Thursday, November 22, 2007

படம் போடுங்க அண்ணாச்சி!

இன்று அலுவலகத்திலிருந்து திரும்பி வரும்போது தோன்றியது. சென்னை உள்ளிட்ட மாநகரப் பேருந்துகளில் பயணத் தொலைக்காட்சி வைத்து விளம்பரம் செய்யலாமே? (ஏற்கனவே செய்றாங்களா?)

தொலைக்காட்சி நிறுவனங்களை ஏலத்துக்கு அழைத்து, எல்லாப் பேருந்துகளிலும் விளம்பரத் தொலைக்காட்சி வைக்கச்சொன்னால் அரசுக்குப் பணம் கிடைக்குமில்ல? அந்தப் பணத்தில் இன்னும் நிறைய பேருந்து விட்டால் புண்ணியமாப் போகும்.

3 comments:

Anonymous said...

This will not work even thought in some places(Like Thirunelveli - Private buses) as the people including the conductor will start to watch with loud vol and teh driver won't listen to the whistle. A lot of issues we can find it in other places.

மங்களூர் சிவா said...

சேலம் போன்ற நகரங்களில் டிவிடி கோச்சுக்காக நின்று ஏறுகிறார்கள் நம்மவர்கள்.

அனானி சொன்னபடியே மிக அதிக சத்ததுடன் பயணிக்கிறது பேருந்து. அசம்பாவிதம் நடக்காதவரை ஒன்றும் பிரச்சனை இல்லை !!

Balaji Chitra Ganesan said...

ம்... நான் படம் போடுங்க...ன்னு தலைப்பிட்டிருந்தாலும் படம் போடும் தனியார் பேருந்துகளை எனக்கே பிடிக்காது. நான் சொல்றது முன்னாடி சென்னை சென்ட்ரல் நிலையத்துல வச்சிருப்பாங்கலே, அது மாதிரி விளம்பரம் மட்டும் வரும் தொலைக்காட்சி.
சில ஊர் பேருந்து நிலையங்களிலும் வைத்திருப்பார்கள். பொன்வண்டு, காளி மார்க் சோடான்னு விளம்பரம் வருமே!

இங்க நான் பயணிக்கும் பேருந்துகளில் விளம்பரம், அரசோட புள்ளிராஜா மாதிரியான போதனைகள், செய்தி, weather மாதிரியான விசயங்கள் போடறாங்க.

அரசே இதைச் செய்தா வீண் புடுங்கல். அதனால தனியார் நிறுவனங்களிடம் விட்டுடலாம்னு சொன்னேன்.