Monday, July 30, 2007

பெர்க்மன் காலமானார்.


உலகின் தலைசிறந்த திரைப்பட இயக்குனர்களில் ஒருவரான ஸ்விடன் நாட்டு இங்க்மார் பெர்க்மன் நேற்று காலமானார். குணா பாணியில் சொல்லவேண்டுமானால் "மனிதர் உணர்ந்து கொள்ள அவரது படங்கள் சாதாரனமானவையல்ல, அதையும் தாண்டி ஆழமானவை, அற்புதமானவை!". அதனால் அவரது பெரும்பாலான படங்களை நம்மால் ரசிக்கமுடியாது! அவரே "என் படங்களை நானே பார்க்கமுடியாதபடி சோகமயமாய் இருக்கின்றன!" என்று சமீபத்தில் சொன்னார்.

அவரது 'Wild Strawberries' படத்தை எல்லோரும் கட்டாயம் பார்க்கவேண்டும். அவரது படங்களிலேயே மிகவும் இலகுவான படம். சீட்டில் உட்காரவைத்தே ஒரு ரசிகனை நரக வேதனை அடையச்செய்ய இயக்குனரால் முடியமென்பதற்கு 'Cries and Whispers' பார்க்கவேண்டும். மற்ற பெரிய இயக்குனர்களைப்போல் இவரது படங்கள் இந்தியிலும் தமிழிலும் காப்பியடிக்கப்படவில்லை என்று நினைக்கிறேன். அந்தப் படங்களைப் புரிந்துகொள்ளும் திராணியே நம்மவர்க்கு இல்லை என்பதொரு காரணமாக இருக்கலாம்.

மேலும் இவரது படங்களில் நடித்த நடிகர்கள் தெய்வங்களென்று சொன்னால் தப்பில்லை. அசாத்திய திறமை வேண்டும். பெர்க்மன் அவர்களுக்கு திரைக்கதை, வசனமெல்லாம் கொடுக்கமாட்டார். கதையில் அந்த பகுதியில் என்ன நடக்கவேண்டுமென்று சொல்லுவார். மற்றதை அவர்களே பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்!

No comments: