Friday, January 30, 2009

சிங்களவரைவிட தமிழர் நமக்கு நெருங்கியவர்களா? எப்படி?

இந்தியன் எக்ஸ்பிரஸில் இன்று வெளியாகியிருக்கும் ஃபிரான்சுவா காதியரின் கட்டுரை வாசிக்கத்தகுந்தது. ஒரளவுக்கு நேர்மையாக இலங்கைப் பிரச்சனையை அலசியிருக்கிறார். இதே கருவோடு சில மாதங்களுக்குமுன் நான் எழுதிய பதிவு இங்கே.

"காட்டுமிராண்டி இலங்கைத்தமிழர்கள் சிங்களவரின் சிறிய தவறுகளை பூதாகாரமாக்கி, ஏற்றுக்கொள்ளமுடியாத கோரிக்கைகளை வைத்து, அதற்கு இனத்தை மட்டுமே காரணமாகக் காட்டி தமிழகத்தவரின் ஆதரவையும் பெற்றுவிட்டார்கள்" என்பது இலங்கைப் பிரச்சனைக்கான ஒரு வரி விளக்கம்.

ஆனால் இந்தியர்களுக்கு சிங்களவர்களைவிட தமிழர் நெருங்கியவர்கள் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. மொழி, இனம், மதம் என்று அனைத்து வகையிலும் சிங்களவர் இந்தியரோடு ஒன்றுபட்டவர்களே. தமிழர், சிங்களவர் என்னும் இரு சகோதரர்களில், கடந்த இருபது ஆண்டுகளில், குறிப்பாக இன்று, ஒரளவு நியாயமாக நடந்துகொள்ளும் சிங்களவரையே இந்தியர் ஆதரிக்கவேண்டும்.

2 comments:

அவன்யன் said...

அய்யா நீங்கள் சொல்வது மிகவும் தவறு . உண்மை என்னவென்றால் இப்போது இருக்கும் தமிழர் பல பேருக்கு இலங்கையின் வரலாறு சரியாய் தெரிந்து இருக்க வாய்ப்பில்லை. ஊடக செய்திகளின் தவறான சுட்டி காட்டுதல் பெரும்பாலான மக்களை இலங்கையின் வரலாறு பற்றி தவறாகவே எண்ண வைத்து விட்டது.
உங்களுக்கு பொறுத்த மட்டில் இலங்கை தமிழர் அனைவரும் புலிகள் தாம். இலங்கை என்ற கண்ணீர் தேசத்தின் வரலாறு அதில் தமிழர் எப்படி படிப்படியாய் இரண்டாம் தர மக்களாய் தள்ள பட்டார்கள் என்பதெல்லாம்
உங்களுக்கு தெரியாது. இன்று இந்த நிலைக்கு ஈழ தமிழர் தள்ளப்பட முதல் காரணமாய் இருந்தவர்கள் மதிப்பிற்குரிய ஆங்கில ஆட்சியாளர்கள் தான். அவர்கள் தங்களின் சுய லாபத்திற்காக சிங்கள பெரும்பான்மை மக்களின் அடி வருடி தங்கள் ஆட்சியை பாதுகாத்து கொண்டனர். அன்று ஈழ தமிழரின் அடிப்படை வேண்டுகோள்களை செவி மடுத்து அவர்கள் கேட்டு இருந்தால் இன்று எம் மக்கள் இப்படி ரத்தம் சிந்தி இருந்து இருக்க வேண்டி இருக்காது.

Balaji Chitra Ganesan said...

// இன்று இந்த நிலைக்கு ஈழ தமிழர் தள்ளப்பட முதல் காரணமாய் இருந்தவர்கள் மதிப்பிற்குரிய ஆங்கில ஆட்சியாளர்கள் தான். //


ஐயா, இது அண்டப்புளுகு! ஆங்கில ஆட்சி காலத்தில் தமிழர்கள் அளவுக்கதிகமான பதிவிகளையும், அதிகாரங்களையும் அனுபவித்து வந்தனர் என்பது இலங்கை வரலாறு படித்த எல்லோருக்கும் தெரியும்.

அதே சமயத்தில் சுதந்திரத்துக்குபின்பும், குடியரசான பின்பும் (1972) சிங்கள அமைப்புகளின் நெருக்குதலால் இலங்கை அரசுகள் தமிழருக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டன என்பதும், அதை எதிர்த்து அறவழியில் போராடிய தமிழர் அமைப்புகளுக்கு உலகத்தவரின் ஆதரவு இருந்தது என்பதும் உண்மையே.

பிரச்சனை விபரீதமானது இலங்கையில் இந்தியா ஆரம்பித்த தீவிரவாதத்தினால் தான். 1983இல் இந்திய இராணுவமே நேரடியாக இறங்கியிருந்தால் பிரச்சனை இவ்வளவு மோசமாகியிருக்குமா என்று தெரியவில்லை.

மற்றபடி இலங்கைத் தமிழரும், சிங்களவரும் இந்தியருக்கு வேண்டியவர்களே. சிங்களர் அத்துமீறியபோது தமிழருக்கு இந்தியா ஆதரவு அளிக்கத் தவறவில்லை. இன்று தமிழரின் இனவெறிவாதம் தலைவிரித்து ஆடும்போது அதை நசுக்க இலங்கை அரசுக்கு உதவவும் தவறவில்லை.