Friday, April 04, 2008

ஒகேணக்கல் பிரச்சனையில் தமிழரின் சிறுபிள்ளைத்தனம்!

ம்... என்னை தமிழ் விரோதி என்று கட்டம் கட்டுபவர்கள் இதையும் படியுங்கள்.

1. பெங்களூரில் சில திரையரங்குகளை சில முட்டாள்கள் தாக்கினார்கள் என்றால் அதற்கெல்லாம் தமிழ் திரைத்துறையினர் உண்ணாவிரதம் இருக்கவேண்டுமா? இவர்களுக்கு வேறு வேலையே இல்லையா?
2. எதோ தென்னிந்திய திரைத்துறையினர் சங்கம் என்று ஒன்று இருக்கிறதாம். அதிலிருந்து கர்நாடக மாநிலத்தவரை இடைநீக்கம் செய்துவிட்டார்கள். நாம் மற்றவர்களை இனவெறியர் என்று சொல்லிக்கொள்கிறோம்! விந்தை.
3. கன்னடர்களின் உணவகங்கள் தாக்கப்படுவது, கர்நாடக பேருந்துகள் தாக்கப்படுவது என்று மிகவும் கேவலமாக நிலைக்கு தமிழகம் ஏன் சென்று கொண்டிருக்கிறது? இதையெல்லாம் கண்டிப்பது மற்ற தமிழரின் கடமையல்லவா?
4. பாலாற்றின் குறுக்கே ஆந்திரம் அணை கட்டக்கூடாது என்று தமிழக கட்சிகள் போராடவில்லையா? அதேபோல சில கன்னட அமைப்புகள் போராடினால் போராடிக்கொள்ளட்டுமே. கடைசியில் அரசுகளும், நீதிமன்றங்களும் தீர்க்க வேண்டிய பிரச்சனைகளுக்கு எதற்கு பொதுமக்கள் அலட்டிக்கொள்ளவேண்டும்?
5. பாலக்காடு தொடர்வண்டி மண்டலத்தை பிரித்தே ஆகவேண்டும் என்று அடம்பிடித்த நாம் 'விட்டுக்கொடுத்தல்' பற்றி மற்றவர்களுக்கு பாடம் நடத்தமுடியுமா?
6. கருணாநிதி என்கிற கிழவன் தேவையில்லாமல் எரிந்துவிழுந்து தமிழ்நாட்டுக்கு குந்தகம் விளைவித்து வருவதை பத்திரிக்கைகள் ஏன் கண்டுகொள்வதில்லை? இராமர் பற்றி தேவையில்லாமல் பேசி சேது சமுத்திரத் திட்டத்தைக் கெடுத்தது யார்? ஒகேணக்கல் பற்றி ஒரு சென்னை விழாவில் குடிகாரன் மாதிரி பேசி கன்னடர்களை கிழப்பிவிட்டது யார்?

8 comments:

Thekkikattan|தெகா said...

Where are you guys coming from? One can look at things like you did now, for how long are you willing to கையேந்தி நிற்க? Hell with it.

Waste of time... first and last stop here.

Anonymous said...

தமிழக முதல்வர் அப்படி என்ன சொன்னார் என்பதையும் போட்டிருக்கலாமே.

வன்முறை துவங்கியபின் 'எங்கள் எலும்புகல் முறிபட்டாலும் திட்டத்தை கைவிடமாட்டோம்' என காந்தியைப் போல பேசினால் அது உசுப்பிவிடும் பேச்சா..

நடுநிலமையாக கேள்வி கேட்கிறீர்கள் ஆனால் கலைஞர் பேச்சை குறை சொல்வது தப்பு.

Indian said...

நீங்கள் அணிந்திருக்கும் கண்ணாடிகளை கழற்றிவிட்டு நடந்தது என்ன என்பதை இணையத்தில் படித்துவிட்டு கேள்வி கேளுங்கள். அடுத்த மாநிலப் பேருந்தை சேதப்படுத்துவதற்கும் 'என்னுடைய எலும்பை உடைத்தாலும் நாங்கள் திட்டத்தை தொடருவோம்' என்று சொல்வதற்கும் உள்ள வேறுபாட்டை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா?

Do you know the difference between agression vs assertion?

Balaji said...

எலும்பு முறிபட்டால்? யாரோட எலும்பு. கர்நாடகாவில் இருக்கும் தமிழரின் எலும்பா?!

கருணாநிதி என்ன வலைப்பதிவாளரா? முதல்வராக இருந்துகொண்டு "என் பொறுமையை சோதிக்காதீர்கள். திட்டம் நிறைவேறியே தீரும். திருவள்ளுவர் சிலையை மூடிவைத்திருக்கிறார்கள்." என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்க வேண்டுமா?

இவர் எதோ திண்ணையில் உட்கார்ந்து பேசும் கிழவர்கள் போல கருத்து சொல்லிக்கொண்டிருக்கிறார். போன தடவைகூட இராமர் பிரச்சனையில் இரண்டு அப்பாவிகள் பெங்களூர் பேருந்தில் செத்துப் போனார்கள்.

தலைமைச் செயலாளர் மற்றும் துரைமுருகன் காட்டிய நிதானம்கூட கருணாநிதிக்கு இல்லை.

Nakkiran said...

நீங்கள் சொல்வதுபோல் மூடிக் கொண்டிருந்தால் குடைக்கல் பிரச்சனை காவிரி பிரச்சனை போல் முடிவில்லாமல் போய்விடும்...

பாலாறு தடுப்பணையும், குடைக்கல் நீர்த்திட்டம் ஒன்று என நீங்கள் ஒப்புமை செய்வதை பார்த்தால் மிக துயரமாக உள்ளது...

பாலாற்றில் தடுப்பணை கட்டினால் தமிழ்நாட்டிற்கு வரும் கொஞ்சம் தண்ணீரும் நின்று விடும். குடைக்கல் நீர்த்திட்டத்தால் கர்நாடகத்துக்கு என்ன பாதிப்பு சொல்லுங்கள்... தமிழ்நாட்டிற்கு வந்த பிறகு, காவிரி நீரை எப்படி பயன்படுத்தினால் கர்நாடகத்திற்கு என்ன பிரச்சனை.. உபயோகப்படுத்தாமல் போனால் காவிரி தண்ணீர் திரும்பி கர்நாடகத்திற்கா போக போகிறது????

அவர்கள் தான் அறிவில்லாமல் வன்முறை செய்தால் அதற்கு நீங்கள் ஆதரித்து பதிவு வேறு...

தியேட்டரை சூறையாடினால் திரைநடிகர் போராடாமல் வேறு யார் போராடுவார்.. நட்டமாவது அவர்கள் பணம்... அது தான் போராடுகிறார்கள்..

இதில் வேறு தமிழக முதல்வரை குறை சொல்ல வந்துவிட்டீர்கள்.. மானமுள்ள எந்த தமிழனும் இதை தான் சொல்வான்.. உங்கள் தமிழ்ப்பாசத்திற்கு நன்றி

Balaji said...

நக்கீரன்,

இந்த விசயத்தில் தமிழகம் பக்கம் நியாமிருக்கிறது என்று எல்லோருக்குமே தெரிந்துதான் இருக்கிறது. அதனால்தான் இந்த விசயத்தில் நாம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என்கிறேன்.

>> உபயோகப்படுத்தாமல் போனால் காவிரி தண்ணீர் திரும்பி கர்நாடகத்திற்கா போக போகிறது????

இது அவ்வளவு எளிதானதல்ல. தமிழகத்தில் காவிரி நீரை நாம் எவ்வாறு பயன்படுத்துகிரோம் என்று கர்நாடகத்து தெரிவித்துதான் ஆகவேண்டும். இது குடிநீர் திட்டம் என்பதால்தான் கர்நாடகம் ஏற்கனவே ஒத்துக்கொண்டிருக்கிறது அல்லது ஒத்துக்கொள்ளும். நாம் அளவுக்கு அதிகமாக காவிரி நீரை உபயோகப் படுத்திவிட்டு, வறட்சி காலத்திலும் கொடுத்துதான் ஆகவேண்டும் என்று அவர்களை மிரட்டுகிறோம் என்பதுதான் அவர்களின் பெரிய குற்றச்சாட்டு. அதனால் அவர்களின் ஒப்புதலைப் பெறாமல் நாம் புதிய திட்டங்களை ஆரம்பிப்பது சரியல்ல.

மற்றபடி கர்நாடகத்தில் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதனால் அங்கு இன்னும் இரண்டு மாதத்திற்கு எதாவது கூத்து நடந்துகொண்டுதானிருக்கும். நாம் தேவையில்லாமல் விசயத்தை பெரிதாக்கி பெயரைக் கெடுத்துக்கொள்வானேன்?

பெங்களூரில் திரையரங்கு தாக்கப்பட்டால் அந்த மாநில ஆளுனரையோ, காவல் துறை ஆணையரையோ சந்திந்து முறையிடுவதுதானே. சும்மா விளம்பரத்துக்காக சென்னையில் உண்ணாவிரதம் நடத்துகிறார்கள். இதில் ஒருவேலை கலந்துகொள்ளாத வெளிமாநிலக் கலைஞர்களை வேறு மிரட்டுகிறார்கள்!

கஷ்மீரை வைத்து பாகிஸ்தானில் அரசியல் செய்வது போல கர்நாடகத்தில் ஆரம்பித்துவிட்டார்கள். தெருவில் சென்றெல்லாம் கன்னட ரக்ஷ்ண வேதிகே காசு வசூலிக்கிறதாம். அவர்களுக்கு நாம் ஏன் உதவவேண்டும்?

Anonymous said...

Nee kannada soththai thinnuttu avangalukku vaalaattu. tamil nadu pakkam varaadhey. unakkellaam .....

பேரரசன் said...

பெங்களூரில் திரையரங்கு தாக்கப்பட்டால் அந்த மாநில ஆளுனரையோ, காவல் துறை ஆணையரையோ சந்திந்து முறையிடுவதுதானே. சும்மா விளம்பரத்துக்காக சென்னையில் உண்ணாவிரதம் நடத்துகிறார்கள். இதில் ஒருவேலை கலந்துகொள்ளாத வெளிமாநிலக் கலைஞர்களை வேறு மிரட்டுகிறார்கள்!

உண்மைதான் , அப்பொழுதுதான் அவர்கள் தமிழர்களிடையே புகழ் பெற முடியும்...
இதையும்பாருங்கள்