Friday, March 30, 2007

அய்யா சாமிகளே!, செய்தி படிக்க விடுங்கப்பா...

நான் தினமும் இணையத்தில் குறைந்தது பத்து செய்தித் தளங்களுக்காவது செல்கிறேன். ஆனால் உன்னை படிக்க விடுகிறேனா பார் என்று ஒரு கூட்டம் இங்கே அலைந்து கொண்டிருக்கிறது. இவர்கள் ஒன்று அவர்களுடைய தளத்தில் செய்திகளை எவருக்கும் தெரியாத இடத்தில் ஒளித்து வைத்திருப்பார்கள். (எ.கா: என்.டி.டீவி, டி.என்.எ) அல்லது குட்டிக்கரணம் அடித்தாலும் லினக்சில் படிக்கமுடியாதபடியான எழுத்துரு மற்றும் பக்க அமைப்பு வைத்திருப்பார்கள். (எ.கா: தினமலர், தினமணி மற்றும் எல்லா தமிழ் நாளிதழ்கள்!)

இந்நிலையில் தட்சுதமிழ் தளத்தை ஒருங்குறிக்கு மாற்றியவர்களுக்கு மட்டும் இந்த கோடைக் காலத்தில் தண்ணீர் பிரச்சனை வராமலிருக்க வேண்டிக்கொள்கிறேன்! விகடன் ஒருங்குறியில் இல்லாவிட்டாலும் அவர்களின் எழுத்துரு லினக்சில் தெரிவதாலும், நன்றாக இருப்பதாலும் அவர்களுக்கு டாங்கர் லாரி தண்ணிர் மட்டும் கிடைக்கட்டும்.

படிக்க முடியாதவனாகிவிட்ட (?!) எனக்கு இணையத்தில் இலவசமாக ஒளிபரப்பப்படும் சில செய்தித் தொலைக்காட்சிகள் ஓரளவுக்கு ஆறுதல். (என்.டி.டீவி, ஐ.பி.என், தூர்தர்சன்) ஐயா கலாநிதி மாறனே, சன் செய்தியையும் இதே மாதிரி இலவசமா ஒளிபரப்பினா தம்பியை முதலமைச்சாராவே ஆக்கிடலாமில்ல? முடிக்கிறதுக்கு முன்னாடி ஒரேயொரு கேள்வி. கே.டீவின்னு அருமையான தமிழ் பெயர் வைத்திருப்பதில் எழுத்துப்பிழை இருப்பதுமாதிரி தெரிகிறதே. குரங்கு டீவின்னா கு.டீவின்னு தானே வரனும்?

2 comments:

து. சாரங்கன் / Saru said...

சரியாச் சொன்னீங்க. தமிழ் வலையுலகில் இந்த எழுத்துருப் பிரச்சினை தாங்கல. பத்மா ஃபயர்ஃபக்ஸ் நீட்சி இந்த குறையைப் போக்குமென்றால் இதுவும் ஒரு சில வேளைதான் வேலை செய்கிறது. அதைப் பயன்படுத்தும்போது தேவையில்லாமல் context-menuக்கள் நீள்வதோடு, ஃபயர் ஃபக்ஸும் ஆமை வேகத்தில் வேலை செய்கிறது.

எல்லொரும் ஏன் ஒருங்குறியை பயன்படுத்த மாட்டேன்கிறார்கள்!?

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

msn tamil, yahoo tamil, தமிழ் சிஃபியும் ஒருங்குறியில் இருக்கிறது. இதை விட எல்லா செய்தித் தளங்களும் முழுமையான ஓடை வசதி அளிப்பது முக்கியம்.