மதுரைத் திட்ட மடலாடர் குழுவில் பேராசிரியர் கல்யாண் பாட்பசார் தளத்தில் 'சிவகாமியின் சபதம்' கேட்கக் கிடைப்பது பற்றி எழுதியிருந்தார். அங்கே சென்றதில் 'மகாபாரதம் பேசுகிறது'வும் கிடைத்தது.
தமிழ் படைப்புகளை ஒலிச்சித்திர வடிவில் கொடுப்பது நல்ல முயற்சி. தமிழுக்கு பங்களிக்க எளிதான வழி! மற்றபடி எல்லா தமிழ் புத்தகங்களையும் ஓலிப்புத்தகமாக வழங்க பதிப்பகங்கள் முன்வரவேண்டும். அமெரிக்க நெடுஞ்சாலைகளில் தனியாக வாகனம் ஓட்டிச்செல்பவர்கள் ஒலிப்புத்தகங்கள் கேட்பது வழக்கம்.
தமிழகத்தில் பல பேர் பன்னிரண்டாம் வகுப்புக்குமேல் தமிழை பெயர்ப்பலகைகளிலும், திரைப்பட விளம்பரங்களிலுமே படிக்கிறார்கள். என்னுடைய பல நன்பர்களால் இப்போது தமிழில் படிக்கவே முடிவதில்லை! மாறாக தமிழ்நாட்டுக்கு வெளியில் படித்ததனால் தமிழ் படிக்கமுடியாமல் ஆங்கில பொழிப்பெயர்ப்புகள் கிடைக்குமா என்று தேடுப்படிப்பவர்கள்் பலபேர் இருக்கிறார்கள். ஒலிப்புத்தகங்கள் அவர்களுக்கு மிகவும் பயன்படும்.
Monday, April 02, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment