Thursday, October 11, 2007

விக்கிபீடியா நிலவரம்

/. இல் விக்கிபீடியா குறித்து எதோ பேசிக்கொள்கிறார்கள். நான்கூட போன வருடம் சில மாதங்களுக்கு தமிழ் விக்கிபீடியாவுக்கு பங்களிப்பதாக பேர் பண்ணிக்கொண்டிருந்தேன். கடைசியில் ஒன்றுமே கிழிக்கவில்லை! விக்கிக்கு பங்களிப்பதற்கு அசாத்திய பொறுமையும், நல்ல மனசும் வேண்டுமென்று நினைக்கிறேன். இல்லை நிறுவனங்கள் மற்றும் நபர்கள் தாங்களே தங்களைப்பற்றி எழுதலாம். பள்ளிகள், கல்லூரிகள் மாணவர்களுக்கு வீட்டுப்பாடமாகக் கொடுக்கலாம்.

சரி, சரி, என்னுடைய சோம்பேறித்தனத்துக்கு சப்பை கட்டிக்கொண்டிருக்கிறேன். அவ்வளவுதான்!

1 comment:

கோபி said...

==மீண்டும் வாருங்கள்==
பாலாஜி, உங்கள் பங்களிப்புக்கள் விக்கிபீடியாவுக்கு மிகவும் வலுச்சேர்ப்பவையாகவே இருந்தன. உங்கள் கருத்துக்களும். மீண்டும் நீங்கள் அவ்வப்போதேனும் பங்களித்தால் மிகப்பயனுள்ளதாகவிருக்கும். இப்பொழுது தமிழ் விக்கிபீடியாவில் 12000 கட்டுரைகளை நெருங்குகிறோம். தரம் பேணுவது தொடர்பான பல உரையாடல்கள் நடக்கின்றன. பேராசிரியர் செல்வாவுடன் பேராசிரியர் வீ.கே.யும் இணைந்து பங்களிக்கிறார். கனக சிறீதரனும் ம்யூரநாதனும் தினமும் புதிக கட்டுரைகள் ஆக்குகின்றனர். டெரன்சும் நற்கீரனும் விக்கித் திட்டங்களில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். த.வி.யின் தரம் உயர்வதாகவே படுகிறது. மீண்டும் நாங்களும் வருவது மேலும் பயனுள்ளதாயிருக்கும். நன்றி. ~~~~ :)