Monday, December 17, 2007

சென்னைத் திரைப்பட விழா

ஐந்தாவது சென்னைத் திரைப்பட விழா தற்போது நடந்துவருகிறது. சென்னைவாசிகள் கொடுத்து வைத்தவர்கள்! இங்கு திரையிடப்படும் தமிழல்லாத படங்களில் The Lives of others என்னும் ஜெர்மானிய படத்தை மட்டுமே நான் பார்த்திருக்கிறேன். அடூரின் நாலு பெண்கள் பார்க்க ஆர்வம்.

இந்திய திரைப்பட ரசிகர்கள் சங்கம் என்னும் அமைப்பு இந்த திரைப்பட விழாவை நடத்துகிறது. பாராட்டுக்கள். இவர்கள் ஆண்டு முழுவதும் பல நல்ல படங்களை திரையிடுவது தெரிகிறது. கலக்குங்க!

அடுத்த மாதம் சென்னையிலும் குவஹாத்தியிலும் நடக்கவிருக்கும் குறும்பட விழாவிற்கும் எனது வாழ்த்துக்கள்.

இந்தியத் திரைப்பட விழாக்களின் பட்டியல் கீழே. இவை நடக்கும்போது நீங்கள் அந்த ஊரிலிருந்தால் போய்ப் பாருங்களேன்!

1. சர்வதேச இந்தியத் திரைப்பட விழா, கோவா.
2. அரசின் திரைப்படச் சரகம் நடத்தும் மும்பை திரைப்பட விழா.
3. திருவணந்தபுரத்தில் நடக்கும் கேரள திரைப்பட விழா.
4. அரசின் சிறார் திரைப்படக் கழகம் நடத்தும் குழந்தைகள் திரைப்பட விழா.
5. கொல்கத்தா திரைப்பட விழா.
6. சென்னைத் திரைப்பட விழா.
7. தில்லியில் நடக்கும் ஆசிய/அரபு திரைப்பட விழா.
8. ஐதராபாத் திரைப்பட விழா.
9. பூரியில் நடக்கும் சுவாரசியமான சுதந்திரத் திரைப்பட விழா.
10. திருச்சுரில் நடக்கும் குறும்பட விழா.
11. புணே சர்வதேச திரைப்ப்ட விழா.
12. பெங்களூரில் நடக்கும் தண்ணீர் திரைப்பட விழா!

2 comments:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

என்னைப் போன்ற கருத்துக் கந்தசாமிகள் நிறைந்த தமிழ்ப் பதிவுலகில் முதற்பதிவர் சொன்னது போல் தொடுப்புகள் கொடுத்து எழுதும் சிலரில் நீங்களும் ஒருவர் :)

Balaji Chitra Ganesan said...

ஆ! அப்படியா?

ம்... நான்கூட ஒரு விதத்தில் 'இஸ்ரேல் என்னும் யூத நாடு இருக்கக்கூடாது' என்னும் ஆபத்தான கருத்துடையவன்தான்!