கர்னாடக இசையில் தமிழ் புறக்கணிக்கப்படுகிறது என்று பல காலமாகவே குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. நான்கூட இது பற்றி இங்கே எழுதியிருக்கிறேன். இதற்கு எதிர்விவாதமாக ராம் சிறிராம் என்பவர் எழுதிய கட்டுரை இங்கே. தமிழில் பாடல்களே இல்லை என்னும் விதண்டாவாதத்தை விட இவரது கட்டுரை சற்று ஏற்றுக்கொள்ளக் கூடியதாய் இருக்கிறது.
முன்பைவிட இப்போது நிலைமை சற்று தேறிவருகிறது என்றுதான் நினைக்கிறேன். சென்னை சங்கமத்தில் கர்னாடக இசையும் இடம்பெற்றிருப்பது நல்லதே. அருணா சாய்ராம் போன்றவர்கள் பழந்தமிழ் பாடல்களை கச்சேரிகளில் பாடுகிறார்கள்.
கர்னாடக இசையும் தமிழரின் இசையே (?!) என்னும் நிலை வரவேண்டுமானால் கர்னாடக இசைக் கச்சேரிகளுக்கென்றே நிறைய புதிய தமிழ் பாடல்கள் எழுதப்படவேண்டும். திரைப்படங்களுக்கெல்லாம் எழுதும் கவிஞர்களால் கர்னாடக இசைக்கு எழுதமுடியாதா என்ன?
Monday, March 10, 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
பாலாஜி, கர்நாடக இசையில் தமிழ் புறக்கணிக்கபடுகிறது என்பது ஒரு மேலோட்டமான கண்ணோட்டம். ஐம்பது,அறுபதுகளிலேயே பட்டம்மாள், சீர்காழி கோவிந்தராசன் போன்றவர்கள் கோபாலகிரிருஷ்ணபாரதி, சுப்பிரமணிய பாரதி, முத்து தாண்டவர், அருணாசலக் கவிராயர் போன்றவர்கள் பாடல்களை பாடி வருகின்றனர். பாபநாசம் சிவன், அம்புஜம் கிருஷ்ணா என சமகாலத்திலும் தமிழ் கீர்த்தனைகள் புனையப் பட்டிருக்கின்றன.
இப்போதெல்லாம் மெல்லிசை நிகழ்ச்சிகளிலேயே பிறமொழி திரைப்பாடல்கள் இடம்பெறும்போது தென்னிந்தியாவிற்கே சொந்தமான கர்நாடக இசைக் கச்சேரிகளில் தென்னிந்திய மொழிப்பாடல்கள் நிரவிவருவது தவிர்க்க முடியாதது.
//கர்னாடக இசையும் தமிழரின் இசையே (?!) என்னும் நிலை வரவேண்டுமானால்//
...இந்நிலை "தமிழர்கள்" பாடுவதில்லையே என்பதாலேயே உள்ளது. அது அனைத்து மக்களிடமும் சேரும்போது மொழியின் எல்லைகளை கடந்து செல்லும்.ஒலித் தொகுதிகளின் (ராகங்கள்) பெயர்களை வடமொழியிலிருந்து தமிழ் படுத்தலாம்.
Post a Comment