பட்டுப் புடவைகள்/வேட்டிகள் எவ்வளவு கொடூரமானவை என்று என்னுடைய இந்த ஆங்கில இடுகையில் எழுதியிருந்தேன். ஒரு பட்டுப்புடவை தயாரிக்க சுமார் 1500 பட்டுப் புழுக்கள் கொதிக்கின்ற வெந்நீரில் வேகவைக்கப்படும் அநியாயத்தை என்னவென்று சொல்வது? கடவுள் சிலைகளும் கன்னிப் பெண்களும் பட்டுத்துணி உடுத்தி வந்தால், ரசிப்பதா?! வெறுப்பதா?
இந்தக் கொடூரத்துக்கு சிறந்த மாற்று, பட்டுத் துணிகளையே அணியாமல் இருப்பதுதான்! மாற்றுத் துணிக்கே வழியில்லாமல் கஷ்டப்படும் மக்களிருக்க பட்டு என்னும் ஆடம்பரம் எதற்கு? அப்படியே அணிந்துதான் ஆகவேண்டுமென்றால் 'அகிம்சை பட்டு' என்னும் துணிகளை அணியலாம். பட்டுப் புழுக்கள் தாமே துறக்கும் கூடுகளிலிருந்து இந்தப் பட்டுத்துணிகள் தயாரிக்கப் படுகின்றனவாம்.
இது பற்றி டைம்ஸ் ஆப் இந்தியாவில் வந்த செய்தி இங்கே. சென்னை பூம்புகார் அங்காடியில் அகிம்சை பட்டு விற்கப்படுவது குறித்து போன வருடம் வந்த இந்து நாளிதழ் செய்தி இங்கே.
Thursday, February 07, 2008
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
நல்லா சொல்லியிருக்கீங்க.
பட்டு கட்டுவதில் எனக்கு உடன்பாடு இல்லை.
என் தாத்தா சொல்லி எங்கள் வீட்டில் யாரும் பட்டு கட்டுவதே இல்லை. இதை பெறுமையுடன் சொல்லிக்கொள்கிறோம்.
2 மாமாக்களும் திருமண்த்தின்போது பெண்வீட்டாரிடம் வைத்தக் கோரிக்கை, மணப்பெண் திருமணம் தொடங்கி தன் வாழ்நாளில் பட்டுப்புடவைகட்டிக்கொள்ளக்கூடாதுஎன்பதுதான்.
அவர்களிடம் வளர்ந்த நானும் அதே எண்ணத்தைமனதில் கொண்டு என்
திருமணத்தின்போது பட்டு கட்டிக்கொள்ளமாட்டேன். இதற்கு சம்மதம் சொன்னால்தான் திருமணம் என்பதில் உறுதியாய் இருந்தேன்.
அகிம்சா பட்டோ என்னவோ? பட்டு கட்டினால தான் நமக்கு மரியாதை, அந்தஸ்து என்றால் அப்படி பட்டவர்க்ளிடமிருந்து விலகி இருக்கலாம்.
பட்டை பட்டென்று விட்டு விடுவது நல்லது.
வாவ்!! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் பாராட்டுக்கள்.
Post a Comment