சென்னையில் நடைபெறும் கட்டற்ற மென்பொருள் மாநாடு பற்றி எழுதவேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆமாச்சு எழுதிய பின்வரும் மடலைவிட சிறப்பாக என்னால் எழுதமுடியாது. நீங்களே படித்துக்கொள்ளுங்கள்!
----- ஆமாச்சுவின் மடல் -----
நல்ல சேதி! நல்ல சேதி! இத்தனை நாளா நம்மைப் பிடித்திருக்கும் அடிமை மோகச் சங்கிலியிலிருந்து விடுதலையடைய மகத்தானதொரு வாய்ப்பு! என்ன? எட்டாக் கனியாகிக் கொண்டிருக்கும் மென்பொருளை எட்டிப் பிடிக்க விழைவோருக்கானது இது! தப்பென தெரிந்தும் காப்பியடிக்கும் குற்றவுணர்ச்சியிலிருந்து விடுதலையடைய ஒரு சந்தர்ப்பம்!
குட்டிக் குழந்தைகள், அன்புத் தோழர்கள் ஆற்றல் மிக்க தொழில் முனைவோர் என அனைவருக்கும் அரியதொரு வாய்ப்பு! விடாப் பிடியாகப் பிடித்துக் கொண்டிருக்கும் விண்டோஸை விரட்டி தைப் பிறந்தக் கையுடன் வழிக் காட்ட நாங்கள் செய்திருக்கும் இவ்வேற்பாடு!
என்ன? கட்டற்ற மென்பொருள் மாநாடு
அப்டீன்னா? குனு/ லினக்ஸ் இயங்குதள ஆற்றல்களின் அணிவகுப்பு
எங்கே? எம்.ஐ.டி வளாகம், குரோம் பேட்டை, சென்னை
எப்போ? பிப்ரவரி 01, 02, 03
விசேஷம்? இது உங்களுக்கானது
விவரங்களுக்கு? http://fossconf.in
வேறென்ன? அடடே! வல வலன்னு பேசாம! வந்து தான் பாருங்களேன்!
-----------------------------
இவ்வளவு அழகா கூப்பிடறாரில்ல? போய்தான் பாருங்களேன்! மாநாட்டை நடத்தும் Chennai LUG மற்றும் NRCFOSS ஆகியோருக்கு ஒரு ஓ! போடுங்க. அவர்களோடு சேர்ந்து நீங்களும் பங்களிக்கலாம்.
Friday, January 25, 2008
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
நான் இப்ப வரமுடியாதே!!
ஆனால் இதுவே உபுண்டு லினக்ஸில் இருந்து தான் தட்டச்சு செய்கிறேன்.
புதியவர்களுக்கு படத்துடன் விளக்கம் வேண்டுமென்றால் என் பதிவில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
http://kumarlinux.blogspot.com
நல்லதொரு முக்கியமான தகவலுக்கு நன்றி.
பதிவின் முக்கியத்துவத்தினால் இப்பதிவு முத்தமிழ் கூகிள் குழுமத்தில் மீள்பதிவு செய்யப்படுகிறது.
நன்றி.
http://groups.google.com/group/muththamiz
Post a Comment