Wednesday, January 23, 2008

தைப்புத்தாண்டு என்னும் மடத்தனம்!

இனி தைத்திங்கள் முதல்நாள்தான் ஆண்டின் முதல்நாளாம்! இதனை தமிழறிஞர்கள் கண்டுபிடித்து சொல்லிட்டாங்களாம். கருணாநிதியின் தான்தோன்றித்தனத்துக்கு மறுபெயர்தான் தமிழறிஞரா? சரி என்ன காரணத்துக்குக்காக ஆண்டின் முதல்தேதியே மாற்றப்பட்டது என்று தமிழனுக்காவது சொல்லவேண்டாம்? தமிழே தெரியாத தமிழனுக்கு பூகோளமும் வானிலை அறிவியலும் எங்கு தெரியப்போகிறது என்கிற இளக்காரமா?

பொங்கல் தமிழர் திருநாளாம்?! ஏன் சித்திரை முதல்நாளும் தமிழர் திருநாளாக இருக்கக்கூடாதா? எந்தவித ஆதாரமுமில்லாமல் திருவள்ளுவர் கி.மு.31 இல் பிறந்தார் என்று ஒரு ஆண்டுவரிசை வைத்திருக்கும் தமிழரின் மடத்தனத்தைப் போன்று இப்போது தைப்புத்தாண்டு! [இந்தியா சுதந்திரமடைந்த ஆண்டை (1947) முதல் ஆண்டாக ஏற்றுக்கொண்டிருக்கலாம்!] அறுபது ஆண்டுகளுக்கு தமிழ்ப்பெயர் கண்டுபிடிக்க வக்கில்லாமல் அந்தமுறையை வழக்கொழியச்செய்த மறைமலையடிகள் போன்றோரின் முட்டாள் சீடர்கள் இப்போது சித்திரையோடு விளையாடுகிறார்கள்!

சரி, தைப்புத்தாண்டு என்பது மடத்தனம் என்று நான் கருதுவதற்கான காரணங்கள் கீழே. முதலில் பொங்கல் மற்றும் சித்திரையின் முதல்நாள் ஆகியவற்றை ஏன் கொண்டாடுகிறோம் என்று தெரிந்துகொள்ளவேண்டும். (எதோ எனக்குத் தெரிந்ததை எழுதுகிறேன்!)

1. தமிழகம் பூமத்திய ரேகையின் (Equator) வடக்கேயிருக்கிறது! மகரரேகை (Tropic of Capricorn) பூமத்திய ரேகையின் தெற்கே இந்தியப்பெருங்கடலில் இருக்கிறது. கடகரேகை (Tropic of Cancer) இந்தியாவை இட்டத்தட்ட இரண்டாகப் பிரிக்கிறது.
2. பூமியின் 23.44 அலகு சாய்மானத்தாலும் அதன் நீள்வட்டப்பாதையாலும் சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலான தொடர்பு வேறுபடுகிறது. [இதனால்தான் Spring, Summer, Autumn, Winter போன்ற பருவங்கள் உருவாகின்றன.] இந்த வேறுபாடு பூமியின் ஒவ்வொரு பகுதியிலும் அந்தப்பகுதி உருண்டையில் எங்கிருக்கிறதோ அதையொற்றி அமைகிறது. [அதனால்தான் ஒவ்வொரு நாட்டிலும் வெட்பநிலையும், பருவநிலையும் மாறுபடுகின்றன. இந்தியாவின் குளிரும், கனடாவின் குளிரும் ஒன்றல்ல! இப்பொது இந்திய அணி ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் விளையாடும்போது அங்கு வெட்பகாலம். நமக்கு குளிர்காலம்.]
3. சூரியன் பூமத்திய ரேகையின்மேல் வரும்போது பகலும் இரவும் ஓரளவு சரிசமமாக இருக்கும். இருப்பதிலேயே மிகவும் சரிசமமாக இருக்கும் நாளின் பெயர் Equinox. மார்ச் மாதம் ஒருமுறையும் (Spring Equinox) செப்டம்பர் மாதம் ஒருமுறையும் (Autumn Equinox) இத்தகைய தினங்கள் வருகின்றன.
4. மார்ச் மாதத்தில் வரும் Equinoxஐ புத்தாண்டாகக் கொண்டாடுவது இந்தியாவிலும், மேலை நாடுகளிலும் வழக்கமாக இருந்தது. இந்தியாவில் இப்போதும் இருக்கிறது. ஆங்கில ஆண்டு March மாதத்தில் தொடங்கியதால்தான் September (7 - septa), October (8 - octal), November (9 - novem), December (10 - deci) போன்ற பெயர்கள் வந்தன. இந்தியாவில் பிறமாநிலங்களில் பயன்படுத்தப்படும் lunisolar நாட்காட்டிகளிலும் மார்ச் மாதத்தில் வரும் Eqninox-ஐ ஒட்டியே புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. (எ.கா: தெலுங்கு வருடப்பிறப்பான உகாதி.)
5. செப்டம்பர் மாதம் பூமத்திய ரேகைக்கு அருகிலிருக்கும் சூரியன் டிசம்பர் மாதம் மகரரேகைக்கு அருகில் (Indian Ocean) இருக்கிறது. அங்கிருந்து மீண்டும் வடக்குநோக்கி திரும்பும்நாள் தான் Winter Solstice. இனி அடுத்த ஆறுமாதங்களுக்கு வடக்குநோக்கியே சூரியன் நகரும். இதைத்தான் உத்தராயன் (Uttaraayan, uttar - north), மகர (Capricorn) சங்கராந்தி, பொங்கல் என்று கொண்டாடுகிறார்கள். சூரியன் நம்மை நோக்கிவருவதால் குளிர்காலம் போய் வெட்பம் மீண்டுவந்து உயிர்களும், பயிர்களும் செழிப்பது கொண்டாடப்பட வேண்டியதுதானே?
6. அதேபோல ஜூன் மாதம் வரும் Summer Solstice அன்று சூரியன் கடக (Cancer) ரேகை மீது இருக்கிறது. இந்தியாவில் சூடு கொளுத்துவது அதனால்தான்.
7. இந்த Eqninox, Solstice போன்றவை எப்போதும் ஒரே நாளில் நடக்காது. April 14 மற்றும் Jan 14 ஆகிய தேதிகளில் நாம் கொண்டாடினாலும் அவை தற்காலத்தில் March 21, December 21 வாக்கிலேயே நடந்துவிடுகின்றன. நாள்காட்டிகள் இந்த மாற்றத்திற்கு ஏற்ப மாற்றப்படுவதுண்டு. உரோம நாட்டினார் Julian நாள்காட்டியிலிருந்து Gregorian நாள்காட்டிக்கு மாறியதற்கு கிறிஸ்தவர்களின் பண்டிகை தினங்கள் நகர்ந்துகொண்டே சென்றதனால் வந்த பிரச்சனைகளும் ஒரு காரணம்.
8. இந்தியாவிலும் தமிழ் நாள்காட்டி தவிர்த்த பிற நாள்காட்டிகள் ஒரு மாதம் முன்பாக இருப்பது அதனால்தான். நமது சித்திரை (April-May)யில் வந்தால் அவர்களது சித்தரா மாதம் (March-April)இல் வருகிறது. எல்லா மாதங்களும் அப்படித்தான். தைப் பொங்கலை அவர்கள் மாசி மாததில்தான் கொண்டாடுகிறார்கள்.

சரி இப்போ கேள்விகள்.

1. Equinox correction என்று எதுவுமில்லாதபோது வெறுமனே தைமாத முதல்நாளை புத்தாண்டு என்று கொண்டாடவேண்டிய அவசியமென்ன?
2. பருவங்கள், இராசிகள், 60 கணக்கு (விநாழிகை, நாழிகை ... வருடம்), Equinox, Solstice என்று இயற்கையின் அளவிலா அற்புதங்களை நினைவுபடுத்த இரண்டுநாட்கள் கொண்டாடினால் என்ன? பொங்கல் தமிழர் திருநாள். அதனால் அது புத்தாண்டு என்று தமிழனை மேலும் மடையனாக்கும் இந்த வீண்வேலை எதற்கு?
3. தனது உழவு வசதிக்காக பொங்கலை Equinoxஓடு இழுத்துச்செல்லாமல் Januaryயிலேயே நிற்கவைத்த தமிழனின் Street Smartness எங்கே போயிற்று?
4. தீபாவளி, கிறிஸ்துமஸ், காந்தி ஜெயந்தி என்று மனிதர்களின் பிறந்த, இறந்த நாட்களையும், பிற மதம்சார்ந்த தினங்களையுமே ஏன் கொண்டாடவேண்டும்? சுதந்திர தினம், குடியரசு தினம், படைவீரர் நாள் உள்ளிட்ட தேசிய நாட்களையும், பொங்கல், சித்திரை முதல்நாள் என்று மதச்சார்பற்ற, ஒருசிலர் என்றில்லாமல் எல்லோரும் கொண்டாடும் தினங்களையும் ஊக்குவிக்கலாமே?

இது பற்றிய என்னுடைய இன்னொரு இடுகை -> சித்திரையைக் காப்பாற்றுங்கள்!

28 comments:

Anonymous said...

கருணாநிதி சொன்னதை கெட்கும் அளவிற்கு தமிழன் முட்டாள் இல்லை. அண்ணா சாலை இன்னமும் மவுன்ட் ரோடுதான், சென்னை இன்னமும் மெட்ராஸ் தான்.

காணும் பொங்கல் , கரி நாள் என்றழைக்கப்படும் ஒரு நாளுக்கு கருணாநிதி வைத்த பெயர் 'உழவர் திருனாள்' அரசாங்க காலண்டர் தவிர வேறெங்கும் அந்த பெயர் சொல்லி அழைக்கப்படுவதில்லை.

Vijay said...

you told me they changed it because of thiruvalluvar being born in "thai 2".

Apparently they had just changed because they consider thai to be the first month...thats all. This does not seem that bad as far as people forgeting tamil months is concerned.

Are you misrepresenting information to me?

வெண்காட்டான் said...

எல்லாம் சரி? இன்னமும் கப்பி தைப்பொங்கல் என்றுதான் சொல்வது எப்படி? உழவர் திருநாள் என்று சொன்னால் அதை அமுல்படுத்துவது தமிழர் கையில். ஆங்கிலமோகம் பிடித்த அனோனி கருத்தை புறந்தள்ளலாம். பெங்களுரு கொல்கத்தாவில் யாரும் இப்படி சொல்வார்களா?
விஞ்ஞான ரீதியாக பார்க்காமல் தமிழ் முறைப்படி பார்க்கலாமே?

Balaji said...

Vijay,

nobody is preventing you from reading newspapers. who are 'they'? and why do they consider thai as the first month?

The government announcement says "some scholars" had suggested that Thai be made the first day of the new year. and it also says how pongal is celebrated etc.

it doesn't specify how did those scholars come up with thai being the first month. that so-called scholars meeting in 1921 came up with the Thiruvalluvar Year. that was made official in 1971. ofcourse thai 2 is celebrated as Thiruvalluvar day.

"pongal is celebrated in that month", "thiruvallur day is celebrated in that month" are non-senscial reasons to declare thai as the first month.

it looks incredible that Karunanidhi has the gal to tell the people of TN that some 500 people met in some pre-independence time and suggested that month and hence, there you go!

people claim that thai was once celebrated as the first month. it might be true. it may also have been celebrated in june-july at some point. the so-called 'they' want it to 'revert' it to the old new year day as it were. I'm just asking why and what purpose does it serve?

and you think everyone knows the tamil month in which other festivals fall? making pongal as the reason for celebrating new year would indeed diminish the recall value of tamil months.

if tamils celebrated thai as the first month, what calendar were they using? most solar calendars use march/april. chinese perform a bhogi/pongal like combo in Jan/Feb for their new year but they use a lunar calendar. [its even possible that the lunar chinese calendar is a Buddhist export from south-india]

why would one want to revert thousands of year old practice for the heck of it? making thai as first month without specifying any logical reason whatsover is akin to declaring earth as flat because that was people used to believe in those days!

Balaji said...

>> விஞ்ஞான ரீதியாக பார்க்காமல் தமிழ் முறைப்படி பார்க்கலாமே?

சித்திரை முதல்நாள் தமிழர் வழக்கமில்லை என்பதற்கு ஒரு ஆதாரமும் இருப்பதாகத் தெரியவில்லை.

விதண்டாவததுக்காக வைக்கவேண்டுமானால் எந்த மாதத்தை வேண்டுமானாலும் முதல் மாதமாக அறிவிக்கலாம். ஆயிரக்கணக்கான வருடம் வழங்கும் பழக்கத்தை சில்லரைக் காரணங்களுக்காக மாற்றுவது சரியாகப் படவில்லை. இத்தனைக்கும் சித்திரையிலிருந்து தைக்கு மாற்றுவது ஒரு தமிழ் விழாவைக் கொல்ல மட்டுமே பயன்படுமென்கிறபோது எதற்காக செய்யவேண்டும்?

வவ்வால் said...

//most solar calendars use march/april. //

இதுவும் தவறானதே!

//why would one want to revert thousands of year old practice for the heck of it? making thai as first month without specifying any logical reason//

கிரிகோரியன் காலண்டர் என்று ஆங்கிலத்தில் பின்ப்பற்றப்படும் காலண்டரில் ஜனவரி 1 புத்தாண்டு என்று சொல்வதற்கு லாஜிக்கல் காரணம் நீங்கள் கண்டு பிடித்து விட்டீர்களா?

ஜனவரி 1 க்கு முன்னர் ஏப்ரல் 1 தான் புத்தாண்டாக ஆங்கில வழக்கில் இருந்தது, அதனை ஜூலியஸ் சீசர், போப் கிரிகோரி தான் மாற்றி ஜனவரி 1க்கு கொண்டு வந்தார்கள் என்பதையும் அறிவீர்களா?

தை 1 க்கு பின்னர் ஒரு காரணம் இருக்கு,நீங்களே அதையும் சொல்லிவிட்டீர்கள். அதை அறியவில்லை எனில் அது உங்கள் அறியாமை, அடுத்தவரை முட்டாள் என்று சொல்லும் முன்னர் உங்கள் அறியாமையை களைந்துக்கொள்ளுங்கள்!

தமிழ்பித்தன் said...

முட்டாள் தினம் இந்த வருட மாற்ற காரணங்களால் வந்தது என்று எங்கோ அறிந்தது இனி தமிழர் முட்டாள் தினத்தை ஏப்ரல் 14 க்கு மாத்திட வேண்டியதுதான்

Balaji said...

திரு வவ்வால்,

நீங்கள் என் பதிவை படிக்காமலேயே பின்னூட்டம் எழுதீட்டிங்க போலிருக்கு. Julian calendar Gregorian calendarஆக மாறியதற்கு procession of the equniox-உம் ஒரு காரணம் என்று நான் எழுதியிருக்கிறேன். அங்கு புதிதாக நாட்களைச் சேர்த்து, மாதங்களை மாற்றியமைத்து தமது தேவைகளை பூர்த்தி செய்துகொண்டார்கள்.

சித்திரையிலிருந்து தைக்கு மாற்றுவதற்கு அத்தகைய காரணம் எதுவுமில்லை. இங்கு நாட்காட்டியையெல்லாம் மாற்றவில்லை. சும்மா ஒரு மாதத்திலிருந்து இன்னொரு மாதத்துக்கு மாற்றியிருக்கிறார்கள்.

வவ்வால் said...

//நீங்கள் என் பதிவை படிக்காமலேயே பின்னூட்டம் எழுதீட்டிங்க போலிருக்கு. Julian calendar Gregorian calendarஆக மாறியதற்கு procession of the equniox-உம் ஒரு காரணம் என்று நான் எழுதியிருக்கிறேன். அங்கு புதிதாக நாட்களைச் சேர்த்து, மாதங்களை மாற்றியமைத்து தமது தேவைகளை பூர்த்தி செய்துகொண்டார்கள்.

சித்திரையிலிருந்து தைக்கு மாற்றுவதற்கு அத்தகைய காரணம் எதுவுமில்லை. இங்கு நாட்காட்டியையெல்லாம் மாற்றவில்லை. சும்மா ஒரு மாதத்திலிருந்து இன்னொரு மாதத்துக்கு மாற்றியிருக்கிறார்கள்.//

உங்கள் பதிவைப்படித்தேன் ஆனால் நீங்கள் சொன்னதை நீங்களே நம்பாதது தான் ஆச்சர்யம், அதான் லாஜிக் கண்டுபிடிததீர்களா என்றுக்கேட்டேன்.

ஆங்கிலத்தில் ஏன் மாறினார்களோ அதே காரணம் தான் இங்கும், தமிழ் முறைப்படி, தை 1 அன்று தான் சூரியன் மகர ரேகையில் பிரவேசிக்கிறான். அதனால் பொங்கலை மகர சங்கராந்தி என்றும் சொல்வார்கள்.நாட்காட்டி முறையும் திருவள்ளுவர் ஆண்டு அடிப்படையில்.

இப்போது தைக்கு நாம் மாறவும் காரணம் "procession of the equniox- தான் நம் முறைப்படி ஜனவரி 14 இல் வருகிறது அவ்வளவு தான்.இன்னும் சரியாக பார்த்தால் ஆங்கில முறையும் தவறே டிசம்பர் 21 தான் "procession of the equniox-" மாறுகிறது. காரணம் இது எல்லாம் சில காலததிற்கு பிறகு சற்று முன் பின் ஆக மாறி விடுவது தான்.

இப்போது சொல்லுங்கள் ஆங்கிலத்தில் மாறியது நியாயம் எனில் தமிழில் மாறியது மட்டும் மடத்தனமா?

Balaji said...

நீங்க நையாண்டியாக எழுதுகிறீர்களா?!

>> தமிழ் முறைப்படி, தை 1 அன்று தான் சூரியன் மகர ரேகையில் பிரவேசிக்கிறான். அதனால் பொங்கலை மகர சங்கராந்தி என்றும் சொல்வார்கள.

பொங்கல் ஏன் கொண்டாடப் படுகிறது என்று எனக்குத் தெரியும். நீங்கள் என் பதிவை நிச்சயமாகப் படிக்கவில்லை என்று தெரிகிறது. ஒரு பக்கத்துக்கு அதைத்தானே எழுதியிருக்கிறேன்!

அதே பொங்கல் நாளை ஏன் புத்தாண்டாகக் கொண்டாட வேண்டும் என்பதுதானே கேள்வி. இந்துமாக் கடலில் வெகுதொளைவில் இருக்கும் மகர ரேகை (tropic of capricorn) கொடுத்து வைத்ததுபோல், சமீபத்தில் இருக்கும் பூமத்திய ரேகையும் (Equator - Mar/Apr), கடக ரேகையும் (tropic of Cancer - Jun/July) கொடுத்துவைக்கவில்லையா?

>> நாட்காட்டி முறையும் திருவள்ளுவர் ஆண்டு அடிப்படையில்.

திருவள்ளுவர் ஆண்டே 1921 ஆண்டு 'கண்டுபிடித்தது' தானே?! திருவள்ளுவர் கி.மு. 31 இல் பிறந்தார் என்று எதற்காக மூடநம்பிக்கையைப் பரப்புகிறீர்கள்?

>> இப்போது தைக்கு நாம் மாறவும் காரணம் "procession of the equniox- தான் நம் முறைப்படி ஜனவரி 14 இல் வருகிறது அவ்வளவு தான்.இன்னும் சரியாக பார்த்தால் ஆங்கில முறையும் தவறே டிசம்பர் 21 தான் "procession of the equniox-" மாறுகிறது.

கடிந்து கொள்வதற்காக மன்னிக்கவும். Procession of the Equinox என்றாலே என்னவென்று தெரியாமல் நீஙகள் என் நேரத்தை வீணாக்குவது எனக்கு சரியாகப் படவில்லை.

இப்போது Equinox March 21இல் வருகிறதென்றுதானே நானும் பதிவில் எழுதியிருக்கிறேன். December 21இல் வருவது Winter Solstice.

இரானில் பயன்படுத்தப்படும் நாட்காட்டியில் procession of the equinoxஐ பின்தொடர்ந்து தங்கள் ஆண்டின் முதல் தேதியை அவர்கள் மாற்றிக்கொள்கிறார்கள். அதனால் அவர்களது நாட்காட்டியில் இப்போது March 21தான் புத்தாண்டு.

நாம் அவ்வாறு Equinoxஐ தொடர்ந்து செல்வதில்லை. பொங்கலும் Winter Solsticeஐத் தொடர்ந்து செல்வதில்லை. இப்போது நடந்திருக்கும் மாற்றத்துக் காரணம் procession of the equinox என்று நீங்கள் சொல்வது முற்றிலும் தவறு. நாட்காட்டியை நாம் மாற்றவில்லை. முதல் மாதத்தை காரணமேயில்லாமல் மாற்றியிருக்கிறார்கள். அதைத்தான் நான் கண்டிக்கிறேன்.

Gregorian நாட்காட்டி 1582 இரண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவர்களின் பிரச்சனை என்னவென்றால் "Equinoxஐத் தொடர்ந்து வரும் சந்திரமாதத்தின் 14ஆம் நாளுக்குப் பிறகுவரும் ஞாயிறு Easter" என்று அவர்கள் வைத்திருந்தார்கள். Equinox மாறிக்கொண்டேயிருந்ததனால் Easter தேதி மாறிக்கொண்டே வந்து பருவகாலத்துக்கும் Easter கொண்டாடப்படும் காலத்துக்கும் மிகுந்த வித்தியாசம் வந்துவிட்டது. அதைத்தான் அவர்கள் சரிசெய்தார்கள்.

Julian நாட்கட்டியிலும் முதல் மாதம் January தான். நீங்கள் March/April என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா?

March முதல் மாதமாக இருந்த உரோம நாட்காட்டி அதற்கும் முந்தையது. அந்த நாட்காட்டி பயன்படுத்திய போது மொத்தம் 10 மாதங்கள்தான். December கடைசி மாதம். அப்புறம் கொஞ்ச காலத்துக்கு winter என்று அப்படியே விட்டுவிடுவார்கள்!

வவ்வால் said...

பாலாஜி,

//இப்போது தைக்கு நாம் மாறவும் காரணம் "procession of the equniox- தான் நம் முறைப்படி ஜனவரி 14 இல் வருகிறது அவ்வளவு தான்.இன்னும் சரியாக பார்த்தால் ஆங்கில முறையும் தவறே டிசம்பர் 21 தான் "procession of the equniox-" மாறுகிறது.

கடிந்து கொள்வதற்காக மன்னிக்கவும். Procession of the Equinox என்றாலே என்னவென்று தெரியாமல் நீஙகள் என் நேரத்தை வீணாக்குவது எனக்கு சரியாகப் படவில்லை.//

கொஞ்சம் முன் பின்னாக மாறிவிட்டது, நான் சொன்னது, டிசம்பர் 21 இல் ஆரம்பித்து மார்ச் 21 வரைக்கும் வெர்னல் ஈக்னாக்ஸ் வரைக்கும் போவதை சொல்ல நீங்கள் ஆங்கிலத்தில் போட்டதை அப்படியே போட்டு சொல்லி இருக்கிறேன்.

பூமியின் தென் பகுதிக்கு அது மாறிவரும். தென்பகுதிக்கு அன்று "summer solstice" எனவே அந்த நீங்கள் சொன்ன அந்த ஈக்னாக்ஸ் மாறும். அதனாலேயே டிசம்பர் 21 அன்று ஆண்டு முடிவதாக கொள்வது அக்காலத்தில் வழக்கம். பின்னர் அதுவே நாட்களை சரிக்கட்ட டிசம்பர் 31 வரைக்கும் போயிற்று.இது ஆங்கில முறைப்படி, ஆனால் தமிழ் முறைப்படி நமக்கு மகர ரேகை பிரவேசிக்கும் காலம் தான் "summer soltice" ஆக கருத வேண்டும் அது ஜனவரி 14 இல் வருகிறது.

அதாவது தென் பகுதியில் இருப்பவர்களுக்கு டிசம்பர் 21 தான் கோடையின் துவக்கம். அதற்கு இணையான நாள் பொங்கல் நாள்!

இப்போது நான் சொன்னது சரியாக வருகிறதா?

julian calender இல் ஜனவரி முதல் மாதம் இல்லை என்றா சொன்னேன், அதற்கு முன்னர் ஆரம்பத்தில் ஏப்ரல் 1 ஐ தான் புது வருட நாளாக வைத்திருந்தார்கள், ஜூலியன், கிரிகோரி காலண்டர்கள் தான் அதை மாற்றியது என்று சொல்லி இருக்கேன்.பின்னர் பல்வேறு அரசுகள் பல்வேறு காலக்கட்டத்தில் தான் ஜனவரி 1 புது வருட நாளாக ஏற்றுக்கொண்டன உடனே அல்ல.

வவ்வால் said...

பாலாஜி,

//திருவள்ளுவர் ஆண்டே 1921 ஆண்டு 'கண்டுபிடித்தது' தானே?! திருவள்ளுவர் கி.மு. 31 இல் பிறந்தார் என்று எதற்காக மூடநம்பிக்கையைப் பரப்புகிறீர்கள்?//

திருவள்ளுவர் ஆண்டு என்று ஒரு நாட்காட்டி முறையைத்தான் 1921 இல் அமைத்தார்கள் அதற்காக திருவள்ளுவர் பிறந்த வருடத்தையும் மாற்ற முடியுமா?

திருவள்ளுவர் பிறந்த ஆண்டு எது என்று யாருக்குமே சரியாக தெரியாது ஆனால் அவர் கி.மு வை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பது உறுதி, எனவே சில ஆய்வுகள் இலக்கிய குறிப்புகள் அடிப்படையில் தான் கி.மு 31 என்று முடிவுக்கு வந்துள்ளார்கள் ,இதில் எது மூட நம்பிக்கை.

இயேசு கிருஸ்து பிறந்த வருடம் இன்னது தான் என்று கூட தான் உறுதியாக கூற இயலாது. தோராயமாகத்தான் சொல்கிறார்கள். இப்போது காலத்தை கி.மு., கி.பி என்று சொல்லும் வழக்கம் என்ன இயேசு பிறந்த அன்றேவா வழக்கத்தில் வந்தது.

இன்னும் சொல்லப்போனால் பைபிளே(புதிய ஏற்பாடு) இயேசு இறந்து 300 ஆண்டுகளுக்கு பிறகு தான் தொகுக்கப்பட்டது.

உங்களுக்கே தென் , வடப்பகுதிகளில் சூரியனின் சஞ்சாரம் வைத்து கணிப்பது மாறும் என்று தெரியவில்லை, ஆனால் அவசரக்கதியில் பதிவு போட்டு தள்ளிவிட்டீர்கள்.அதனால் தான் இங்கே பொங்கலை புத்தாண்டக மாற்றினால் தவறில்லை என்கிறேன்.

Balaji said...

>> அதனாலேயே டிசம்பர் 21 அன்று ஆண்டு முடிவதாக கொள்வது அக்காலத்தில் வழக்கம். பின்னர் அதுவே நாட்களை சரிக்கட்ட டிசம்பர் 31 வரைக்கும் போயிற்று.

இது நீங்கள் எடுக்கப் போகும் திரைப்படத்தின் கதையா?

>> இது ஆங்கில முறைப்படி, ஆனால் தமிழ் முறைப்படி நமக்கு மகர ரேகை பிரவேசிக்கும் காலம் தான் "summer soltice" ஆக கருத வேண்டும் அது ஜனவரி 14 இல் வருகிறது.

அப்பா சாமி. சனவரி நமக்கு கோடை காலமா? தமிழகம் என்ன அண்டார்டிகாவிலா இருக்கிறது?

>> அதாவது தென் பகுதியில் இருப்பவர்களுக்கு டிசம்பர் 21 தான் கோடையின் துவக்கம். அதற்கு இணையான நாள் பொங்கல் நாள்!

ஒ! ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க மக்களுக்காக நாம் இங்கு கொண்டாடுகிறோமா?

>> julian calender இல் ஜனவரி முதல் மாதம் இல்லை என்றா சொன்னேன், அதற்கு முன்னர் ஆரம்பத்தில் ஏப்ரல் 1 ஐ தான் புது வருட நாளாக வைத்திருந்தார்கள், ஜூலியன், கிரிகோரி காலண்டர்கள் தான் அதை மாற்றியது என்று சொல்லி இருக்கேன்.பின்னர் பல்வேறு அரசுகள் பல்வேறு காலக்கட்டத்தில் தான் ஜனவரி 1 புது வருட நாளாக ஏற்றுக்கொண்டன உடனே அல்ல.

ஹலோ? இது என்ன வாழைப்பழக் கதையா? Julian நாட்காட்டியிலேயே January தான் முதல்மாதம். அப்புறம் வந்த Gregorian நாட்காட்டியில் நிச்சயம் January தான் முதல் மாதம். நான் சொல்வதில் நம்பிக்கை இல்லாவிட்டல் விக்கிபீடியா படித்தாவது தெரிந்துகொள்ளலாமே?

>> இயேசு கிருஸ்து பிறந்த வருடம் இன்னது தான் என்று கூட தான் உறுதியாக கூற இயலாது.

ஐய்யா, இயேசு, நபிகள் நாயகம், புத்தர் போன்றவர்களின் சீடர்கள் அவர்களின் பிறந்த நாளை கணக்கிட்டு வருகிறார்கள். நாம்கூட சோழப் பேரரசில் இன்ன அரசர் இந்த ஆண்டில் ஆட்சிக்கு வந்தார் என்று சொல்லமுடியும். நபிகள் நாயகம் ஹிஜிராவுக்கு சென்ற ஆண்டிற்குப் பிறகு 17ஆம் ஆண்டிலிருந்தே அவர்கள் கணக்கிடத் துவங்கிவிட்டார்கள். இயேசு இறந்த சில நூற்றாண்டுகளிலேயே அவர் எப்போது வாழ்ந்தார் என்று கணக்கிட ஆரம்பித்துவிட்டார்கள். இயேசு வாழ்ந்தகாலத்தில் இருந்த ஹெராட் என்கிற அரசன், பிலாத்து என்கிற உரோம ஆளுனர் ஆகியோரின் வருடங்களைக் கண்டுபிடிப்பதும் மிக எளிதே.

ஆனால் திருவள்ளுவர் கி.மு. 31 இல் பிறந்தார் என்பதற்கெல்லாம் எந்த ஆதாரமும் இல்லை. துரதிருஸ்டவசமாக அவருக்கு சீடர் யாரும் கிடைக்கவில்லை. அவர் அப்போது பிறந்திருப்பார் என்று ஊகிப்பது அவரது வரலாற்றை எழுதப் பயன்படும். இன்று என்னுடைய தினசரி கணக்கை எழுதுவதற்கு அல்ல. Astronomy என்பது சிறுபிள்ளை விளையாட்டு அல்ல.

>> உங்களுக்கே தென் , வடப்பகுதிகளில் சூரியனின் சஞ்சாரம் வைத்து கணிப்பது மாறும் என்று தெரியவில்லை, ஆனால் அவசரக்கதியில் பதிவு போட்டு தள்ளிவிட்டீர்கள்.

இதே பதிவில் நான் கொடுத்த இரண்டாவது pointஐ மீண்டும் தருகிறேன்.

"பூமியின் 23.44 அலகு சாய்மானத்தாலும் அதன் நீள்வட்டப்பாதையாலும் சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலான தொடர்பு வேறுபடுகிறது. [இதனால்தான் Spring, Summer, Autumn, Winter போன்ற பருவங்கள் உருவாகின்றன.] இந்த வேறுபாடு பூமியின் ஒவ்வொரு பகுதியிலும் அந்தப்பகுதி உருண்டையில் எங்கிருக்கிறதோ அதையொற்றி அமைகிறது. [அதனால்தான் ஒவ்வொரு நாட்டிலும் வெட்பநிலையும், பருவநிலையும் மாறுபடுகின்றன. இந்தியாவின் குளிரும், கனடாவின் குளிரும் ஒன்றல்ல! இப்பொது இந்திய அணி ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் விளையாடும்போது அங்கு வெட்பகாலம். நமக்கு குளிர்காலம்.]"

இது தெரிந்த எனக்கு Winter/Summer solstice எந்த இடத்தில் எப்போது வரும் என்று தெரியாதாக்கும்! நல்ல கதை.

Anonymous said...

It has nothing to do with New Year. It is all about identity. Tamils wanna see themselves united. (Any objections?) That is all.

ஜயராமன் said...

பாலாஜி ஐயா,

புதிய பல விஷயங்களை எழுதியிருக்கிறீர்கள். நன்றி. தமிழ்ப் புத்தாண்டு எப்போதுமே சித்திரைதான்.

இது குறித்து திணமனி பத்திரிக்கையில் வந்த ஒரு தொல்பொருளாரரின் ஆய்வுக்கட்டுரையை என் பதிவில் (http://jayaraman.wordpress.com) பதிந்திருக்கிறேன்.

அறுபது வருடப்பெயர்கள் தமிழா? அந்த வழிமுறை தமிழா? என்பதெல்லாம் இந்த "தையில் புத்தாண்டு" விஷயத்துக்கு நேர் தொடர்பில்லாதது.

தையில் புத்தாண்டு என்பதற்கு ஒரு வரலாற்று சங்க, இலக்கிய சான்றுகளும் இல்லை என்பதே உண்மை. இருந்தால் அதை சொல்லட்டும்.

இது கருணாநிதியின் கலாசார அழிப்புத்திட்டத்தின் ஒரு முக்கிய அங்கம். கிருத்துவ மிஷனரிகளினால் ஆரம்பிக்கப்பபட்ட இந்த சீரழிவை இப்போது அவர்களின் அல்லக்கை அரசு நடத்திக்கொண்டிருக்கிறது. இதுவே, நம் வரலாற்று ஆராய்ச்சி நமக்குத் தெரிவிப்பது.

நன்றி

ஜயராமன்

Balaji said...

oh, changing the new year day has nothing to do with New year? Excellent!

and how exactly Tamils will become more united by making Pongal as New Year?

Balaji said...

ஜெயராமன்,

"பாலாஜி ஐயா"? நான் சின்னப்பையன் தான்! நானும் அந்த ஆய்வுக் கட்டுரையைப் படித்தேன். நிறைய விசயங்கள் தெரிந்தன. நீங்களும் சுட்டியமைக்கு மிக்க நன்றி.

கருணாநிதி அவர்கள் இதை ஏன் செய்தார் என்பது யோசிக்க வேண்டிய விசயமே. திருவள்ளுவர் மீதிருக்கும் பற்றினால் இருக்கலாம். [திருக்குறளும் அது கூறும் சமணக் கருத்துகளும் எனக்கு முற்றிலும் உடன்பாடானவையே. நானே சமண வழியில் பால், தேன், கம்பளி, வேர்களாகிய மரக்கறி ஆகியவற்றை கொஞ்சம் கொஞ்சமாக தவிர்த்துவருகிறேன்.] அதற்காக சித்திரையை ஏன் தண்டிக்க வேண்டுமென்று தெரியவில்லை.

கருணாநிதிக்கு மதநம்பிக்கை ஏற்பட்டுவிட்டதாகவே நான் நினைக்கிறேன். வேதமதம் தவிர்த்து சமணம், சாய் பாபா, அமிர்தா, சூரிய வணக்கம், நீத்தார் நடுகல் வணக்கம் என்று எங்கோ போய்க்கொண்டிருக்கிறார். சாகிற நேரத்தில் சங்கரா என்றில்லாமல் சமணம் என்கிறார். அவ்வகையில் மகிழ்ச்சியே.

கருணாநிதி சிறு வயதிலேயே திருக்குறளை நன்கு படித்திருந்தால் ஊண் உணவு, பலதார மணம் முதலியவற்றையும் தவிர்த்திருப்பார் என்றே நினைக்கிறேன்.

வவ்வால் said...

பாலாஜி,

நீங்க இத்தனை தெளிவானவர்!!?? என்று எனக்கு தெரியாமல் போச்சு!

//இது நீங்கள் எடுக்கப் போகும் திரைப்படத்தின் கதையா?//

டிசம்பர் 21 அன்று ஆண்டு முடிவதாக ஒரு காலத்தில் இருந்தது , உங்களுக்கு தெரியாதது எனில் கதை என்றால் அது கதையே, அப்படியே வைத்துக்கொள்ளுங்கள், நீங்கள் சொல்லும் கதையை விட என்கதை மோசமாக இல்லை! :-))

திருவள்ளுவர் பற்றி சொல்வதை மூட நம்பிக்கை என்று எதன் அடிப்படையில் சொல்லப்போனீர்கள்?

முதலில் நம் முறைப்படி என்று மட்டும் சொன்னதும் ,ஈக்னாவிக்ஸ் பற்றி உங்களுக்கு தெரியாதா , நேரம் விரயம் என்றீர்கள் நான் இப்போது தெளிவாக சொன்னதும் அது தெரியாமலா பதிவு போட்டேன் நானே போட்டு இருக்கேனே என்கிறீர்கள், பிரச்சினையே நீங்கள் சொன்ன விஷயங்கள் உங்களுக்கே முழுதும் புரியாதது தான்! சுட்டுப்போடுவதோடு சரியா :-))

இந்தியப்பகுதி தென்பகுதியின் அருகே உள்ளது. மேலும் அப்போ இது ஆஸ்திரேலியா, அண்டார்டிகாவா என்பது போல இது என்ன இங்கிலாந்து, அமெரிக்காவா, உங்கள் கூற்றுப்படி பின்ப்பற்ற.

எதோ ஒரு பகுதியின் வானியலை தான் எடுத்துக்கொள்ள வேண்டும், அதன் பதி இப்போது எடுத்து இருக்கோம், ஆனால் இந்த பொங்கல் ஒட்டி புத்தாண்டு மாற்ற காரணமே இல்லை என்று சொல்வது எப்படி?

//ஹலோ? இது என்ன வாழைப்பழக் கதையா? Julian நாட்காட்டியிலேயே January தான் முதல்மாதம். அப்புறம் வந்த Gregorian நாட்காட்டியில் நிச்சயம் January தான் முதல் மாதம்.//

இந்த காலண்டர்களுக்குலாம் முன்னர் காலண்டர்களே இல்லையா அதை தான் முந்தைய காலண்டர்னு சொல்லி இருக்கேன். நீங்கள் கூகிளில் ஏப்ரல் 1 என்று தேடிப்பார்க்கவும், ஒரு காலத்தில் ஏப்ரல் 1 புத்தாண்டாக இருந்ததைக்காட்டும்.

//இயேசு இறந்த சில நூற்றாண்டுகளிலேயே அவர் எப்போது வாழ்ந்தார் என்று கணக்கிட ஆரம்பித்துவிட்டார்கள். இயேசு வாழ்ந்தகாலத்தில் இருந்த ஹெராட் என்கிற அரசன், பிலாத்து என்கிற உரோம ஆளுனர் ஆகியோரின் வருடங்களைக் கண்டுபிடிப்பதும் மிக எளிதே.//

நீங்க தான் அப்படி சொல்லிக்கணும் , இன்னும் இயேசுவின் பெயரே அவர் பெயர் அதுவல்ல என்று சொல்வதை எல்லாம் படித்தது இல்லைப்போலும்.

மேலும் அவர் சரியாக எந்த நாட்டில் பிறந்து வசித்தார், எந்த காலம் என்பது எல்லாம் ஆங்கில மயமாக்கப்பட்டவர்களின் புனைவு தான், உண்மையான காலம், இடம் சந்தேகத்துக்குரியது என்றே பலரும் சொல்வார்கள். அவர் பிறந்தது டிசம்பர் மாதம் அல்ல என்றும் சொல்வார்கள்.

இயேசு குறித்தான எந்த தகவலும் முழுமையானது அல்ல, எல்லாம் ஒரு நம்பிக்கையின் பெயரில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இயேசுவின் பெயர் குறித்தான சர்ச்சையை மட்டும் சொல்லி விடுகிரேன்,

அவரது பெயர் ஜோஷ்வா, என்கிற ஜெஹொவா என்று தான் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். இது ஒரு யூதக்கடவுள் பெயர், இயேசு யூதக்குடும்பத்தில் பிறந்தவர் என்பதால் அது சகஜமே, பின்னர் அவரே தனிமத போதகராக உருவானதால் அவரது மறைவுக்கு பின்னரே இயேசு கிருஸ்து என்று சொல்ல ஆரம்பித்தார்கள். இது எந்த காலத்தில் என்று தெரியவில்லை.

இயேசு என்றால் காப்பவர், கிருஸ்து என்றால் இறை தூதர் என்று பொருளில் அவரை பெயரிட்டார்கள் அதுவே இப்போது அழைக்கப்படுகிறது.

உங்கள் வரலாற்று அறிவு இத்தனை மோசமாக இருக்கும் என நினைக்கவில்லை. கொஞ்சம் வரலாறும் படிங்க!

நீங்கள் என்னடாவென்றால் திருவள்ளுவருக்கு மட்டும் ஆதாரம் இல்லை அது அவர் பெயர் தானா என்று எல்லாம் கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்.

அவ்வையார் போன்றவர்கள் எல்லாம் திருக்குறள் பற்றி திருவள்ளுவ மாலையில் பாடி இருக்கிறார்கள், அணுவத்துளைத்து ஏழ் கடலைப்புகட்டி குறுக தெறித்த குறள்! என்று.

எனவே அவர் சங்க காலத்தினை சேர்ந்தவர் அதிலும் முற்ப்பட்டவர் என்பதில் அய்யம் இல்லை என்றே அனைவரும் சொல்கிறார்கள்.

Balaji said...

திரு வவ்வால்,

இது நான் உங்களுக்கு அளிக்கும் கடைசி மறுமொழி.

Equator என்னும் பூமத்திய ரேகையின் மேலுள்ள நாடுகள் எல்லாம் Northern Hemisphereஇல் இருப்பவையே. இந்தியா, பாரசீகம், சீனம், அரபு, உரோமம் என்று நான் கூறிய நாட்காட்டிகளெல்லாமே Northern Hemisphereஇல் இருப்பவையே.

என் அறிவியல், வரலாறு, religion, philosophy அறிவை நீங்கள் குறைத்து மதிப்பிட்டாலோ, நான் வரிந்து உங்களிடம் பொய் சொல்வேன் என்றோ நீங்கள் நினைத்தால் அதற்கு நான் ஒன்றும் செய்யமுடியாது.

வேண்டுமானால் எனது ஆங்கிலப் பதிவில் இருக்கும் மதம் சம்பந்தப்பட்ட பதிவுகளைப் படியுங்கள். இயேசுவின் யூதப் பெயர்கூடத் தெரியாதவன் என்று சொல்லும் உங்களிடம் நான் நிருபிக்கவேண்டியது ஒன்றுமேயில்லை. நான் Animism, Ajivika, Epicurus, Manicheaism, Shamanism என்ற அளவில் இருப்பவனாக்கும். உங்களைப் போன்ற சிறுபிள்ளைகளிடம் விளையாட எனக்கு நேரமில்லை.

Anonymous said...

//உங்களைப் போன்ற சிறுபிள்ளைகளிடம் விளையாட எனக்கு நேரமில்லை.//

ரொம்ப சரி! வவ்வாலின் அரைகுறை விவாதங்கள் வலையுலகில் மிகவும் பிரசித்தம். உங்களுக்கு இப்போதாவது புரிந்ததே?!!

வவ்வால் said...

பாலாஜி,

எனக்கும் உங்களுடன் உரையாடுவது உண்மையாக சொன்னால் காது கேளாதவன் கூட பேசுவது போலவே இருக்கு. இங்கே மறு மொழி இட்டு தான் என் காலத்தை கழிக்கனும்னு எதுவும் இல்லை, பல தமிழ் அறிஞர்களையும் ஏக வசனத்தில் பேசியதோடு , திருவள்ளுவர் பற்றி சொல்வது மூட நம்பிக்கை என்றும் நீங்கள் சொல்ல ஆரம்பித்தீர்கள்.அவருக்கு அது தான் பெயர் என்பதற்கு என்ன சான்று என்றும் கேட்டீர்கள்!(இன்னொரு பதிவில்)

உண்மையில் நீங்கள் பலவும் அறிந்தவர் எனில் அப்படி சொல்ல வாய்ப்பில்லை.

இயேசு குறித்தான எல்லாமும் மெய்பிக்கப்பட்ட ஒன்று அதில் என்ன சந்தேகம் என்று சொன்னது நீங்கள் தான் , எனவே தான் அவை எல்லாம் ஒன்றும் தீர்க்கமாக சொன்ன வரலாற்று உண்மைகள் அல்ல என்று சொல்லவே அந்த உதாரணங்கள்.

இந்தியா வடப்பகுதியில் இருந்தாலும் தென்பகுதி தான் நமக்கு அண்மை, அதுவும் ஆசியாவின் ஒரு பகுதி தென் பகுதியில் தான் உள்ளது என்பதால் நாம் தென் பகுதி சார்ந்து மாற்றிக்கொள்வதில் தவறில்லை என்று சொல்லவே வந்தேன்.

//நான் Animism, Ajivika, Epicurus, Manicheaism, Shamanism என்ற அளவில் இருப்பவனாக்கும். //

அடேங்கப்பா நீங்க பெரிய மேதாவி தான் போங்க... நீங்கலாம் வலைப்பதிவு போடனும்னு என்ன அவசியம் வந்துச்சு... இல்லை யாராவது வந்து இப்படிலாம் எழுதுனு உண்ணாவிரதம் இருந்தாங்களா... சுய தம்பட்டத்துக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை ஆனால் சரக்கு தான் ஒன்றும் காணோம்!

இந்த பின்னூட்டம் நீங்கள் வெளியிடவில்லை என்றாலும் ஏன் என்று கேட்க மாட்டேன்,உங்கள் நோக்கம் எனக்கு புரிந்து விட்டது அது போதும்!இனிமேல் எக்கேடு கெட்டால் எனக்கென்ன!

ஓகை said...

பாலாஜி, நல்ல பதிவு.

//இந்தியா வடப்பகுதியில் இருந்தாலும் தென்பகுதி தான் நமக்கு அண்மை, //

இது எந்தெ மாதிரியான பூகோள அறிவு என்பது எனக்குப் புரியவில்லை. நாம் இருக்கும் பாதியைவிட இல்லாத பாதி அண்மை? என்னே விந்தை!

//அதுவும் ஆசியாவின் ஒரு பகுதி தென் பகுதியில் தான் உள்ளது என்பதால் நாம் தென் பகுதி சார்ந்து மாற்றிக்கொள்வதில் தவறில்லை என்று சொல்லவே வந்தேன்//

இப்படி நாம் கருத ஆரம்பித்தவுடன் சூரியன் குளிர்காலத்திலும் தமிழ்நாட்டின் மீது வெம்மையை பீய்ச்சி அடித்து கோடை ஆக்கிவிடும் என்று நம்பலாம்.

//இயேசு குறித்தான எல்லாமும் மெய்பிக்கப்பட்ட ஒன்று அதில் என்ன சந்தேகம் என்று சொன்னது நீங்கள் தான் ,//

பாலாஜி நீங்கள் இப்படிச் சொன்னதாக நான் நினைக்கவில்லை. இயேசுவின் காலம் சீடர்களால் அதிகமாக ஆராயப்பட்டுக் கொண்டே வருகிறது என்பதே நீங்கள் சொன்னது. திருவள்ளுவர் பற்றிய கால ஆராய்சிக்கு ஒப்புமையாகவே அதைச் சொல்லியிருக்கிறீர்கள்.

Balaji said...

ஓகை,

விளக்கங்களுக்கு மிக்க நன்றி! நானே கொடுத்திருக்க வேண்டும்!

இயேசுவின் பிறந்தநாள் கதை கொஞ்சம் யோசிக்க வேண்டியதுதான். அவர் பிறந்த தேதியை (நட்சத்திரம்) அவரே தமது சீடரிடம் கொடுத்திருந்தால் ஒழிய மற்றவருக்கு அது தெரிந்திருக்காது!

உரோம நாட்காட்டியில் இறிஸ்துவுக்கு முன்பிருந்தே சனவரிதான் முதல்மாதம். கிறிஸ்து இந்த ஆண்டில் பிறந்தார் என்று ஊகித்தவுடன் முதல் மாதமாகிய சனவரிக்கு அருகில் வரும் Winter Solstice தான் கிறிஸ்து பிறந்தநாள் என்று அவர்கள் வெறுமனே ஏற்றுக் கொண்டிருக்கலாம்.

கி.பி. முதல் மற்றும் இரண்டாம் நூற்றாண்டில் இத்தகைய rounding ஏற்றுக்கொள்ளக் கூடியதே. அந்த வருடம் தவறேயாயினும்
பல ஆயிரம் ஆண்டுகள் பின்பற்றும் முறையை இப்போது மாற்றத் தேவையில்லை. இத்தனைக்கும் அவர்கள் பிற்கால ஆராய்ச்சியின் பயனாய் கிறிஸ்து கி.மு. நான்காம் ஆண்டில் பிறந்திருக்கலாம் என்று அவர் பிறந்த வருடத்தை மாற்றினார்களே ஒழிய நாட்காட்டியின் முதல்வருடத்தை அல்ல!!

திருவள்ளுவர் விசயத்தில் அவர் பிறந்த தேதியை சில நூறு வருட rounding error கொடுத்துக்கூட சொல்லமுடியாது என்கிறபோது கி.மு. 31 என்கிற வருடத்தை ஏற்றுக் கொள்வது மிகவும் முட்டாள்தனமாகப் படுகிறது.

அந்த 1921 ஆண்டு கூட்டத்தில் "திருவள்ளுவர் கிறிஸ்துவுக்கு முன் பிறந்திருப்பார்" என்று ஒரு கிழடு சொல்லியிருக்கும். உடனே லேமூரியாக் கண்டத்தில் 50000 BC வாக்கிலேயே தமிழ் பேசிக் கொண்டிருந்தார்கள் என்று தேவநேயப் பாவாணர் உளறியிருப்பார். (அவர் அப்படிப் பட்ட கருத்துக்களை பரப்பிவந்தவர்தான்!) இந்த மடத்தனத்தை ஏற்றுக்கொள்ளாத மற்றவர்கள் பொத்தாம் பொதுவாக கி.மு. 31 என்று நிர்ணயித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்!

ஜடாயு said...

பாலாஜி, அருமையாக புத்தாண்டின் வானியல், பூகோள, கலாசார அடிப்படைகளை எழுதியிருக்கிறீர்கள்.

equinox correction பற்றி தெளிவாக சொல்லியுள்ளீர்கள். இதனால் தான் இதே நாளை பைசாகி, விசாகா என்று வைகாசி மாதப் பெயர்களுடன் இந்தியா மற்றும் உலகின் வேறு சில பகுதிகளிலும் கொண்டாடுகிறார்கள்.

இது பற்றிய எனது பதிவிலும் இதனைக் குறிப்பிட்டிருக்கிறேன் -

புத்தாண்டு சர்ச்சை: கருநாவின் கலாசார ஒழிப்பு திட்டம்

மிக்க நன்றி.

Balaji said...

திரு ஜடாயு,

உங்கள் இடுகையை நானும் படித்தேன். நன்றாக எழுதியுள்ளீர்கள். நான் முதலில் தமிழகம், கேரளம் மற்றும் பஞ்சாபில்தான் சூரிய நாட்காட்டி பயன்படுத்துவதாக நினைத்திருந்தேன். வங்காளம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் சூரியநாட்காட்டிதான் என்று உங்கள் பதிவைப் படித்துதான் தெரிந்துகொண்டேன். மிக்க நன்றி!

வெண்காட்டான் said...

...இது கருணாநிதியின் கலாசார அழிப்புத்திட்டத்தின் ஒரு முக்கிய அங்கம். கிருத்துவ மிஷனரிகளினால் ஆரம்பிக்கப்பபட்ட இந்த சீரழிவை இப்போது அவர்களின் அல்லக்கை அரசு நடத்திக்கொண்டிருக்கிறது. இதுவே, நம் வரலாற்று ஆராய்ச்சி நமக்குத் தெரிவிப்பது.
........

கிருஸ்தவ மிசனறிகள் சமயத்திற்காக தமிழை வளர்த்தனர். பிராமணர்கள் சமயத்திற்காக தமிழை அழித்தனர். அந்த வகையில் மிசனரிகள் பறவாயி்ல்லை. உங்களின் கூற்று ஒரு இந்துநிலைப் பார்வையில் இருந்து வருகின்றது என நினைக்கின்றேன். கருனாநிதியின் கலாசார அழிப்பு என்று எதை குறிக்கின்றீர்கள்.

Balaji said...

திரு வெண்காட்டான்,

உங்கள் கேள்வி மேலே பின்னூட்டமிட்ட திரு ஜெயராமன் அவர்களின் கருத்து சம்பந்தப்பட்டது. இதில் நான் தலையிட விரும்பவில்லை.

Balaji said...

விடாது கருப்பு,

உங்களுடைய பின்னூட்டத்தை நான் ஏன் நிராகரித்தேன் என்பது உங்களுக்கே தெரியும்!

வேதமதத்தினர் அசைவம் சாப்பிட்டனர் என்பது சிறுதுளியேனும் நூலறிவு உள்ளவர்களுக்குத் தெரிந்தே இருக்கிறது. மாடுகளை யாகத்தீயிலிட்டு படைப்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட காலத்தில் மாட்டுக்கறி சாப்பிட்டதில் என்ன ஆச்சரியம்?

வேதமதத்தினர் சமணம் போன்ற சிரமண மதங்களிடமிருந்து கற்றுக்கொண்ட நல்ல பழக்கம் ஊண் உண்ணாமை. பிறரிடமும் உள்ள நல்ல பண்புகளை ஏற்றுக்கொண்டு நம் வாழ்வை செம்மைப்படுத்திக் கொள்வது மனித இயல்பு.

அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று!

[யாகத்தீயில் ஆயிரம் உயிர்களை பலியிடுவதை விடவும், ஒரு உயிரைக் கொன்று உண்ணாமல் இருப்பது நன்று]

திருக்குறள் 26ஆம் அதிகாரம், பொருளுடன் இங்கே.