Friday, March 14, 2008

தமிழகத்தில் புலிகள் நடமாட்டம் அதிகரிப்பு!

ம்... ஈழத்தமிழரை அழித்தொழிக்கும் அந்த கெட்ட புலிகள் அல்ல! தமிழகக் காடுகளில் உலவும் நல்ல புலிகளைத் தான் சொல்கிறேன். இந்தியாவின் புலிகள் எண்ணிக்கை ஐந்து ஆண்டுகளில் பாதியாகக் குறைந்து சுமார் 1400 புலிகள் மட்டுமே எஞ்சியிருப்பதாக சமிபத்தில் செய்தி வெளியாகியிருந்தது.

ஆனால் தமிழகத்தில் ஒரு வேளை புலிகளைக் காப்பற்றும் முயற்சிகள் வேலை செய்ய ஆரம்பித்திருக்கலாம். தமிழகத்தில் தற்போது சுமார் 65-86 புலிகள் மீதமிருப்பதாகத் தெரிகிறது. இது பெருமைப் பட்டுக்கொள்ள வேண்டிய செய்தியில்லை என்றாலும் இருந்த புலிகளும் அழிந்தன என்று செய்தி வராமல் இருப்பதே பெரிய விசயம்.

புலிகள் விசயத்தில் உங்களுக்கு ஆர்வமிருந்தால் இங்கேயும் வாங்க -> புலிகள் திட்டம், உலக வனவிலங்கு ஆணையத்தின் கையெழுத்து இயக்கம்.

அப்புறம், எவ்வளவு நாளைக்குத்தான் ஆர்க்கூட்டிலும், யூடூபிலும் பழியாய் கிடப்பீங்க. Connet2Earthத்துக்கும் வாங்க!

5 comments:

தமிழன் said...

உன் வலைப்பதிவை அனைவரும் படிக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் மாவீரர்களை பற்றி குறை கூறவேண்டாம் நண்பா

Balaji Chitra Ganesan said...

அது காரணமில்லாமல் மேன்போக்காக செய்யப்பட்ட விமர்சனம் அல்ல. விடுதலைப் புலிகள் பற்றி நான் எழுதிய சில இடுகைகள் இங்கே மற்றும் இங்கே.

தற்போதைய நிலவரப்படி நான் தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் கிழக்கில் நடந்த தேர்தலில் பங்கேற்றதையும், ராஜபக்ஸே வடக்கிலும் தேர்தல்் நடத்தப்படும் என்று அறிவித்திருப்பதையும் வரவேற்கிறேன்! நடந்து முடிந்த தேர்தலில் வாக்காளர்கள் மிரட்டப்பட்டதாகத் தெரிந்தாலும் தமிழருக்கென்று ஒரு புதிய அமைப்பு உருவாவது நல்லதே.

Anonymous said...

//ம்... ஈழத்தமிழரை அழித்தொழிக்கும் அந்த கெட்ட புலிகள் அல்ல! தமிழகக் காடுகளில் உலவும் நல்ல புலிகளைத் தான் சொல்கிறேன். //


திருவாளர் குப்பை வலை, தமிழ்செல்வனின் பெயர் தெரிவதற்கே உங்களுக்கு Google தேவைபடுகின்றது என்றால் உங்களின் தமிழிழ விடுதலை புலிகள் பற்ற அறிவு நன்கு விளங்குகின்றது.

உங்கள் பிளாக்கு பிரபல படுத்துவதற்க்கு எதாவது ஒரு நல்ல வழியை தேர்தெடுக்கவும். அதைவிடுத்து தேவையில்லாத, உங்களுக்கு சிறிதும் தெரியாத விடுதலை புலிகளை இங்கு வம்புக்கு இழுக்க வேண்டாம்.

உங்க வலைபதிவுக்கு மேலும் வரவுகளை தேடித்தரவிரும்பாத காரணத்தினாலே பெயரிலியாக வந்து பின்னூட்டம் இடுகின்றேன்.

Balaji Chitra Ganesan said...

என்னுடைய அடுத்த பதிவில் நான் ஒட்டியிருக்கும் திபெத் கொடியைப் பார்த்தாவது திருந்துங்கப்பா! அமைதி வழியில் நியாயமான கோரிக்கைகளுக்குப் போராடினால் உலக மக்களின் ஆதரவு தானாக கிடைக்கும்.

அங்கே:

சீன ஆக்கிரமிப்பு மற்றும் அதைத் தொடர்ந்த ஆட்டுழியங்களால் பல லட்சம் திபெத்திய மக்கள் 1949-59 களில் இறந்தார்கள். அதற்கு அடுத்த 50 ஆண்டுகளில் அமைதியாகப் போராடி அவர்கள் சுமார் 500 பேரை இழந்திருப்பார்கள். அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற வாய்ப்பு குறைவுதான். ஆனால் உலக மக்களின் அன்பையும், எத்துனை கொடுமையிலும் நான் அறவழியில் போராடுவேன் என்னும் ஆத்ம சாந்தியும் அவர்களுக்கு கிடைத்திருக்கிறது.

இங்கே:

1972 இல் இலங்கை குடியரசான பின்பு 1983 இல் நடந்த இனப் படுகொலைகளில் சில ஆயிரம் ஈழத்தமிழர்கள் இறந்தார்கள். அப்போது ஈழம் கிளர்த்தெழுந்தது ஏற்றுக்கொள்ளக் கூடியதே. ஆனால் தொடர்ந்து வன்முறையைக் கையாண்டு பிரபாகரனை சர்வாதிகாரியாக ஆக்க நடந்த 25 ஆண்டுப் போராட்டத்தில் 60,000 தமிழர் இறந்ததுதான் மிச்சம். திபெத் சுதந்திரமடைந்தாலும் அடையும். தனி ஈழம் கிடைக்க துளியும் சாத்தியமில்லை. நாட்டை இழந்து, உற்றாரை இழந்து, வன்முறை வழியில் தொடர்ந்து சென்று ஒரு சக தமிழனான நான்கூட விமர்சிக்கும் அளவுக்கு இன்று ஈழத்தமிழர் நிலை வந்துவிட்டது.

விடுதலைப் புலிகள் போன்ற ஒரு மாபியா பொறுக்கி கும்பலால் ஈழத்தமிழரின் நியாமான கோரிக்கைகளைக்கூட உலகம் சட்டை செய்ய மறுக்கிறது. மற்றபடி உங்கள் விருப்பம்!

Balaji Chitra Ganesan said...

hmm... it took me one press of the 'reject' link to nullify your verbal violence! from this, perhaps you can learn how futile violence is.