Sunday, July 06, 2008

தமிழில் பழுப்புப் புதினங்கள் (Pulp Fiction)

இந்து நாளிதழில் இன்று வெளியான பழுப்புப் புதினங்கள் பற்றிய கட்டுரை படிக்கத்தகுந்தது. முதலில் Pulp Fiction என்பது மட்டரக தாளில் பிரசுரிக்கப்பட்டு மலிவுவிலையில் விற்கப்படும் மசாலா புதினங்களைக் குறிக்கும் என்பதே இதைப் படித்துதான் எனக்குத் தெரிந்தது.

தமிழ் நாட்டுப் பொட்டிக்கடைகளில் சக்கைப்போடு போடும் ராஜேஷ் குமார் போன்றோரின் புதினங்கள் இவ்வகையைச் சார்ந்தவை. தமிழில் இவைகளுக்கு ஏற்கனவே எதாவது பெயரிருக்கிறதா என்று தெரியவில்லை. சாணித் தாள் புதினம் என்று அழைக்கலாமா? அந்தத் தாள்கள் பழுப்பாக இருப்பதாலும், பழுப்பு என்பது pulp என்பதோடு ஒத்தொலிப்பதாலும் 'பழுப்புப் புதினம்' நல்ல தமிழாக்கமாக இருக்குமென்று நினைக்கிறேன்.


நிற்க. தமிழ் பழுப்புப் புதினங்கள் மற்றும் சிறுகதைகளின் தொகுப்பு ஒன்று ஆங்கிலத்தில் பிரசுரிக்கப்பட்டிக்கிறது. இதை தொகுத்து வெளியிட்ட ப்ரீதம் சக்ரவர்த்தி, ராகேஷ் கன்னா ஆகியோருக்கு எனது பாராட்டுகள். அட்டைப்படத்துக்கு தனியாக ஒரு பாராட்டு :)

1 comment:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

நானும் இதற்குத் தமிழ்ச் சொல் தேடிக் கொண்டிருக்கிறேன்.

புதினம் = novel

புனைவு = fiction

பழுப்பு - ஏற்றுக் கொள்ளத்தக்க சொல்லாக இருக்கிறது.