Monday, July 30, 2007
பெர்க்மன் காலமானார்.
உலகின் தலைசிறந்த திரைப்பட இயக்குனர்களில் ஒருவரான ஸ்விடன் நாட்டு இங்க்மார் பெர்க்மன் நேற்று காலமானார். குணா பாணியில் சொல்லவேண்டுமானால் "மனிதர் உணர்ந்து கொள்ள அவரது படங்கள் சாதாரனமானவையல்ல, அதையும் தாண்டி ஆழமானவை, அற்புதமானவை!". அதனால் அவரது பெரும்பாலான படங்களை நம்மால் ரசிக்கமுடியாது! அவரே "என் படங்களை நானே பார்க்கமுடியாதபடி சோகமயமாய் இருக்கின்றன!" என்று சமீபத்தில் சொன்னார்.
அவரது 'Wild Strawberries' படத்தை எல்லோரும் கட்டாயம் பார்க்கவேண்டும். அவரது படங்களிலேயே மிகவும் இலகுவான படம். சீட்டில் உட்காரவைத்தே ஒரு ரசிகனை நரக வேதனை அடையச்செய்ய இயக்குனரால் முடியமென்பதற்கு 'Cries and Whispers' பார்க்கவேண்டும். மற்ற பெரிய இயக்குனர்களைப்போல் இவரது படங்கள் இந்தியிலும் தமிழிலும் காப்பியடிக்கப்படவில்லை என்று நினைக்கிறேன். அந்தப் படங்களைப் புரிந்துகொள்ளும் திராணியே நம்மவர்க்கு இல்லை என்பதொரு காரணமாக இருக்கலாம்.
மேலும் இவரது படங்களில் நடித்த நடிகர்கள் தெய்வங்களென்று சொன்னால் தப்பில்லை. அசாத்திய திறமை வேண்டும். பெர்க்மன் அவர்களுக்கு திரைக்கதை, வசனமெல்லாம் கொடுக்கமாட்டார். கதையில் அந்த பகுதியில் என்ன நடக்கவேண்டுமென்று சொல்லுவார். மற்றதை அவர்களே பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்!
Thursday, July 19, 2007
கொஞ்ச நாள் பொறு தலைவா...
... அந்த அலாஸ்கா வஞ்சிக்கொடி தேடிவருவா! Greenpeace இயக்கத்தைச் சேர்ந்த ஜான் தனது நன்பர்களுடன் அலாஸ்காவின் பெர்ரிங் கடலில் ஆய்வு செய்துகொண்டிருக்கிறார். அக்குழுவினர் இங்கே அதைப்பற்றி பதிவெழுதுகிறார்கள். அவர்கள் கப்பலிலிருக்கும் வலைப்படக் கருவியின் நேரடி படங்கள் இங்கே. ம்...பொறாமையாக இருக்கிறது. ஆனால் இது சரி செய்யக்கூடியதுதான். வருகிற செப்டம்பரில் நானும் அலாஸ்கா சுற்றிப்பார்க்க செல்கிறேனாக்கும்!
என்னாது?!! நீங்க Greenpeace உறுப்பினர் இல்லையா?!
என்னாது?!! நீங்க Greenpeace உறுப்பினர் இல்லையா?!
Monday, July 16, 2007
சிவாஜியை விஞ்சிய படம்!
சிவாஜிதான் கடந்த பல வருடங்களில் நான் பார்த்த மிகமட்டமான படமென்று நினைத்திருந்தேன். அந்த 'சாதனை' ஒரே வாரத்தில் முறிந்துவிட்டது. இந்த Transformers ஐவிட மட்டமான படத்தை ஈரேழு பதினான்கு உலகங்களிலும் அண்டம் அழியும்வரை யாராலும் உருவாக்கமுடியாது. மேகன் பாக்ஸை மட்டும் கொஞ்சம் ரசிக்கலாம்!
சிவாஜியையாவது திருட்டு டிவிடியில் பார்த்ததில் நேரம் மட்டும்தான் விரயம். இந்த இழவை நேற்றிரவு திரையரங்கில் பார்க்கப்போய் பாதியில் தலைதெரிக்க ஓடிவந்ததில் நேரம், பணம், தூக்கம் எல்லாம் போச்சு! இனி ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் படங்களை முற்றிலுமாகத் தலைமுழுகிவிடலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். Au Revoir Les Enfants, Leben der Anderen, Das மாதிரி படங்களைப் பார்த்து திருந்துங்களேன்பா.
பி.கு: அதற்கு முந்தைய இரவு ஹாரி பாட்டர் பார்த்தேன். பரவாயில்லை. பார்க்கலாம்.
Saturday, July 14, 2007
எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு!
நீங்கள் ஏற்கனவே தெரிந்துகொண்டிருக்கலாம். ஆனாலும் திறந்தமூல மென்பொருளாக்கத்தில் வியத்தகு முன்னேற்றங்கள் வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. கோபுண்டு, ஜி-புத்துணர்ச்சி (gNewSense), ஏவுதளம் (Launchpad) ஆகியவை அடுத்தடுத்து ஆரம்பித்துள்ளன. ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டதாகப் பாடும் காலம் வெகு தொலைவில் இல்லை. இந்த gHurd யும் மறந்துவிடாதீர்கள்.
தம்பட்டம் ...
Tuesday, July 10, 2007
அனுராதா, என் தேவதையே!
பூனைக்கு மணி கட்டுவது யாரு? அதாவது ரஜினி, தமிழ் சினிமாவின் மிகப்பெரும் வெட்கக்கேடு என்னும் உன்மையை யார் எடுத்துச் சொல்வது? தமிழனின் கண்மூடித்தனமான சினிமா வெறியில் பணம் செய்து திண்றுகொண்டிருக்கும் உதவாக்கரைகள் ரஜினி, சங்கர் போன்றோரை யார் தோலுரித்துக்காட்டுவது? இதை செவ்வனே செய்த அனுராதாவுக்கு (பகுதி 1, பகுதி 2) எனது மனமார்ந்த பாராட்டுக்கள்!
அனுராதா சொல்வதுபோல் ரஜினி என்ற மனிதன் நல்லவராக இருக்கலாம். இல்லாவிட்டாலும் (புகைக்கு அடிமையானவர் ஆன்மீகவாதியாம்!) அதைப்பற்றி நமக்குக் கவலையில்லை. ஆனால் நடிகனாக அவர் விமர்சனத்திற்கு உரியவரே. சிவாஜிராவும், (pre 1990) ரஜினிகாந்தும் ஜெயித்துவிட்டார்கள். சூப்பர் ஸ்டார் அசிங்கமாகத் தோற்றதோடு மட்டுமில்லாமல் தனது சாக்கடை உலகத்து தமிழ் சினிமாவையும் இழுத்துச் சென்றிருக்கிறார். என்று தணியும் இந்த கேவல மோகம்?
அனுராதா சொல்வதுபோல் ரஜினி என்ற மனிதன் நல்லவராக இருக்கலாம். இல்லாவிட்டாலும் (புகைக்கு அடிமையானவர் ஆன்மீகவாதியாம்!) அதைப்பற்றி நமக்குக் கவலையில்லை. ஆனால் நடிகனாக அவர் விமர்சனத்திற்கு உரியவரே. சிவாஜிராவும், (pre 1990) ரஜினிகாந்தும் ஜெயித்துவிட்டார்கள். சூப்பர் ஸ்டார் அசிங்கமாகத் தோற்றதோடு மட்டுமில்லாமல் தனது சாக்கடை உலகத்து தமிழ் சினிமாவையும் இழுத்துச் சென்றிருக்கிறார். என்று தணியும் இந்த கேவல மோகம்?
கூரையுள்ள இடத்தில் குளிக்கவும்...
ஸ்லேஷ்டாட் தளத்தில் சீன நீர்மூழ்கிக் கப்பல் கூகுள் வரைப்படத்தில் தெரிவது குறித்த இந்த பதிவு பற்றி விவாதம் நடக்கிறது. அதில் வடகொரிய வான் தாக்குதலை தவிர்க்க அமெரிக்க/தென்கொரிய கட்டிடம் ஒன்று தரை நிறத்தில் வண்ணம் தீட்டப்பட்டிருப்பதை ஒருவர் சுட்டிக்காட்டினார். ஏதேதோ கூகுளில் தெரிகிறது. குளிக்கப் போகும்போது கவனமிருக்கட்டும்!
Saturday, July 07, 2007
ஹே யூ!
உலகெங்கும் இன்று (07/07/07) நடக்கும் லைவ் எர்த் கச்சேரிகளுக்கு எனது வாழ்த்துக்கள். கச்சேரிகளை நேரடியாகக் காண இங்கே செல்லவும். (IE உலாவி கேட்கும் அத்தளத்திற்காக வருந்துகிறேன்).
Thursday, July 05, 2007
சீனி கம், தரம் அதிகம்!
நேற்று சீனி கம் (சக்கரை குறைவு) பார்த்தேன். நல்ல படம். அமிதாப் பச்சனை வெறுக்கும் நான் கூட படத்தை ரசிக்க முடிந்தது. ரஜினி, அமிதாப், சிரஞ்சீவி போன்ற தாத்தாக்கள், இந்த மாதிரி படங்களில் மட்டும் நடித்தால் புண்ணியமாய்ப் போகும். தபுவைப் பற்றி சொல்லத் தேவையில்லை. கலக்கியிருக்கிறார்.
இளையராஜாவின் நான்கு பழைய பாடல்களை குறிப்பாக 'மன்றம் வந்த தென்றலை' வேறொரு காட்சியில் பார்ப்பது சுகம். ராஜா பாடாவதி படங்களுக்கு பாடாவதி இசையமைத்து மேலும் பெயரைக் கெடுத்துக்கொள்ளாமல் இதே பாணியை பின்பற்றலாம். புதிய இயக்குனர் பாலகிருட்டினன் வெற்றிபெற வாழ்த்துக்கள்.
சுதந்திர தின 'டபுள் தமாக்காவாக' ராட்டடூயீ என்கிற இயக்கமூட்டிய படத்தையும் பார்த்தேன். சுமாரான படம்தான்.
Wednesday, July 04, 2007
பன்னிங்க தான்டா...
ராஜ்தீப் சார், நம்ம அனுராதாவுக்கு ஒரு கெத்தான சம்பள உயர்வு கொடுங்க. இது விமர்சனம்!!! நான் சிவாஜி படம் பார்க்கவில்லை. பார்க்கப் போவதுமில்லை! ம்...பச்சை கலர் சூட்டு, "ஏம்மா என்னை கருப்பா பெத்தீங்க..." மாதிரி நகைச்சுவை, 'அணா' காலத்து ஒரு ரூபாய் ஸ்டண்டு. இந்தக் கொடுமையை தீயேட்டரில் வேற போய் பார்க்கனுமா? ஆனா இந்த டைலாக்கை இப்படி சொன்னா ரசிக்கலாம்...
"பன்னிங்க தான்டா கூட்டமா போய் ரஜினி படம் பார்க்கும்!
நான் சிங்கம்டா, பொறுத்திருந்து தசாவதாரம் பார்ப்பேன்டா!!"
பி.கு: நீங்களும் போய் சிவாஜி பார்த்திருந்தால், தவறாக எடுத்துக் கொள்ளவேண்டாம்.
07/07/07 அன்று நிலவரம்:
யப்பா....திருட்டு டிவிடியில் (கூகுள்) பாதி படம் பார்த்தேன். IQ வில் பாதி குறைந்துவிட்டது!! மீதியையாவது காப்பாற்றிக்கொள்ளப் பார்க்கிறேன்.
"பன்னிங்க தான்டா கூட்டமா போய் ரஜினி படம் பார்க்கும்!
நான் சிங்கம்டா, பொறுத்திருந்து தசாவதாரம் பார்ப்பேன்டா!!"
பி.கு: நீங்களும் போய் சிவாஜி பார்த்திருந்தால், தவறாக எடுத்துக் கொள்ளவேண்டாம்.
07/07/07 அன்று நிலவரம்:
யப்பா....திருட்டு டிவிடியில் (கூகுள்) பாதி படம் பார்த்தேன். IQ வில் பாதி குறைந்துவிட்டது!! மீதியையாவது காப்பாற்றிக்கொள்ளப் பார்க்கிறேன்.
Subscribe to:
Posts (Atom)