Sunday, August 10, 2008

பெங்களூரில் ஜெர்மன் திரைப்பட வாரம்

கூதே மையம், ஜெர்மன் திரைப்பட நிறுவனம், சுஜித்ரா திரைப்பட சமூகம் ஆகியோர் சேர்ந்து நடத்தும் ஜெர்மானிய திரைப்பட வாரம், பெங்களூரில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 8) முதல் நடந்துவருகிறது.

நேற்று Grave Decisions, The Edge of Heaven மற்றும் Head-On ஆகிய திரைப்படங்களைப் பார்த்தேன். நல்ல தரமுள்ள படங்கள். வரும் வியாழக்கிழமை வரை திரையிடப்படவிருக்கும் 21 படங்களில் (7 குழந்தைகள் திரைப்படங்கள்) 10 படங்களை பார்த்து விடுவதாக உத்தேசம்! அடுத்த வாரம் ஒற்றைவரி விமர்சனங்கள் எழுதுகிறேன்.

ஜெர்மானிய படங்கள் பிரஞ்சு, போலந்து நாட்டு படங்களைப் போல ஆழமில்லாதவை என்ற என் கருத்தை இந்த திரைப்பட விழா மாற்றவேண்டும். பார்க்கலாம்! நீங்கள் பெங்களூரில் இருந்தால் சிவாஜி நகர் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் லாவண்யா திரையரங்கத்திற்கு விரையுங்கள்!

செப்டம்பர் 3: மேலே கூறிய மாதிரி ஒரு வரி விமர்சனம் எழுதும் ஆர்வம் போய்விட்டது! அதனால் இந்த விழாவில் நான் பார்த்த மற்ற படங்களின் பெயர்களை மட்டும் குறிப்பிடுகிறேன். Requiem, Ghosts, Nothing but Ghosts, Distant Lights, War Child.

3 comments:

வனம் said...

நானும் இப்பொழுது பெங்களூர்வாசி தான் இந்த திரைப்படங்கள் எங்கு திரையிடப்படுகின்றன என தெரிவித்தால் எனக்கும் பயனுள்ளதாக இருக்கும்

வனம் said...

மண்னிக்க வேண்டும் நான் தங்களின் இடுகையை முழுதாக வாசிக்காமல் பின்னுட்டம் இட்டுவிட்டேன்.

நன்றி

Bleachingpowder said...

//பெங்களூரில் இருந்தால் சிவாஜி நகர் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் லாவண்யா திரையரங்கத்திற்கு விரையுங்கள்//

எது சங்கீத் தியேட்டர் வளாகமா.. ஐய்யகோ என்ன கொடுமை... மட்டமான தியேட்டர்.