Wednesday, January 14, 2009

இந்தியத் திருநாள் வாழ்த்துகள்!

அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்!

இன்றைய தினம் இந்தியாவின் பல பகுதிகளிலும், ஒரே காரணத்துக்காக, கிட்டத்தட்ட ஒரே விதமாக திருநாளாய் கொண்டாடப்படுகிறது. உழவர் திருநாளான இந்நாள் தவிர்த்து ஒரே நாளில், ஒரே காரணத்துக்காகக் கொண்டாடப்படும் வேறு பண்பாட்டுத் திருநாள் இருப்பதாகத் தெரியவில்லை.

தீபாவளி இந்தியா முழுக்கக் கொண்டாடப்பட்டாலும் அது கொண்டாடப்படும் விதமும், காரணமும் பெரிதும் மாறுபட்டிருக்கின்றன. புத்தாண்டும் பரவலாகக் கொண்டாடப்பட்டாலும் அவரவர் பயன்படுத்தும் நாட்காட்டி கொண்டு வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது.
நவராத்திரி கொண்டாடப் படுவதன் காரணமும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் முற்றும் வேறுபட்டிருக்கிறது.

இந்தியாவில் சங்கராந்தி எந்த பகுதியில், என்ன பெயரில், எவ்வாறு கொண்டாப் படுகிறது என்கிற பட்டியல் கீழே! எல்லா பகுதிகளிலுமே சூரியன் மகரரேகையிலிருந்து மீண்டும் வடக்கு நோக்கித் திரும்பும் நாள்தான் திருநாள். உழவர்கள் அறுவடை முடிந்த சந்தோஷத்தில் கொண்டாடுவதே காரணம்.

தெற்கு:

1. தமிழகம் - பொங்கல் - முதல் நாள் போகியன்று நெர்களைந்த கதிர்களை தீயிட்டு கொளுத்தி சுத்தம் செய்து, அடுத்த தினம் பொங்கலிட்டு சூரியனை வழிபடுகிறார்கள். அடுத்த இரண்டு நாட்கள் மாட்டுப்பொங்கலாகவும் காணும் பொங்கலாகவும் கொண்டாடப்படுகின்றன.
2. ஆந்திரா - பெத்த பண்டுகா - தமிழகத்தை போன்றே போகி, சங்கராந்தி, கணுமா, முக்கணுமா என்று நான்கு நாட்கள் கொண்டாடுகிறார்கள். பட்டம் விடுதலும் உண்டு.
3. கர்நாடகம் - சங்கராந்தி - எள்ளும், வெல்லமும் கலந்த 'எள்ளு-பெல்லா' என்ற திண்பண்டம் இங்கே சிறப்பு.
4. கேரளா - சங்கராந்தி - இங்கு சூரியனின் உத்தராயணம் கொண்டாடப்பட்டாலும் அது உழவர் திருநாளாக இல்லை. ஓணமே அவர்களது உழவர் திருநாள்.

வடக்கு:

1. பஞ்சாப் - லோஹிரி/மகி - லோகிரியன்று தீயில் கறும்பு, அரிசி ஆகியவற்றை கொளுத்தி, சுற்றி வந்து பாட்டுப்பாடி நடனமாடுகிறார்கள். அடுத்த நாள் மகி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.
2. உத்தராஞ்சல் - கூகுடியா - அரிசியும், பருப்பும் கலந்த கிச்சிடியை சூரியனுக்கு படைக்கின்றனர். 'காலே கவ்வா' (கருப்புக் காகம்) என்று குழந்தைகள் பாடி காகங்களை கிச்சிடி சாப்பிட அழைக்கின்றனர்.
3. உத்திர பிரதேசம் - கிச்சிடி - கங்கையில் குளித்து சூரியனைக் குறிக்கும் காயத்ரி மந்திரம் சொல்லி கிச்சிடி படைக்கிறார்கள்.
4. மத்திய பிரதேசம் - சுக்ராத் - இனிப்பு பலகாரங்கள் இங்கு சிறப்பு.

கிழக்கு:

1. அசாம் - உருகா/போகாலி பீகு - முதல் நாள் உருகாவில் 'பேலாகர்' என்ற சக்கைகளிலான வீடு கட்டப்பட்டு மேஜி என்ற பெயரில் தீ கொளுத்தப்படுகிறது. அடுத்த நாள் போகாலி பீகு அன்று சூரியனை வழிபடுகிறார்கள். படங்கள் இங்கே.
2. ஒரிசா - சங்கராந்தி - போகி எரித்தலும், மறுநாள் சூரிய வழிபாடும் இங்கும் உண்டு.
3. வங்காளம் - 'கங்கா சாகர்' என்று கங்கை கடலில் கலக்குமிடத்தில் வழிபடுவது இங்கு சிறப்பு.

மேற்கு:

1. மகாராஷ்டிரம் - சங்கராந்தி - எள்ளில் செய்யப்படும் 'தில்குல்' என்ற பண்டம் இங்கே சிறப்பு.
2. குஜராத் - உத்தராயன் - பட்டம் விடுதல் இங்கு விழாவின் முக்கிய அங்கம்.

படங்களுடன் இந்தியா முழுதும் மகர சங்கராந்தி கொண்டாடப்படும் விதங்களை விளக்கும் கட்டுரைகள் கீழே!

1. நிருபமா சிறீராம் என்பவரின் வலைப்பதிவில் இந்த இடுகை.
2. றீடிஃப் தளத்தில் புகைப்படங்கள் இங்கே.
3. இந்து யங் வேர்ல்டில் இந்த கட்டுரை.

பொங்கலோ பொங்கல்!

கொசுறு: பொங்கல் என்பதை ஆங்கிலத்தில் Pongkal என்று எழுதுவதுதான் சரியோ?

7 comments:

RAMASUBRAMANIA SHARMA said...

"ARUMAIYANA PATHIVU NANBARE"...DEFINETELY THIS ARTICLE SHOULD BE WREAD BY "MANIVARMA"...WHO HAS WRITTEN A BIASED ARTICLE...WHICH IS NOT REQUIRED AT THIS MOMENT...BECAUSE...ALL THE PEOPLE LIVING IN TAMIL NADU...ESPECIALLY...THE REGULAR READERS, AND PUBLISHERS OF VARIOUS BLOGS...HAVE BEEN UNITED BY ONE STRONG CHAIN...THAT WE ARE ALL "TAMIZARGAL"...HERE, WHERE THE UNWANTED CASTISM COMES...!!! HOW LONG WE ARE GOING TO WRITE ARTICLES, CRITIZISING ONE PARTICULAR COMMUNITY...WHAT IS THE BENEFIT WE GET OUT OF THIS...GOD ONLY KNOWS...SINCE, I DO NOT WANT TO WRITE MY COMMENTS IN THAT BLOG, EXPRESSED MY FEELINGS HERE. "THIRU BALAJI" AVARKALAE...DO NOT TAKE IT OTHERWISE...INFACT MY ORGINAL NAME IS ALSO "BALAJEE"...KEEP SEDING SUCH GOOD ARTICLES SIR...

Balaji Chitra Ganesan said...

>> "THIRU BALAJI" AVARKALAE

ஊப்ஸ்! எனக்கு 26 வயதாகிறது!

துளசி கோபால் said...

நல்லாச் சொல்லி இருக்கீங்க.

கேரளாவில் மகரம் ஒன்னு (தை முதல் தேதி)விசேஷம்தான். சபரிமலையில் மகரவிளக்கு பூஜையும் இன்னிக்குத்தாங்க.

A N A N T H E N said...

கட்டுரை நல்லாருக்கு, பல விசயங்கள் சுமந்து வந்திருக்கு

ஏன் "குப்பை வலை"ன்னு பேரு வெச்சிங்க? நல்ல செய்திங்க சொல்றிங்க, தலைப்புதான் கொஞ்சம் நெருடலா இருக்கிற மாதிரி இருக்கு... நீங்க என்ன நினைக்கிறிங்க

Balaji Chitra Ganesan said...

அட நீங்க வேற! எனக்கு வரும் பின்னூட்டங்களில் பாதியளவு 'குப்பை வலை' எனது பதிவுக்கு பொறுத்தமான பெயர் என்பவைதான்!

தமிழ் said...
This comment has been removed by the author.
சுப.நற்குணன்,மலேசியா. said...

நல்ல பயனான செய்திகளை வழங்கி இருக்கிறீர்கள். மிக்க நன்றி.