நான் ஆதரிக்கத் தயார்.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

கருணா, பிள்ளையான் குழுவை அரசியல் கட்சி என்று நீங்கள் சொல்லித் தான் கேட்கிறேன். துணை இராணுவக் குழு, கூலிப்படை என்று தான் பரவலாக அறியப்படுகிறது.

Balaji Chitra Ganesan said...

தீவிரவாத அமைப்பு ஆயுதப் போரைக் கைவிட்டு தேர்தலில் போட்டியிட முன்வந்தால் அதை ஆதரிக்கத்தானே வேண்டும்? பிள்ளையான் குழு ஆயுதம் வைத்துக்கொள்ளாவிட்டால் புலிகள் அவர்களை ஒழித்துவிடமாட்டார்களா? அமைதிப் பேச்சுக்கு வந்தாலும் நாங்கள் ஆயுதத்தோடுதான் வருவோம் என்று புலிகள் சொல்லவில்லையா? நிலைமை சரியாகும் வரை பிள்ளையான் குழு ஆயுதம் வைத்துக்கொள்வதில் தவறேதுமில்லை.

புலிகளை விட்டுவிட்டு வந்ததால் கருணா குழுவினர் துரோகிகள் என்பது வழக்கமான பிரசாரம்தான்.

Anonymous said...

தம்பி,
உண்ட அறிவு சுத்தம்...
சுகம் வரும் ஆள் தப்பாது.

உனக்கு இங்க என்ன நடக்குது எண்டு தெரியுமா என்ன?
போய் வேற வேலையைப் பார்.

சிவசிவா

ரணில் சமஸ்டிக்கு ரெடி எண்டவராம். அதை தம்பி பாலா பொட்டுப்பிரிச்சுப் பாத்தவராம். போய் வேற வேலையைப்பாரடா அம்பி.

-சிவானந்த சர்மா-

Anonymous said...

புலிக்கு ஜல்லியடிப்பவர்களுக்கு
எது நாம சொன்னாலும் அதற்கு எதிர்
மாறன கருத்தையே கொண்டிருப்பர்கள்
இந்தியாவில் சாய்பாப பக்தர்கள் அவர்
மேல் வைத்திருக்கும் பக்திக்கும்
இவர்கள் பிரபாகரன் மேல்வைத்திருக்ம்
பக்திக்கும் வேறுபாடுகிடையாது
பாப கருணையை போதிக்கிறார்
பிரபாகரன் கொலையை போதிக்கிறான்
போராளிகளை கொலைக்களத்துக்கு
அணுப்புவதற்கு முன் அவர்களுடன்
உண்டுவிட்டு போட்டோவுக்கு
போஸ் கொடுக்கிறானே இவன் ஒரு
மன்நோயாளிதான்.
கிழக்கு மாகாண தேர்தல் முடிய
பிரபாகரன் குண்டியிக்குள்
குண்டு வைப்பான் சிங்களவன்
அப்போ தெரியும் இவங்களுக்கு .

Anonymous said...

:) சிரிப்புதான் வருகிறது பாலாஜி...தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி (கருணா, பிள்ளையன்), முக்கட்சி கூட்டனி (PLOTE, அனந்தசங்கரியின் TULF, EPRLF-Padmanaba Wing) மற்றும் டக்ளஸ் தேவானந்தாவின் EPDP என நீங்கள் குறிப்பிடும் எல்லா அமைப்புகளும் கூட்டிக் கொடுக்கும் வேலையைத்தான் செய்கின்றன.அவர்கள் எப்படி தமிழ் மக்களின் நனமைக்கு உதவுவார்கள் என நம்புகிறீர்கள் என்பது புரியவில்லை.

சரியோ தவறோ தமிழீழ விடுதலைப் புலிகளை விட்டால் மக்களுக்கு நாதியில்லை என்பது உண்மை.விடுதலைப் புலிகளை அவ்வளவு சீக்கிரம் அழித்திடவும் முடியாது என்பது வரலாறு சொல்லும் பாடம்.அதனால் நீங்கள் வீணாக பகல்கனவு காணவேண்டாம்.

Balaji Chitra Ganesan said...

ப்ரியன்,

அந்த கட்சிகளெல்லாம் நல்ல கட்சிகள் என்று சொல்லவில்லை. கட்சிகள் என்ற அளவிலேயே ஆதரிக்கிறேன். அரசியல் வழியில் போராடலாம் என்று மக்கள் முன்வந்தால் தானே நல்ல கட்சிகள் உருவாகும்? அரசியல் நடத்தினாலே புலிகள் கொன்றுவிடுவார்கள் என்ற நிலையில், புலிகள் மேல் வெறுப்பு உள்ளவர்கள் மட்டுமே அரசியலில் ஈடுபடுவது எதிர்பார்க்கக்கூடியதே.

சின்னப்பொண்ணு said...

உங்கள் கருத்துக்கள் தமிழீழத் தமிழரினதும் அவர்களது நிலைப்பாட்டையும் அறியாது கொக்கரிக்கும் காமடியாக உள்ளது பாலாஜி.