Thursday, March 27, 2008

'பிரபாகரன்' வளர்க! பிரபாகரன் ஒழிக!மேலுள்ள நிகழ்படத்தில் சிதறும் பெண் சீமானின் அல்லது சுப. வீரபாண்டியனின் சகோதிரியாக இருந்திருந்தால் அவர்கள் சமீபத்திய தீவிரவாத ஆதரவு ரவுடித்தனத்தில் இறங்கியிருப்பார்களா? எவனோ, எவளோ சாகிறான். சும்மா வேலையில்லாமல் இருப்பதால் சத்தம் போட்டுக்கொண்டிருக்கும் இந்த அல்லக்கைகளுக்கு சில உயிர்கள் காப்பாற்றப்படுவது பொறுக்கவில்லை.

விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையினர் மூளைச்சலவை செய்யப்பட்டு தேவையில்லாமல் பலிகொடுக்கப்படுகிறார்கள் என்பது தெரிந்த விசயம்தான். பலியாடாகத் தேர்வு செய்யப்பட்டு பின் மனதை மாற்றிக்கொண்ட பின்பும், வெடித்துத்தான் ஆகவேண்டும் என்னும் புலிகளின் கொலைமுயற்சியிலிருந்து தப்பிவந்த சில தமிழரின் கதையை ஒரு சிங்களர் படமாக எடுத்திருக்கிறார். அந்த இயக்குனருக்கு சென்னையில் அடி, உதை! உண்மை வெளிவரக்கூடாது என்பதில் ஒரு செய்தியாளருக்கும், இன்னொரு கலைஞனின் படம் வெளியாகக்கூடாது என்பதில் ஒரு இயக்குனருக்கும் எவ்வளவு அக்கறை!

சமீபத்தில் ஈராக்கில் மனநலம் குன்றிய பெண்களின் உடம்பில் வெடிமருந்துகளை கட்டியனுப்பி தூரத்திலிருந்து வெடிக்கவைத்தார்கள். அவர்களுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் என்ன வித்தியாசம்? மேலுள்ள ஒளித்துண்டில்கூட அந்த பெண் தான் கொல்லவந்த மனிதர் அலுவலகத்தில் இல்லை என்று தெரிந்தும், சும்மா வந்துவிட்டோமே என்பதற்காக யாரோ ஒருவரைக் கொன்று தானும் சாகிறாள். இதுதான் சுதந்திர போராட்டமா?

ஆமாம் தெரியாமல்தான் கேட்கிறேன். சாக விரும்பாதவர்களை மூளைச்சலவை செய்து சாக அனுப்பும் புலிகள் கடைசியில் அந்த பலியாட்டை பிரபாகரனோடு எதற்கு சாப்பிட அனுப்புகிறார்கள்? கடந்த இருபது ஆண்டுகளில் சண்டையே போடாமல் ஒளிந்துகொண்டு, தின்று தின்று பன்றி போல உடம்பை வைத்திருக்கும் அந்த கோழையைப் போய்ப் பார்த்தால், அதுவும் அவன் தின்றுகொண்டிருக்கும்போது பார்த்தால் ஏற்றியிருக்கும் மூளைச்சலவை இறங்கிவிடாதா?

33 comments:

Anonymous said...

//மூலைச்சலவை செய்து //


பாலாஜி,தமிழ் படிப்போமா?
அது மூலையைச் சலவை செய்வதல்ல.மண்டையுள் கன மொழிகளைப் புகுக்கும் தமிழகத்து மனிதர்களுக்கு,மூளைக்கும்-மூலைக்கும் பொருட் புரிவு இலைத்தான்.எனினும்,நீங்கள் மூளையைத்தானே,மூலை என்கிறீர்கள்?

போதுமடா சாமி உங்கள் தமிழ்க் கொலை!இதுக்கும் இனியொரு பதிவு எழுதித்தான் தீரணுமோ?:-(((

Balaji said...

சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. திருத்தியிருக்கிறேன்.

Anonymous said...

Do not make judgment without knowing the real truth.

People like you are the traitors to Tamil Community.

oru eezham thamizhan said...

//ஆமாம் தெரியாமல்தான் கேட்கிறேன். சாக விரும்பாதவர்களை மூளைச்சலவை செய்து சாக அனுப்பும் புலிகள் கடைசியில் அந்த பலியாட்டை பிரபாகரனோடு எதற்கு சாப்பிட அனுப்புகிறார்கள்? கடந்த இருபது ஆண்டுகளில் சண்டையே போடாமல் ஒளிந்துகொண்டு, தின்று தின்று பன்றி போல உடம்பை வைத்திருக்கும் அந்த கோழையைப் போய்ப் பார்த்தால், அதுவும் அவன் தின்றுகொண்டிருக்கும்போது பார்த்தால் ஏற்றியிருக்கும் மூளைச்சலவை இறங்கிவிடாதா?//

super super excellent.

உதயசங்கர் said...

குப்பை வலை-உபயோகமில்லாத சுட்டிகளின் மூலம் ஒரு குப்பை வலையை உருவாக்கும் திட்டம்!

தலைப்பிற்குப் பொருத்தமான இடுகைங்கோ.

பாவி மனுஷா..பிரபாகரன் ஒழிகன்னு போட்டீங்க ஒகே..ஏதோ அந்த மனுஷனைப் பற்றி தெரிந்திருப்பீங்கன்னு நம்பறேன்.

ஆனா, 'பிரபாகரன்' படத்த பற்றி இன்னா தெரியும் உங்களுக்கு. பார்த்திருக்கிறீங்களா? சீமானும் சுப. வீரபாண்டியனும் படத்தைப் பார்த்துட்டுதான் பேசறாங்கன்னா நீங்க.....???

இப்பிடி பார்க்காம விமர்சனம் செய்யக்கூடாது சார்.

அதுசரிங்க, யாருங்க உங்களுக்குச் சொன்னாங்க "அந்த பெண் தான் கொல்லவந்த மனிதர் அலுவலகத்தில் இல்லை என்று தெரிந்தும், சும்மா வந்துவிட்டோமே என்பதற்காக யாரோ ஒருவரைக் கொன்று தானும் சாகிறாள்". அவ என்ன உங்களுக்கு சொல்லிட்டா போனாங்க இவங்களத்தான் நா கொல்லப்போறேன்னு.

சினிமா படத்துக்கு விமர்சனம் பண்ற மாதிரி கருத்தெழுத இதொண்ணும் சூட்டிங் இல்லீங்க. அதோட அது ஒலி்ப்படமில்ல ஒளி்ப்படம்.

தமிழே ஒழுங்கா தெரியல...தமிழரைப்பற்றி...???

உதயசங்கர் said...

அதுசரிங்க, இதை ஏங்க ஆன்மீகம்/இலக்கியம் வகையறாக்குள்ள சேர்த்தீங்க.

என்னா சார், எல்லாமே தப்பு தப்பா..

Balaji said...

உதயசங்கர்,

ஐயா, இது என்னுடைய வலைப்பதிவு. வாக்குமூலம் அல்ல. இங்கு ஒற்றுப்பிழைகள் நேருவது இயற்கையே!

நான் 'பிரபாகரன்' படத்தை பார்க்கவில்லை. என்னையும் மற்றவர்களையும் பார்க்கவிடாமல் தடுக்க நினைக்கும் சீமான், சுப. வீரபாண்டியன் ஆகியோரின் ரவுடித்தனத்தை கண்டிக்கவே இந்த பதிவு. நான் என்ன பார்க்கவேண்டும் என்று நிர்ணயிக்க இவர்கள் யார்?

>> அவ என்ன உங்களுக்கு சொல்லிட்டா போனாங்க இவங்களத்தான் நா கொல்லப்போறேன்னு.

ஓ! டக்ளஸ் தேவானந்தா (புலிகளை எதிர்க்கும் தமிழ் அரசியல்வாதி, இலங்கை அமைச்சர்) அலுவலகத்தில் இருக்கும் ஊழியர்களைக்கூட புலிகள் தற்கொலைப்படை வைத்து கொல்வார்களா? தமிழ் உயிர்கள் அவ்வளவு சல்லிசாகிவிட்டதா?

இல்லை, அந்த பெண் ஊனமுற்றவர் என்பதால் ஜெர்மானிய நாசிக்களை விடவும் மோசமான புலிகள் கொஞ்சம் இறங்கிவந்து ஊனமுற்றவர்களை வெடிக்கவைக்கலாம் என்னும் கொள்கையை ஏற்றுக்கொண்டுவிட்டார்களா?

அந்த சமயத்தில் வந்த பத்திரிக்கை செய்தி இங்கே.

தமிழ்மணம்: நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். நான் என்னுடைய பதிவுகளை எங்கும் சமர்ப்பிப்பதில்லை. தமிழ்மணம் கொடுத்த செய்நிரலை என்னுடைய நிரலட்டையில் சேர்த்திருக்கிறேன். அவ்வளவே.

Anonymous said...

வரலாறு தெரியாம எழுதக்கூடாது, உன்னப் பற்றி என்னால் தவறான கண்ணோட்டத்தில் எழுத முடியும் ஆனால் அது தவறு

திருந்த முயலுங்கள்

நன்றி

Anonymous said...

நண்பரே பிரபாகரனை பற்றி வீரமாக மற்றும் லட்சிய வீரனாக எடுக்க தமிழகத்தில் கருத்து சுதந்திரம் இருந்தால், தாரளமாக அந்த இனவெறியர்கள் எடுத்த படத்தை இங்கு திரை இடலாம்.கருத்து சுதந்திரம் ஒரு பக்க நாணயம் இல்லை தானே நண்பரே.

Balaji said...

பிரபாகரனைப் பற்றி படம் எடுக்க இங்கு யார் தடுத்தார்கள்? குற்றப்பத்திரிக்கை என்றொரு படம் வந்தது. அது சொல்லவந்த கதை எனக்குத் தெரியாது. முன்னாள் இந்தியப் பிரதமரை கொன்றதை அவர்கள் ஞாயப்படுத்தியிருக்கலாம். எனினும் அந்தப் படத்தை வெளியிடக் கோரி போராட்டம் நடந்தால் நான் ஆதரிக்கத் தயார்.

அது தவிர Terrorist என்னும் சந்தோஷ் சிவன் படம் வந்து விருதெல்லாம் வாங்கியது. கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளிட்ட படங்களில் இலங்கை பிரச்சனை பற்றி கொஞ்சம் பேசியிருக்கிறார்கள். சமீபத்தில் கன்னடத்தில் சிவராசன் உள்ளிட்டோரின் பெங்களூரு வாசம் படமாக்கப் பட்டுள்ளது.

நிற்க. இட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளாலும் தீவிரவாத அமைப்பாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள புலிகளைப் புகழ்ந்து யார் படமெடுப்பார்கள்? பிரபாகரன் இந்தியாவில் ஒரு கொலைக் குற்றவாளி என்பதை நினைவில் கொள்க.

Anonymous said...

பாலாஜி
தற்கொலை புலிகள் மட்டும் அல்ல இணையத்தில் உலாவரும் பல இலங்கை தமிழர்களும் மூளையை கழட்டி வைத்து விட்டு புலி கோசம் போடு ஆட்களே. இவர்களை இவ்வாறு ஆக்க தூண்டியது இலங்கை ரானுவம் என்பது மறுக்க முடியாதது. இலங்கை பிரச்சனை என்பது
சைனீஸ் நூடுல்ஸ் போல முடிவு இல்லாதது.

Anonymous said...

பாலாஜி அடங்கு

Balaji said...

ம்... இலங்கைப் பிரச்சனை ஒரு முக்கிய கட்டத்தை நெருங்குவதாக நான் நினைக்கிறேன். அடுத்த சில மாதங்களில் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டுவிடும் என்று கருத இடமிருக்கிறது. கிழக்கில் மாகாண தேர்தல்களும் முடிந்துவிட்டால் அந்த பகுதி stabilize ஆகிவிடும்.

ராஜபக்ஸே அரசின் unitary கொள்கைகள் தமிழருக்கு திருப்தியளிக்காமல் இருக்கலாம். ஆனால் ராஜபக்ஸே புலிகளை அழித்தொழிப்பார் என்றே நினைக்கிறேன். இந்திய இராணுவமும் (முந்தைய பாவங்களுக்கு பிராயசித்தமாக?!) புலிகளை அழிப்பதில் ஒத்தொழைக்க ஆரம்பித்துள்ளது. பிரபாகரன் கொல்லப்படுவதும் சீக்கிரத்தில் நடந்துவிடும் என்பதே என் கணிப்பு மற்றும் விருப்பம்.

சமீபத்தில் ஈழம்பற்றி தமிழகத்தில் நிறைய செய்திகள் வருவதற்குக் காரணம் புலிகளின் கடைசிக் கதறல் கேட்டு அவர்களின் அனுதாபிகள் எழுப்பும் சத்தமே! அழியவேண்டிய அமைப்புக்காக அழாமல் ஈழ சனநாயக அமைப்புகளை இந்தியத் தமிழர் ஆதரிக்கவேண்டும்.

'kutty" said...

ennudaiya radhdha sonthangkaL angku urimaikaLukkaakavum, uNarvukaLukkaakavum poraadik koNdirukum neradhdhil avarkaLukku kidaidhdha oru vazidhaan pirapaakaran... avarkaL edudhdhu koNda vazikaL veNdumaanaal dhavaRaanadhaaka irukkalaam... oru sinna puunai kuuda dhannai dhaakka varupavanai dhiruppi dhaakkaaviddaalum edhirdhdhu oru seeNdalaiyaavadhu seeNdum... adhudhaan ilangkaiyilum nadanthu koNdirukkiRadhu... ungkaLai pola karudhdhukaL koNda oru silaraaldhaan dhamiz eelam innum vidiyavae illai... eeladhdhil uLLa dhamizarkaL muuLai salavai seyyappadukiRaarkaLaa??? neengkaL eeladhdhil dhangki iruntheerkaLaa? illai ungkaLukku adhu paRRiya dhakaval enkirunthu kidaidhdhadhu.. ilangkai dhamizarkaLin sudhanthiradhdhukku dhaRpodhu poraada pirapaakaranai dhavira veRu vaziyillai..
ungkaLin karudhdhurimaiyai naan madhikkiRen.. aanaal adhaRkaaka ennavellaamo ezudha veNdaam.. vidudhalai pulikaL dhavaraanavarkaL alla. dhavaraaka purinthu koLLappaddavarkaL.. 'prabhakaran" padadhdhil enna vanthirukkiRadhu enpadhu ungkaLukku dheriyumaa? eela vidudhalai poraaddam enpadhu oru dhavaRaana poraaddam enRu sidhdharikkappaddirukkiRadhu.. naam sudhanthira inthiyaavil piranthadhinaal namakku adhanudaiya ardhdham viLangkavillai enRae karudhukiRen..

Balaji said...

குட்டி,

//என்னுடைய ரத்த சொந்தங்கள் அங்கு உரிமைகளுக்காகவும், உணர்வுகளுக்காகவும் பொராடிக் கொண்டிருகும் நெரத்தில் அவர்களுக்கு கிடைத்த ஒரு வழிதான் பிரபாகரன்... அவர்கள் எடுத்து கொண்ட வழிகள் வெண்டுமானால் தவறானதாக இருக்கலாம்... ஒரு சின்ன பூனை கூட தன்னை தாக்க வருபவனை திருப்பி தாக்காவிட்டாலும் எதிர்த்து ஒரு சேண்டலையாவது சேண்டும்... அதுதான் இலங்கையிலும் நடந்து கொண்டிருக்கிறது... உங்களை பொல கருத்துகள் கொண்ட ஒரு சிலரால்தான் தமிழ் ஏலம் இன்னும் விடியவஎ இல்லை... ஏலத்தில் உள்ள தமிழர்கள் மூளை சலவை செய்யப்படுகிறார்களா??? நேங்கள் ஏலத்தில் தங்கி இருந்தேர்களா? இல்லை உங்களுக்கு அது பற்றிய தகவல் என்கிருந்து கிடைத்தது.. இலங்கை தமிழர்களின் சுதந்திரத்துக்கு தற்பொது பொராட பிரபாகரனை தவிர வெறு வழியில்லை..
உங்களின் கருத்துரிமையை நான் மதிக்கிறென்.. ஆனால் அதற்காக என்னவெல்லாமொ எழுத வெண்டாம்.. விடுதலை புலிகள் தவரானவர்கள் அல்ல. தவராக புரிந்து கொள்ளப்பட்டவர்கள்.. 'ப்ரப்ககரன்" படத்தில் என்ன வந்திருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? ஏல விடுதலை பொராட்டம் என்பது ஒரு தவறான பொராட்டம் என்று சித்தரிக்கப்பட்டிருக்கிறது.. நாம் சுதந்திர இந்தியாவில் பிரந்ததினால் நமக்கு அதனுடைய அர்த்தம் விளங்கவில்லை என்றஎ கருதுகிறென்.//

புலிகள் போனால் எல்லாம் முடிந்தது என்னும் கருத்து தவறானது. புலிகள் ஒழிந்தால் சுழல் 1985 நிலைமைக்கு முன்புபோல ஆகலாம். ஈழ சுதந்திரத்தை ஆதரிக்க உலகில் யாருமே தயாராகயில்லை. ஆனால் அமைதி வழியில் அவர்கள் மனித உரிமைகளுக்காகப் போராடினால் பலர் ஆதரிக்க முன்வரக்கூடும். புலிகள் அழிவது ஈழத்துக்கு இருபது ஆண்டுகளில் நடக்கும் முதல் நல்ல விசயம்.

Balaji said...

சிறிதரண்,

நீங்கள் பயன்படுத்திய கெட்ட வார்த்தைக்காக உங்கள் கருத்து நிராகரிக்கப்பட்டது.

//நீங்கள் 'பிரபாகனையும் பார்க்கவில்லை குற்றப்பத்திரிக்கை யும் பார்க்கவில்லை//

வெளியே வராத படங்களை எப்படி ஐயா நான் பார்க்கமுடியும்?

ஸ்ரீசரண் said...

குற்றப்பத்திரிக்கை வெளி வரவில்லை என்று யார் சொன்னது
சென்னையில் திரையரங்கிலே அந்தப்படத்தை நான் பார்த்தேன்.
உங்கள் அகராதியில் மயிர் என்பது கேட்டவார்தையோ ?

வெத்து வேட்டு said...

everone should know that ltte is the one who killed and eliminated all other political and armed tamil groups the reason ltte said for their elimination is they are working with GOSL and India
LTTE hijacked all Tamil causes and now shouting they are the only representatives of tamils...
can a common man in Kilinochi go an tell ltte "please leave us alone" and expect to remail "ALIVE" another day?
that is LTTE's tamil representation...
right now LTTE is Tamils' curse and it is a boon for SLGOV.

Balaji said...

குற்றப்பத்திரிக்கை படமும் வெளிவந்துவிட்டதா? வாய்ப்பு கிடைத்தால் பார்க்கிறேன். அப்புறம் கருத்துச் சுதந்திரமில்லை என்று எதற்கு குதிக்கிறார்கள்?

Balaji said...

கடைசி பெயரிலி மற்றும் பிறருக்கு,

எனக்கு இலங்கைப் பிரச்சனை பற்றி ஒன்றும் தெரியாது என்னும் சிறுபிள்ளைத்தனமான கருத்துகளுக்கு பதில் சொல்லி நேரத்தை மேலும் வீணாக்க விரும்பவில்லை. புலிகளை ஆதரிக்காதவனெல்லாம் தமிழ் விரோதி என்பவர்களைப் பார்த்து நான் சிரிக்கத்தான் முடியும்.

இலங்கைப் போராட்டம் ஆயுதப் போராட்டமானது இந்திய அரசின் விவரங்கெட்டத் தனத்தால் வந்தது என்பதை நீங்கள் முதலில் புரிந்துகொள்ளவேண்டும். வங்காள முக்தி பாகினி, நேபாள மாவோயிஸ்டுகள் என்று இந்தியா ஆதரித்த பிற தீவிரவாத அமைப்புகள் சட்டினியாக ஆரம்பிக்கப் பட்டவைதான். அந்நாடுகளில் அரசியல் போராட்டத்துக்கு தோதாக தீவிரவாத அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. பிற்காலத்தில் இந்தியா நேரடியாக தலையிட்டு பிரச்சனைத் தீர்த்துவைத்தது.

இலங்கையில் அத்தகைய முயற்சி வெற்றி பெறவில்லை. பிரபாகரன் என்னும் சர்வாதிகாரி அமைதியை ஏற்படுத்த அனுமதிக்கவில்லை. IPKFஐ வெளியேற்றியது, ராஜீவைக் கொன்றது, பிற தீவிரவாத அமைப்புகளை அழித்தது, தமிழ் அரசியல்வாதிகளை தேடித்தேடிக் கொன்றது, உலக நாடுகள் அனைத்தும் ஆதரித்த சமீபத்திய பேச்சு வார்த்தைகளை "naval escort" உள்ளிட்ட சாதாரண காரணங்களுக்காகக் கெடுத்தது, லக்ஷ்மன் கதிகாமரைக் கொன்றது என்று வரிசையாக புலிகள் அமைப்பு பிரபாகரனின் கூலிப்படை என்பதும் அதற்கும் ஈழத்தமிழருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதும் பல முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவமும் தன்னால் முடிந்த அட்டுழியங்களை செய்திருக்கிறது. ஆயுதமேந்திய எந்தக் கூட்டமும் அப்படித்தான் செயல்படும். ஈழப் பிரச்சனை அரசியல் ரீதியாக தீர்க்கப்படவேண்டியது. அதற்கு தடையாக இருப்பது பிரபாகரன் என்னும் சர்வாதிகாரி மட்டும்தான். ஈழத்தின் இன்றைய தேவை ஓரே தோட்டா. பிரபாகரனின் மூளையை சிதறச்செய்யும் ஒரே தோட்டா!

அதற்கு பின்பு ஈழத்தில் உடனே பாலாறு ஓடிவிடாது. ஈழப்பிரச்சனை தீர ஈழத்தவர் தான் போராட வேண்டும். காசு மற்றும் சில உறவினர்களை அந்த பொறுக்கிகளிடம் தாரை வார்த்ததினால் உங்கள் வேலை முடிந்துவிட்டதாகாது. நீங்கள் தொடர்ந்து போராடவேண்டும். தமிழ் பேசுவதாலேயே தமிழகத்தவர் உங்கள் வேலையை செய்வர் என்று எதிர்பார்க்காதீர்கள். அமைதி வழியில் போராடினால் ஆதரவு மட்டும் நிச்சயம்.

Anonymous said...

உன் வீட்டார் உன் முன்னால் ஓட்டுத் துணியில்லாமல் ஓட விட்டால் என்ன செய்வாய்

கருப்பு ஜூலையை பற்றி தெரியுமா உனக்கு

இலங்கை தமிழர்கள் அறப்போர்ப் புரிந்து பின்பு தீவிரவாதத்தைத் தழுவினார் என்பது தெரியுமா உனக்கு

பிரபாகரன் சாதாரண மனிதனாக இலங்கை வெறியர்களை எதிர்த்துப் போரிட்டு பின்பு தலைவானன் என்பது தெரியுமா உனக்கு

ராஜீவ் செய்த போக்கிரித்தனத்தை பற்றித் தெரியுமா உனக்கு


தெரியாமல் உளறாதே பாலாஜி

ரவிசங்கர் said...

பாலாஜி,

நீங்கள் எத்தனை ஈழத் தமிழர்களிடம் நேரடியாகப் பேசிப் பழகி அந்நாட்டு நடப்புகளை அறிந்து கொண்டு இருக்கிறீர்கள் என்று அறியலாமா? அப்படி நீங்கள் கண்ட அனைவரும் மூளைச்சலை செய்யப்பட்டுள்ளதாக நினைக்கிறீர்களா? இல்லை, நீங்கள் கண்ட அனைவரும் மூளைச்சலவை செய்யப்படாமல் உங்களைப் போன்று சிந்திக்கிறார்களா?

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஈழத்தை ஒத்த இனப்பிரச்சினை உடைய எத்தனை நாடுகள் அறவழியில் மட்டுமே போராடி தனி நாடு பெற்றன அல்லது மேம்பட்ட உரிமைகள் பெற்றன என்பதை விரிவாக, தெளிவாக ஒரு கட்டுரைத் தொடராக எழுதினால் மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள் தெளிவடைய உதவுமே. ..

கூகுள் வீடியோவில் குற்றப்பத்திரிக்கை படம் பாருங்கள். உண்மையில் இதில் புலிகளை மூன்றாம் தர தமிழ்த் திரைப்படக் கயவர்கள் போல் தான் சித்தரித்திருக்கிறார்கள். இந்தப் படத்தைக் கூட தடை செய்யும் இந்தியாவின் கருத்து சுதந்திரம் புல்லரிக்க வைக்கிறது.

terrorist, கன்னத்தில் முத்தமிட்டால், நந்தா எல்லாம் ஈழப்பிரச்சினையின் தீவிரத்தை எடுத்துரைப்பதாக உணரவில்லை. சோளப் பொறி சாப்பிட்டுக் கொண்டு பார்க்க வேண்டிய படங்கள்..

Balaji said...

ரவி,

தெருவில் போகும் ஈழத்தமிழரிடம் பேசுவது, படங்களைப் பார்ப்பது ஆகியவற்றையெல்லாம் வைத்து இவ்விசயத்தில் கருத்தை ஏற்படுத்திக்கொள்வது தவறான செயல்.

இரு பக்கமுள்ள விசயத்தில் ஒரு தரப்பு வாதத்தை மட்டும் கேட்டு முடிவுசெய்யலாமா? நான் பல வருடங்களாக இலங்கை பிரச்சனை குறித்த செய்திகளை படித்து வருகிறேன். இப்போதும் bbc, tamilnet.com, dailymirror.lk, island.lk, asian tribune, hindu, b.raman's articles in outlook, dbs jeyaraj's articles என்று பலதரப்பு வாதங்களை கேட்டபின்புதான் என்ன நடக்குது என்று முடிவுக்கு வருகிறேன்.

>> எத்தனை நாடுகள் அறவழியில் மட்டுமே போராடி தனி நாடு பெற்றன

அறவழியில் மட்டுமே என்றால் யோசிக்கவேண்டும். South Africa? மற்றபடி East Timor, Bangaladesh, Northern Ireland என்று பல நாடுகளில் அரசியல் கட்சிகள் முன்னின்று நடத்திய போராட்டங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன.

Balaji said...

இந்தியாவில் தனித்தமிழ்நாடு கோரிக்கை எவ்வளவு அபத்தமானதோ அவ்வளவு அபத்தமானது தனி ஈழக் கோரிக்கை. பெரும்பான்மையினரும் சிறுபான்மையினரும் ஒற்றுமையாக வாழ்வது என்பது ஒரு கலை. அது ஈழத்தமிழருக்கு விளங்குவதேயில்லை.

சமீபத்திய திபெத் போராட்டத்தில்கூட "சுதந்திரம் தேவையில்லை", "நாம் சீனர்களின் மேல் வெறுப்பு ஏற்படுத்திக்கொள்ளக் கூடாது" என்று தலாய் லாமா எதற்கு சொல்லிக் கொண்டிருக்கிறார்?

இந்தியாவில் முஸ்லீம்கள் எப்படி வாழ்கிறார்களோ அப்படித்தான் இலங்கையில் தமிழர் வாழவேண்டும். அவ்வப்போது இந்தியாவில் முஸ்லீம்கள் துன்புறுத்தப் படுகிறார்கள். உடனே பெரும்பான்மை சமூத்தவரே அதைக் கண்டித்து, ஒற்றுமையை நிலைநாட்டுகிறார்கள். முஸ்லீம்களும் விட்டுக்கொடுத்து நல்ல உறவுகளை பராமரிக்கிறார்கள்.

அப்படியே பாகிஸ்தான் போல போகவேண்டுமென்றால் தனிநாடாக செயல்படும் தகுதி ஈழத்துக்கு இருக்கவேண்டும். பிரபாகரன் மாதிரி பொறுக்கியிடம் ஈழத்தமிழரை ஒப்படைத்தால் இலங்கை அரசைதான் எல்லோரும் திட்டுவார்கள்!

ரவிசங்கர் said...

தெருவில் போகிற ஈழத்தவரின் கருத்துக்களை எல்லாம் கவனிக்க கூடாது என்றீர்கள். நாட்டுக்கு வெளியில் இருந்து நாட்டாமை பண்ணி பத்தி எழுதுபவர்களின் அறிவாளித்தனத்தை மெச்சும் முன் நேரடியாக நிகழ்வுகளில் பாதிக்கப்பட்ட தெருவோர ஈழத்தவர்களின் உணர்வுகளை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். வாழப் போவதும் சாகப் போவதும் அவர்கள் தான் என்பதால் தங்களுக்கான தீர்வை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

**

ஏதோ சிங்கள அரசு அமைதிப் புறா போலவும் தமிழர்களுக்குத் தான் ஒத்து வாழத் தெரிய வில்லை என்பது போன்றவும் உங்கள் இடுகை அயர வைக்கிறது.

**

இந்திய முசுலிம்களையும் இலங்கைத் தமிழர்களையும் ஒரு பேச்சுக்கு கூட ஒப்பு நோக்கி தீர்வு சொல்வது முட்டாள்த்தனமாக இருக்கிறது. இலங்கையின் அரசியல் சாசனமே தமிழர்களுக்குப் பல வகையிலும் பாரபட்சமாக இருக்கிறது. அதையும் இந்தியாவில் ஒரு சில சமயங்களில் ஒரு சில இடங்களில் முசுலிம்களுக்கு எதிராக நிகழ்பவற்றையும் ஒப்பு நோக்க இயலாது.

**

நீங்கள் சொன்ன மற்ற நாடுகள் குறித்து தெரியாது. வங்கப் பிரச்சினையும் இலங்கைப் பிரச்சினையும் ஒன்றல்ல.

**
தமிழீழப் பிரச்சினை, நிகழ் காலத் தமிழ் - அதன் வருங்காலம் போன்று பல விசயங்களிலும் உங்கள் கருத்துக்களுடன் எதிரெதிர் முனையில் இருக்கிறேன். உரையாடிப் பயன் இருக்கும் என்று தோன்றவில்லை. எனவே, இது போன்ற விசயங்களில் நீங்கள் எழுதும் இடுகைகளில் கருத்து சொல்வது கூட நேரத்தை வீணாக்கும் என்பதால் புறக்கணிப்பதே வழி.

**

நன்றி

Balaji said...

ரவி,

Tamilnet.com புலிகளின் பத்திர்க்கைதானே? அதையும்தான் நான் படிக்கிறேனே? வெளிநாடுகளில் அகதிகளாக வாழும் ஈழத்தமிழர் கருத்துகள் impartialஆக இருக்க வாய்ப்பில்லை என்பதால் அவர்கள் கருத்துக்களை பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்று சொன்னேன்.

அவர்கள்தான் வாழப் போகிறார்களென்றால் தேர்தலில் ஓட்டுபோட்டு அவர்கள் தலைவர்களை தேர்ந்தெடுக்கட்டும் என்று நான் சொல்வதா இல்லை வானத்திலிருந்து குதித்த பிரபாகரன் வழி அவர்கள் நடக்கவேண்டுமென்று சொல்லவேண்டுமா?

சிங்கள் அரசின் அடக்குமுறைகள் எனக்குத் தெரிந்தேயிருக்கின்றன. ஆனால் அவை இந்தியாவில் முஸ்லீம்களுக்கு எதிரான அடக்குமுறைகள் அளவுதான் என்னும் என் கருத்தில் பின்வாங்க விரும்பவில்லை. அமெரிக்காவில் 1960 வரைகூட slavery சட்டப்பூர்வமாக இருந்தது. அதைவிடவா தமிழரின் நிலை இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தில் கவலைக்கிடமாக இருந்தது? இந்தியாவில் முஸ்லீம்கள் அளவுக்கு இலங்கையில் தமிழருக்கு பாதுகாப்பு வேண்டுமென்றால் அதை சுமூகமாக எடுத்துச்சொல்லித்தான் பெறவேண்டும்.

கோதரா சம்பவம் எப்படி குஜராத் இந்துக்களை முஸ்லீம்களுக்கு எதிரான கலவரத்தைக் கண்டுகொள்ளாமல் செய்ததோ, அதே போல விடுதலைப் புலிகள் உள்ளிட்ட அமைப்புகளின் தேவைக்கு அதிகமான வன்முறை, நாட்டை துண்டாடும் முயற்சி ஆகியவை பெரும்பான்மை சிங்களவரை இலங்கை இராணுவத்தின் அட்டுழியங்களை கண்டுகொள்ளாமல் இருக்கச்செய்கிறது.

தமிழர்கள் சும்மா ஊதிப்பெரிதாக்கி "the point of no return"க்கு கொண்டு சென்றுவிட்டு இப்போது வழிதெரியாமல் முழிக்கிறார்கள். சுதந்திரமடைந்த பின்பு இந்தியாவில் முஸ்லீம்களின் காவலனாக காங்கிரஸ் செயல்பட்ட அளவு தமிழரின் காவலனாக ரணில் விக்ரமசிங்கேவின் UNP செயல்பட முடியும். வாய்ப்புக் கொடுத்தால்.

----

நாமிருவரும் கிரந்த எழுத்து, தமிழ்ப் புத்தாண்டு மற்றும் ஈழம் விசயத்தில் வேறுபடுவது எனக்கு ஒன்றும் பெரிய விசயமாகப் படவில்லை. உங்களுக்கு "கடவுள் இருக்கிறாரா?", "புலால் உண்ணலாமா?" என்பது மாதிரி விசயங்களில் கருத்து இருந்தால் அதிலும் நாம் அடித்துக்கொள்ளலாம்!

"Fools seldom disagree" என்பது மாதிரி எல்லா விசயத்திலும் நாம் ஒத்த கருத்து கொண்டிருந்தால் நாம் சிந்திப்பதை நிருத்திவிட்டோம் என்று ஆகிவிடும்!

Anonymous said...

மனிதர்களில் எத்தனை வகை - வாழ்க தமிழ், வளர்க மகிந்த சிந்தனை- ஒழிக தமிழின துரோகிகள்

இப்படியும் மனிதர்களா,தன் இனத்தை அழிப்பதில் தன் இனத்தை காட்டி கொடுப்பதில் என்னவெல்லாம் இவனுடைய தந்திரங்கள். இவன் புத்தி மட்டும் ஏன்தான் இப்படி போகிறதோ. இவனுடைய இந்த புத்திதான் இன்னும் தமிழர்களை இன்னல் பட வைக்கிறது. தமிழன் என்று சொல்லும் இவன் மறுபுறம் ஹை மகிந்த எப்படி இருக்கேள் என்று கை குலுக்கி மகிழ்பவன். நன்னா கொல்லும் இவாளை எல்லாம். நாங்க இங்க ஒன்னும் தெரியா பாமரனை எப்படியும் ஏமாத்திடுவோம். நீர் நன்னா கொல்லும். அப்படியே எங்காத்தையும் கவனிச்சேள்-னா புண்ணியமா போவும். 4 கார்தான் இருக்குது, பிள்ளையான் ரொம்ப நாளா ஒரு மெர்சிடிஷ் ஆசை படறான்.

வட,கிழக்கு தோல்வியை கூட எப்படி போட்டேன் பாத்தேளா. நீர் சொல்றதை அப்படியே எந்த மாற்றமும் இல்லாம போடறேன். இப்ப கப்பல் ரெண்டா உடைஞ்சப்ப்ப கூட ஆழ்கடலில் மண் தட்டி உடைஞ்சதா எப்படி போட்டேன் பார்த்தேளா.

நம்ம குட்டிஷ் எல்லாம் தமிழ்மணத்திலே நல்லாவே தமிழ் மக்களை பிரிக்கற தந்திரத்தை கையாள்றா. ஆனால் பாருங்கோ நம்மால புலி பத்தி எழுத அது மாறி போயி, புலிகள் மேல் இப்ப தமிழ் பாசம் கூடி போச்சு. எல்லாரும் போராட ஆரம்பிச்சுட்டா. அதனால இப்ப அங்கே சாதி வெறி இருக்க மாதிரி ஒரு முயற்சியை பண்ணிண்டு இருக்கோம். யாரும் கேட்கவே மாட்டேங்கரா. ஆனால் நீர் வழக்கம் போல அதை குறைச்சிடாதேயும். அது வந்துட்டே இருந்தாதான் நம்மாள் ஒழுங்கா ஏதாவது பொய்பிராசாரம் பண்ணுவால்.


இப்ப பாருங்கோ மக்கள் எல்லாம் நறையா படிக்கறாள், அதனாலே நம்ம ஏமாத்தறது ரொம்ப கஷ்டமா போச்சு. நம்மாள் எழுதறவாள்ல 5% தான். முன்ன மாதிரி இல்ல. முன்ன மாதிரி நம்ம எழுதியதே வேதவாக்குன்னு, இப்ப எல்லாம் கேட்கறது இல்ல அண்ணா. ஏன், ஏதற்கு, ஏப்படி நம்ம சுஜாதா எழுதினாரோ இல்லயோ இவாள் எல்லாம் கேட்க ஆரம்பிச்சுட்டா. விழிப்புணர்வு வந்தாச்சுன்னா மகிந்த அண்ணா.

நம்மாளும் பக்கம் பக்கமா வலைபதிவுல, கரும்புலி எப்படி உருவாகுறான், சாதி அப்படி இப்படின்னு படம் போடத்தான் செய்றான். பிரிக்க முடியல்லைன்னா. பார்க்க தமிழன் காப்பத்தற மாதிரி ஏழுதி கடைசி-ல வருவொம் இல்ல அண்ணன் மகிந்த விருப்பம் எதுவொ அதுக்கே வந்துருவோம்னா. இந்த முட்டா தமிழன்க அதை படிச்சு குழம்பிடுவாங்கண்ணா. வாழ்க தமிழ், வளர்க மகிந்த சிந்தனை.

அப்படியே நீங்க தேர்தல் நடத்துங்கோன்னா, நம்ம தம்பி பிள்ளையான் வெற்றி பெற்றதா அறிவிங்கோ. அப்படியே அவர் தமிழ் நாட்டிலும் வெற்றி பெற்றதா அறிவிங்கோன்னா. நாங்க பார்த்து கொள்றோம் தமிழாளை எல்லாம் எப்படி ஏமாத்தறதுன்னு. யாரும் ரொம்ப பேசினால இறையாண்மை சொல்லிடுவோம் அண்ணா. எல்லாரையும் இப்படியே பயம் காட்டுவோம்.

நீங்க தம்பி சகோ-வை அனுப்புங்க அண்ணா, இந்த தடவை தங்க கம்பளம் விரிக்க சொல்வோம். ஆனால் எங்காத்துலதான பெரியவா தங்கனும் அண்ணா சொல்லிபுட்டேன்.

நமது மக்கள் கரும்புலியாவதும்,குண்டுகளைப் பொருத்தி வெடித்துச் சாவதும் யாரினால் ஏற்பட்டது? என்று எல்லாம் கேள்வி கேட்போம், ஆனால் செஞ்சோலையை பத்தி எல்லாம் சொல்லவே மாட்டோம் அண்ணா. இந்த தமிழ்ன்களை அழிங்கண்ணா. நாம வார்த்தை விளையாட்டு விளையாடி இவனுங்களை குழப்புவோம். ஏமாத்துவோம். நம்ம பெரிசுகள் எல்லாம் நல்லாவே ஏமாத்துவாள். அவாளையும் சேர்த்து களத்தில் இறங்குவோம். சிங்களனா கொக்கா பார்த்திடலாம் அண்ணா. தமிழனை கொல்றதை பத்தி மூச்சி விடமாட்டோமே. கொல்லுங்கண்ணா கொல்லுங்க.

- நன்றி மைக்

Balaji said...

ஹலோ?! இந்த சாதித் தாக்குதலையெல்லாம் வேற எங்காவது செய்யுங்க. கடவுள், பிராமனீயம் பற்றிய என்னுடைய கருத்துக்கள் உங்களுக்குத் தெரியவில்லைன்னு நினைக்கிறேன். சாதியின் பெயரால் என்னை துன்புறுத்த நினைப்பவர் முகத்தில் காறி உமிழும் அளவுக்கு என் அறிவும் செயல்களும் கருத்துகளும் திடமானவை.

-----

செஞ்சோலை பத்தி சொல்லி எத்தனை கொலைகளைய்யா நியாயப் படுத்துவீங்க? நான் கரும்புலிகள் சவ நிர்வாண ஊர்வலம் செய்யப்பட்டதைக் கண்டித்தபோதும், தமிழ்ச்செல்வன் மரணத்துக்கு வருந்தியபோதும், நீலன், கதிர்காமர் கொலைகளைக் கண்டித்தபோதும் உங்கள் கண்ணில் தெரியாத என் 'சிங்கள ஆரியப் பற்று', உங்களுடைய இனவெறி, தீவிரவாதம் மற்றும் மனிதாபிமானமற்ற கருத்துக்களை நான் கண்டிக்கும்போது மட்டும் தெரிகிறதா?

அருண்மொழி said...

அது சரி, இலங்கை ரானுவத்தால் சுடப்படும் தமிழக மீனவர்களை பற்றி உங்கள் கருத்து என்ன

குற்றப்பத்திரிகை படம் சென்ஸாரில் இருக்கிறதே. அது பற்றி உங்கள் கருத்து என்ன

Balaji said...

பெரும்பாலான சமயங்களில் தமிழக மீனவர்கள் இந்தியக் கடல் எல்லையைத் தாண்டி, இலங்கை கடலிலோ, சர்வதேச கடலிலோ இருக்கும்போதுதான் சுடப்படுகிறார்கள்.

புலிகளின் கடத்தல் தொழிலுக்கும், தீவிரவாதத்துக்கும் இந்திய மீனவர்கள் உதவுவதால் இலங்கை இராணுவம் தேவையின்றி தமிழக மீனவர்களை சந்தேகித்தாலும் அது புரிந்துகொள்ளக்கூடியதே.

குற்றப்பத்திரிக்கை படம் வெளியாகிவிட்டதாகத் தெரிகிறது. மேலே அதுபற்றி விவாதித்து அகிவிட்டது. 'The DaVinci Code' முதல் குற்றப்பத்திரிக்கை, பிரபாகரன் வரை எந்த படத்தையும் அரசியல் காரணங்களுக்காகத் தடுப்பதை நான் கண்டிக்கிறேன்.

Anonymous said...

கண்டிப்பா குப்பை வலையேதான்!

Anonymous said...

//பிரபாகரன் இந்தியாவில் ஒரு கொலைக் குற்றவாளி என்பதை நினைவில் கொள்க.//
நினைவு படுத்தியமைக்கு நன்றி. ஆனாலும் நீங்களும் நினைவு படுத்திக் கொள்ளுங்கள், ராஜீவ் காந்தி ஈழத்தில் ஒரு கொலைக் குற்றவாளி என்பதை. நன்றி.

காசிபாரதி said...

நான் பார்த்ததிலேயே ஒரு சிறப்பான மடையனின் வலைப்பதிவு இது