Tuesday, March 04, 2008

இந்து சமவெளியினர் திராவிடரா?

ஆ! சும்மா கவணத்தை கவர்வத்றகாக வைத்த தலைப்புதான்! ஃபின்லாந்து நாட்டு இந்திய ஆய்வாளர் (Indologist) அஸ்கோ பார்போலாவின் பேட்டி இந்து நாளிதழில் வந்திருக்கிறது. இங்கே.

இந்து சமவெளி எழுத்துகள் ஒரு திராவிட மொழியை எழுதப் பயன்பட்டிருக்கலாம் என்றும், தமிழகத்தில் ஜைமினி சாம வேதம் காப்பாற்றப்படுவது குறித்தும், தமிழக பழங்குடியின மக்களின் மொழி, வாழ்க்கைமுறை ஆகியவற்றை பதிவு செய்து, அதிலிருந்து இந்தியாவின் மிகத்தொன்மையான வரலாற்றை அறிய முயலவேண்டுமென்றும் பேராசிரியர் பார்போலோ தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

2 comments:

Anonymous said...

இந்தி சாதிகளுக்கு இடஒதுக்கீடு தரும் 'தமிழ்'நாடு அரசு

தற்போதைய தமிழக அரசின் இடஒதுக்கீடு கொள்கை தமிழ் என்கிற அடிப்படையில் அல்லாமல் வெறும் ஜாதி என்கிற அடிப்படையில் உள்ளது.

நீங்கள் பிற்பட்டோர் பட்டியலை பார்த்தால் தமிழ் தவிற்று பிறமொழிகள் பேசும் ஜாதிகள் உள்ளன.

இதில் இந்தி பேசும் முஸ்லிம்கள், ஸவுராஷ்டிரியர்கள்; தெலுங்கு பேசும் ரெட்டியார்கள்,நாயுடுகள், கன்னடம் பேசும் கவுண்டர்கள் ஆகியோர்க்கெல்லாம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

தமிழ் பிராமிணர்களை அயோக்கியர்கள் என கருதும் தி மு க இந்தி பேசும் வடக்கர்கள் வாக்குகளை பெற இந்தி மொழி தேர்தல் பிரசுரங்களை வெளியிட்டது.

தமிழகத்தில் தமிழ் பிராமணர்கள் தமிழர்கள் அல்ல என பிரச்சாரம் செய்கின்றன ப ம க, தி மு க ஆகியோர்.

கர்ணாநிதிக்கு தமிழ் பிராமணர்கள் வெறுப்பு இந்தி மொழிக்கு மேலானது போலுள்ளது.

எனது வகுப்பில் இந்தி பேசும் மாணாக்கர் விலைக்கொடுத்து OBC சான்றிதழ் வாங்கி அண்ணா பல்கலைக்கழகம் சேர்ந்தார். இந்தி/உருது மட்டும் பேசும் முஸ்லிம் தமிழகத்தில் ஜாதிகள் இடஒதுக்கீடு பெறுகின்றனர்.

சென்னை விமானகத்தில் தமிழ் ஊழியர்கள் அவ்வளவு இல்லை. எல்லாமே இந்தி பேசுபவர்கள் தான்.

தமிழக CBSE பள்ளிகள் இந்தி திணிப்பு தான்.

இந்தி, கன்னடம், தெலுங்கு பேசும் ஜாதிகள் வருக; தமிழ் பிரமாணர் ஒழிக என கொள்கை வைத்துள்ளது தற்போதைய இடஒதுக்கீடு சட்டம்.

கர்நாடகத்தில் கன்னடத்திற்கு பிரதானம் அளிக்கப்படுகிறது. கன்னட பிராமணர் கன்னடர் ஆவார். தமிழகத்தில் தமிழ் பிராமணர் வெளியாள் எனவு இந்தி, உருது, கன்னடம், தெலுங்கு ஜாதிகள் தமிழர்கள் என்கிற பெயரில் இடஒதுக்கீடு வாங்குகின்றனர்.

தமிழக தமிழர்களுக்கா வெறும் ஜாதி கணக்கில் உகுந்தவருக்கா?

Balaji Chitra Ganesan said...

உங்களுடைய கருத்துகள் யோசிக்கவைத்தன.

இடஒதுக்கீட்டில் மொழி கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டுமா என்று தெரியவில்லை. சாதிவாரி இடஒதுக்கீடு என்றுதான் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. மதச் சிறுபான்மையினர் மற்றும் மொழிச் சிறுபான்மையினருக்கு கல்வி நிறுவனங்கள் தொடங்குவதில் சலுகை வழங்கப்பட்டுவந்தது. சமீபத்தில் முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இடஒதுக்கீடும் வழங்கப்பட்டுள்ளது.

அதனால் இதில் மொழி சம்பந்தப்படவில்லை என்று நினைக்கிறேன்.