அனில் அம்பானியின் சபக் நிறுவனம் 'big adda' என்னும் 'சமூக உறவுகள்/தொடர்புகள்' தளத்தை (அதாவது கடலை போடுமிடம்!) ஆரம்பித்துள்ளது. 'adda' என்றால் குடில், கூடுமிடம் என்று பொருளாம். நம்ம ஊரில் குட்டிச்சுவர் என்போம். 'big' என்பது அம்பானியின் பன்பலை அலைவரிசைகளின் பெயரும்கூட. ஆர்கூட்டிலேயே பழியாய்க்கிடந்து கூகிளின் வருமானத்தை அதிகரித்துவரும் இந்தியர்கள் இனி அனில் அம்பானிக்கு சம்பாதித்துக் கொடுக்கலாம்.
இவர்கள் 'big flicks' என்னும் இணைய திரைப்படத்தளத்தையும் ஆரம்பிக்கப் போகிறார்களாம். இது நல்ல முயற்சிதான் என்றாலும் எவ்வளவு வெற்றிபெறுமென்று தெரியவில்லை. தமிழில் ஜி.வி. திரைப்பட நிறுவனம் ஆரம்பித்த திரைப்படத்தளம் வெற்றிபெற்றதாகத் தெரியவில்லை. வெட்கங்கெட்ட தமிழன் (நானும் தான்!) திருட்டுத்திரைப்படத் தளங்களில் காசு கொடுத்தும், டாரண்ட்சுகளிலும், நிரோஜன் சக்திவேல் உள்ளிட்டோரின் கூகிள் 'அன்பளிப்புகளிலும்' மஜா பண்ணிக் கொண்டிருக்கிறான்.
Thursday, May 10, 2007
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
சக விக்கியரான எனக்கு நிரோ ஒன்னும் அன்பளிக்கவில்லையே ;) நீங்களாவது செய்யக்கூடாதா?
தமிழ் ட்டொரன்சில் தரவிறக்கிப் பார்த்துட்டு அந்தத் தளத்துக்கு நன்கொடையும் கொடுக்கிற வெ.கெ தமிழன்ல நானும் ஒருத்தன் :)
ஆனா, நெதர்லாந்துல தமிழ்ப் படங்கள் அவ்வளவா வெளியாகுறதில்லை.
சாசனம் படம் எங்காச்சும் இணையத்துல கிடைச்சா சொல்லுங்க
சாசனம் பற்றி விசாரித்துச் சொல்லுகிறேன்.
நிரோ கூகிள் விடியோவில் பல படங்களை (தமிழில்் தலைப்புகளுடன்) பதிவேற்றி இருக்கிறார்! அதில் விக்கிக்கு பங்களிக்க வருமாறு அழைப்பும் சில சமயம் இருக்கும். "நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்லை' என்று அதனை எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்.
ம்... ஐரோப்பாவிலிருந்து கொண்டு இப்படி பேசுகிறீர்கள். எனக்கு பொறாமையாக இருக்கிறது! அவர்கள் திரைப்படக் கலையை எங்கேயோ கொண்டுபோய் விட்டார்கள். அந்தப் படங்களைப் பார்த்துவிட்டு ஹாலிவுட்டு மற்றும் இந்தியப் படங்களைப் பார்க்கச் சகிக்கவில்லை!
இங்க வணிகத் தயாரிப்புகள் அவ்வளவா இல்ல. இவங்களும் ஹாலிவுட் படத்த மொழிமாற்றியோ உரையோடவோ தான் பார்க்கிறாங்க.
அப்பப்ப உலகளாவிய கலைப் படங்களும் பார்க்கிறது தான்
Post a Comment