Friday, June 29, 2007

என்ன கொடுமை மீக்கா...



நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பாரிஸ் ஹில்டன் செய்திக்காகக் காத்திருக்கும் அமெரிக்காவை வஞ்சித்த மீக்காவிற்கு என்னால் முடிந்த எதிர்ப்பு. ஹில்டனைவிட இராக் உங்களுக்கு முக்கியமா போச்சா? என்ன கொடுமை மீக்கா...

எப்பப்பா லிண்ட்சே லோகானை உள்ளே தள்ளி படம் காட்டப்போறாங்க?

Thursday, June 28, 2007

சோகாலில் ஸ்வரங்கள்

கடந்த சனிக்கிழமை லாஸ் ஏஞ்சலீஸ் தென்னிந்திய இசைச் சங்கத்தில் நடந்த கச்சேரிக்குப் போயிருந்தேன். இங்கே நல்ல இசையுடன் நல்ல தமிழ் சாப்பாடும் அவ்வப்போது கிடைக்கும்! முன்பொருமுறை "தமிழ்நாட்டுக் கலைஞர்கள் வரிகள் புரியாவிட்டாலும் தெலுங்கில்தான் பாடுவேனென்று அடம்பிடிக்கிறார்கள்!" என்று இங்கே சல்லியடித்திருந்தேன். இந்த தடவை மதுரை சுந்தர் நிறைய தமிழ் பாடல்களை சுமாராகப் பாடினார்!

சோகால் = SoCal = Southern California.

நிறுத்துங்கள் பிரதீபாவை!


நாட்டின் உயர்பதவிகளுக்கு துப்புகெட்டவர்களை அனுமதிப்பது நாமே நம் தலையில் மண்னை போட்டுக்கொள்ளும் செயல். எதோ என்னால் முடிந்த எதிர்ப்பு.

மேலும்,

1. இந்த வலையொட்டி கிடைக்குமிடம்.
2. தேச நலன் வலைப்பதிவில் இது பற்றிய பதிவு.
3. அமித் வர்மாவின் பதிவு.
4. குடியரசுத் தலைவராக தகுதியுள்ளவர்கள் என்று நான் கருதும் பெண்கள் இங்கே.

Monday, June 25, 2007

என் வீட்டு சன்னலில்



நான் வசிக்கும் 'Westwood' பகுதியில் 'சுதந்திர?!' திரைப்படங்களுக்கான விழா நடக்கிறது. நேற்று 'Syndromes and a century' என்றொரு தாய் மொழி படம் பார்த்தேன். முதல் பாதி ரம்மியமான காதல் கதை. இரண்டாவது பாதியில் அதே கதையை வேறு மாதிரி எடுக்கிறேன் பேர்வழி என்று மண்டை காயவைத்துவிட்டார்கள். மோசார்ட்டின் விடுதலை, வாழ்வியல், மரணம், சுயபரிசோதனை உள்ளிட்ட சிந்தனைகளை கொண்டாடும் படமாதலால் சற்றும் விளங்காத சப்தங்கள், காட்சிகளோடு படத்தை முடித்துவிட்டார்கள். தலை சுற்றியது.

Saturday, June 23, 2007

மதுரங்கபட்டினம்?



சும்மா வெட்டியா இந்த வரைபடத்தை (Map - இன்னும் நல்ல தமிழ்ச்சொல் இருக்கா?) பார்த்துக்கொண்டிருந்த போது தோன்றியது. மதராஸ் என்பதன் பெயர்க்காரணத்தை அறிய நாம் ஒன்னும் பெரிய முயற்சிசெய்யலையோன்னு. சதுரங்கபட்டினம் 'சதராஸ்' ஆச்சுன்னா, எது 'மதராஸ்' ஆச்சு? விக்கிபீடியா சொல்கிற அர்த்தங்கள் எல்லாம் சரியா உட்காரமாட்டேன்கிறது. மெனக்கட்டு 'சென்னை'ன்னு வேற ஒரு அர்த்தமில்லாத பெயருக்கு மாத்தினவங்க இதையும் கண்டுபிடிச்சு சொல்லி இருக்கலாம்.

பி.கு: ஆங்கிலத்தில நான் எழுதின ஒரு விவகாரமான பதிவுக்கு கிடைச்ச 'மதராஸி' திட்டுதான் இந்த பதிவுக்குக் காரணம்னு நீங்க நினைச்சா, அதுக்கு நான் பொறுப்பில்லை!

Monday, June 18, 2007

ஆன...ஆன...

ஆப்பில் நிறுவனத்தின் சவாரி உலாவி இப்பொழுது வின்டோஸ் இயங்குதளத்திற்கும் கிடைக்கிறது!

****(அரபிக், பாரசீகம்) = சஃபர் (இந்தி) = சவாரி (சென்னைத் தமிழ்) = சஃபாரி (ஆங்கிலம்)?

எனக்கும் பிடித்த கவிதை

விகடனில் சுஜாதா கொடுத்திருந்த எ.பி.க.வை ரசித்தேன்.

கடைசிப் பக்கங்கள்
கிழிந்துபோன
துப்பறியும் நவீனத்தை
தெரியாமல் எடுத்துப்
படித்திருக்கிறீர்களா?
அதுதான் வாழ்க்கை!

-- அப்துல் ரகுமான்.

பாரதியாரின் 'சந்திரிகையின் கதை'யை அப்படித்தான் படித்தேன்!

Wednesday, June 13, 2007

அடி, அடி....நெத்தியடி!

மன்மோகன் சிங்கிற்கு மணி சங்கர அய்யர் கொடுக்கின்ற குடைச்சல் போதாதென்று அவரது சகோதரர், புகழ்பெற்ற பொருளாதாரக் கட்டுரையாளர் (columnistன்னா என்னப்பா?) சுவாமிநாதன் அங்கலேசரிய அய்யர் நாக்கைப் பிடுங்குவது போல் நாலு (இல்லை பத்து) கேள்விகள் கேட்டிருக்கிறார். இங்கே படிக்கலாம்.

Thursday, June 07, 2007

மெல்ல சமசுகிரதம் இனி சாகும்!

தமிழைக் காப்பாற்ற வெளிநாடுவாழ் தமிழர்கள் இருக்கிறார்கள்! ஆனால் சமசுகிரதத்திற்கு? சென்னையிலுள்ள குப்புசாமி சாஸ்த்ரி ஆராய்ச்சி நிறுவனம் சமசுகிரத ஒலைச்சுவடிகளைக் காப்பாற்ற முயற்சி செய்துவருகிறது. முடிந்தால் நீங்களும் அவர்களுக்கு உதவலாம். இவர்களைப் பற்றிய 'இந்து' செய்திக்கட்டுரை இங்கே.

வலையொலி பரப்பி...ஓ போடுங்கள்!