Friday, November 30, 2007

பிங்க்குதான் எனக்கு புடிச்ச கலரு ?!!!


இந்திய மட்டைப்பந்துக் கழகம் ஆரம்பிக்கப்பட்டு முதலாவது போட்டிகள் தொடங்கியிருக்கின்றன. கலக்குங்க! ஆனா போயும் போயும் பிங்க் நிறமா சென்னை சூப்பர்ஸ்டார்கள் அணிக்கு கிடைக்கனும்? கொஞ்சம் அசிங்கமா இருக்கு!

சூப்பர்ஸ்டார்கள் என்ற பெயரே சரியில்லைதான். 'சென்னைக் காளைகள்' என்று வைத்திருக்கலாம்! (சிகாகோ புள்ஸ் மாதிரி சென்னை புள்ஸ்?!) PHLஇல் விளையாடும் ஹாக்கி அணிக்கு சென்னை வீரர்கள் என்று நன்றாகப் பெயர் வைத்திருக்கிறார்கள்.

அதே மாதிரி விஜய் மல்லையா இன்னொருவருடன் சேர்ந்து வாங்கிவிட்டார் என்பதாலேயே Spkyer என்ற Formula 1 அணிக்கு Force India (Farce India?!) என்று அசிங்கமாகப் பெயர் வைத்திருக்கிறார்கள். Kingfisher பெயரையும் சேர்த்து 'King Spyker' என்று வைத்திருக்கலாம்.

F1 இல் இருக்கும் அணிகளுக்கு காரைத் தயாரித்தவர், அணியின் முதலாளி நிறுவனம் இரண்டையும் சேர்த்து பெயர் வைப்பது வழக்கம். (BMW Williams, Mclaren Mercedes) இந்தியர்கள்தான் Force India என்று சிறுபிள்ளைத் தனமாக யோசிப்பார்கள்! பாரதி படத்தில் "தேசப்பற்று கள்ளக்காதல் ஆகிட்டது ஓய்!" என்று சொல்லுவார். இப்போது இந்தியர்களின் தேசப்பற்று விரசமாகிவிட்டது! (Jingoism!)

அ-சமத்துவபுரம்?

திருந்தாத ஜென்மங்கள் இங்கே. அடுத்த தடவை ஐதராபாத்தில் குண்டு வெடிக்கும்போது இங்கு வெடித்தால் தேவலை. இந்த சனியன்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள இங்கே செல்லவும். (குண்டு வைக்கப் பயன்படுமில்ல!)

Thursday, November 29, 2007

இன்று மலேசியா, நாளை தமிழகம்?

மலேசியத் தமிழர்கள் இனரீதியிலான இடஒதுக்கீடு, பொருளாதாரப் பங்கீட்டுக் கொள்கைகளால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என்ற விசயமே எனக்கு இப்போதுதான் தெரிந்தது. அதற்காக வருந்துகிறேன். அவர்களின் அறப்போராட்டம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள். அவர்கள் சில கிறுக்கத்தனமான கோரிக்கைகளைக் கைவிடுவது அவர்களின் போராட்டத்திற்கு மேலும் வலுசேர்க்கும்.

நிற்க. பெரும்பான்மை மக்கள் காலம் கடந்து இடஒதுக்கீடு பெறுவது எப்படி தவறாக முடியும் என்பதை மலேசிய நிலைமை எடுத்துரைக்கிறது. பிற்காலத்தில் தமிழகத்திலும் இந்த மாதிரி நிலைமை வரலாம். இன்றைய நிலையில் தமிழக சாதிவாரி ஒதுக்கீட்டு அளவு நியாயமாகத்தான் இருக்கிறதென்று நினைக்கிறேன். ஆனால் தமிழரின் பொருளாதார நிலை மேம்படும்போது சிலர் தேவையில்லாமல் தண்டிக்கப்படும் நிலை ஏற்படலாம்.

இடஒதுக்கீடு மூலம் சமூக நீதியை நிலைநாட்டும் முயற்சியில் முன்னோடியாகத் திகழும் தமிழகம், சாதிவாரி இடஒதுக்கீடு இனி தேவையில்லை என்று நிர்ணயிக்கும் முடிவை சரியான தருணத்தில் எடுக்கும் என்று நம்புகிறேன். முதல் காரியமாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களில் தேவையானவர்களுக்கு பயன்கள் போய்ச் சேருகிறதா, இல்லை அவர்கள் இடுக்கில் விழுந்துவிட்டார்களா என்று அறிய முயற்சிகள் எடுக்கவேண்டும்.

Wednesday, November 28, 2007

எட்டப்பா!

தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டதும், கன்னடத்திற்கு அந்த 'அந்தஸ்து' இன்னும் வழங்கப்படாததும், கன்னடர்களுக்கு மிகுந்த மனவருத்தம் தருவது நாம் அறிந்ததே. அது பற்றி இந்துவில் வந்த மற்றொரு செய்திக் கட்டுரையை சுருமுரியில் சுட்டி பேசிக்கொண்டிருந்தார்கள். இங்கே பார்க்கவும். நான் எட்டப்பனாகப் புகுந்து தமிழைக் காட்டிக்கொடுத்தேன்! அதை எனது ஆங்கிலப் பதிவிலும் இட்டுள்ளேன்!

கட்டபொம்மு பெயர் இருக்கும்வரை எட்டப்பன் பெயரும் இருக்குமாக்கும் ...

இந்தியாவின் கதை!



மேலும் விவரங்களுக்கு இங்கே! இந்த ஒளித்துண்டும், மற்ற பகுதிகளும் இங்கே.

தமிழகம் என்னும் மாயா உலகம்!


மைக்கேல் வுட் என்னும் வரலாற்று அறிஞர் சென்னையைப் பற்றி எழுதியதை நேற்று சுட்டியிருந்தேன். இன்று அவரின் மற்றொரு கட்டுரையைப் படித்தேன்.

கொல்லம் மெயிலேறி மதுரை, தஞ்சை, மாயவரம், குடந்தை, சிதம்பரம், புதுவை என்று அவர் அடுக்கிக்கொண்டே போக, என் மண்ணின் வாசம் வந்து நெஞ்சை முட்டுகிறது! ம்... இப்போதைக்கு கடந்த முறை தஞ்சை பெரிய கோவிலில் நான் எடுத்த படங்களைப் பார்த்து திருப்தியடைய வேண்டியதுதான்.

மைக்கேல் மாயா விஷன் மற்றும் பிபிசி 2 ஆகியோருக்காகச் செய்த 'இந்தியாவின் கதை' என்ற தொடருக்காகத்தான் மாயா உலகில் சுற்றியிருக்கிறார். கொடுத்து வைத்தவர்!

படம்: நன்றி மாயாவிஷன்.

Tuesday, November 27, 2007

இவர்களும் இந்தியர்கள்தான் ...

அஸ்ஸாம் மாநிலம் குவாஹாத்தியில் ஒரு ஆதிவாசிப் பெண்ணுக்கு நாகரிகம் தெரிந்த இந்தியர்கள் கொடுத்த 'தண்டனை', அவரது உடைகளைக் கலைந்து அவமானப் படுத்தியதுதான்! அந்தப் பெண் உள்ளிட்ட பல ஆதிவாசிகள் தங்களை பழங்குடியினராக (Scheduled Tribe) அறிவிக்கக்கோரி வன்முறையுடன் போராடினார்களாம். அதற்காக இந்த பதிலடி. இது நடந்தபோது சுற்றி நின்று படம்பிடித்த இளைஞர்கள்தான் நாளைய இந்தியாவை உருவாக்கப் போகிறார்கள். உருப்பட்ட மாதிரிதான்.

Monday, November 26, 2007

உம்மாச்சி கண்னைக் குத்தும்!

மைக்கேல் வுட் என்பவர் சென்னை (இல்லை மெட்ராஸ்) பற்றி எழுதிய இந்த அறிமுகக் கட்டுரை புன்னகைக்க வைத்தது. "buxom goddesses with Bollywood starlet eyes - utterly irresistible." இது நம்ம ஊர் பெண் கடவுளர் பற்றிய அவரது டேக்! குஷ்பு கோயிலுக்கு போயிருந்தாரோ?

பொல்லாதவன், ஆமாம்!

அப்பாடா! கடைசியா ஒரு நல்ல தமிழ் படம் பார்த்தாச்சு. 'பொல்லாதவன்' - கலக்கிட்டீங்க வெற்றிமாறன்! தமிழ் சினிமா முன்னேறிட்டு வருது என்று பலரும் சொல்லும்போது, நிஜமா? என்று தோன்றும்.

கடந்த இரண்டு வருடங்களில் நான் பார்த்த தமிழ்ப்படம் 6-7 தான் (?!) இருக்கும். 'சிவாஜி', 'வேட்டையாடு' - கேவலம். 'மொழி', 'வெயில்', 'பச்சைக்கிளி' - சுமார். 'இம்சை', 'பட்டியல்' - நன்று! மற்றபடி ஊடகங்களிலும், பதிவுகளிலும் பேசப்பட்ட படங்கள் பலவற்றை நான் பார்க்கவில்லை.

கூகுள் வீடியோவில் பார்த்தாலும் திருட்டுதானே என்கிற வருத்தத்தோடுதான் 'பொல்லாதவன்' பார்த்தேன். நல்ல நகைச்சுவை, கச்சிதமான பாத்திரங்கள், பிசிரில்லாத நடிப்பு, வசனங்கள், நம்பும்படியான காட்சிகள். இவற்றிற்காகவே இந்தப்படத்தைப் பாராட்டலாம்.

ஆனால் அதற்கும் மேலாக விருவிருப்பான திரைக்கதை, நாயகன், வில்லன் இருவர் பார்வையிலும் வர்ணனை மாறும் உத்தி, செல்வம், அவுட் மாதிரியான பாத்திரங்களையே நமக்குப் பிடித்துவிடும்படியான காட்சிகள், நாயகன் தங்கச்சியை வில்லன் கடத்துவான் என்று நினைக்கும் நம்மை கேலிசெய்யும் இயக்கம்!, ஒரு அடியாளை 'அடிச்சுடு பிரபு' என்று நாயகி சொல்லும் ஹைக்கூ! கலக்கியிருக்கிறார்கள்!

பாடல்கள் எல்லாமே தேவையில்லாதவை. அதுவும் வில்லன்கள் ஆடும் ஒரு குத்துப்பாட்டு திருஷ்டிப் பொட்டு. மற்றபடி நான் மிகவும் ரசித்த படம்.

Saturday, November 24, 2007

கன்ட்ரோல் - இல்லை!


மசாலான்னா இது மசாலா! கன்ட்ரோல் (Kontroll) என்ற ஹங்கேரியப் படம் பார்த்தேன். படம் முழுக்க புடபெஸ்ட் மெட்ரோவில் நடக்கிறது. அதாவது முழுக்கத் தரைக்கடியில். படம் துவங்கும்போது புடபெஸ்ட் இரயில்வே நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர், இந்தப் படத்தில் காட்டப்படுவதுபோல் இங்கு ஒன்றும் நடப்பதில்லை என்று சொல்வதே ஹைக்கூ!

பயணச்சீட்டு சோதனையாளரான நமது நாயகன் Bulcsu, அவனது கிராதக சக ஊழியர்கள், அமீர்கான்-அர்ஜுன் மாதிரியான ரயிலுடன் ஓடும் சாகஸம், அழகான கரடியாக வரும் நாயகி!, நகைச்சுவை, ரயிலுக்கடியில் சிதறும் 'குதிப்போர்கள்', ஒரு முகமூடி அணிந்த மர்ம மனிதன் (இல்லை 'அது') என்ற இந்த காக்டெயில் கதை, ஹங்கேரியில் பெரும் வெற்றிபெற்றதில் வியப்பில்லை.

Nimrod Antal இன் படம். மசாலாக் கதையில் பல வாழ்வியல் உண்மைகள் பொதிந்துள்ளதாக விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்! பார்க்கலாம்!

Thursday, November 22, 2007

படம் போடுங்க அண்ணாச்சி!

இன்று அலுவலகத்திலிருந்து திரும்பி வரும்போது தோன்றியது. சென்னை உள்ளிட்ட மாநகரப் பேருந்துகளில் பயணத் தொலைக்காட்சி வைத்து விளம்பரம் செய்யலாமே? (ஏற்கனவே செய்றாங்களா?)

தொலைக்காட்சி நிறுவனங்களை ஏலத்துக்கு அழைத்து, எல்லாப் பேருந்துகளிலும் விளம்பரத் தொலைக்காட்சி வைக்கச்சொன்னால் அரசுக்குப் பணம் கிடைக்குமில்ல? அந்தப் பணத்தில் இன்னும் நிறைய பேருந்து விட்டால் புண்ணியமாப் போகும்.

Wednesday, November 21, 2007

பானை ஒறி!

ஆமாம். பானை ஒறி! 'கயிற்றில் தொங்கும் பானை' என்று பொருள்தரும் இந்த வார்த்தைகள் எழுதிய பானைத் துகடு ஒன்று கிடைத்திருக்கிறது. அதுவும் எகிப்து நாட்டின் குசேர்-அல்-காதிம் என்ற இடத்தில் கிடைத்திருக்கிறது. இது கி.மு. முதலாம் நூற்றாண்டில் செய்யப்பட்டிருக்கலாம் என்கிறார்கள்.

அதற்கென்ன இப்ப என்கிறீர்களா? இதுக்கு முன்னாடி இதே இடத்தில் கிடைத்த பானை 200 வருடம் பிந்தையது. பண்டைய காலத்தில் இந்தியாவுக்கும் உரோம சாம்ராஜ்யத்துக்கும் இருந்த வியாபார உறவுகளைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள இந்தக் கண்டுபிடிப்பு உதவப்போகிறது.

அதைவிட முக்கியமா தமிழ் பிராமி எழுத்து பற்றிய ஆராய்ச்சிக்கும் இது உதவும். இந்தியாவில் தமிழ்-பிராமி எழுத்து கி.மு. 500 வாக்கிலிருந்து கிடைத்திருக்கிறது. தமிழ் பிராமி எழுத்து, ஏன் பிராக்ரிதம் எழுதப்பட்ட அசோக பிராமி எழுத்தே இந்து சமவெளி (ஹரப்பா) எழுத்திலிருந்து வந்ததென்று ஐராவதம் மகாதேவன் உள்ளிட்ட சில ஆய்வாளர்கள் சொல்லிவருகிறார்கள். மத்தவங்க பிராமி அராமியாகிலிருந்து வந்ததுன்னு சொல்றாங்க. என்ன ஆகுதுன்னு பார்க்கனும்!

இந்து சமவெளி எழுத்துக்களை இன்னும் ஆய்வாளர்களால் படிக்கமுடியவில்லை என்பது இன்னொரு சங்கதி. ஐராவதம் மகாதேவன் அந்த எழுத்துக்கள் அரபு மொழி போல வலமிருந்து இடமாக எழுதப்பட்டதாகச் சொல்கிறார்! மேலும் அவர் ஆராய்ச்சிப்படி தொல்காப்பியம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்பு எழுதப்பட்டிருக்க வாய்ப்பில்லை!

Monday, November 19, 2007

சோனார் கெல்லா - தங்கக் கோட்டை

பல வருடங்களுக்குப் பிறகு சத்யஜித் ரேயின் படம் பார்த்தேன். சோனார் கெல்லா (வங்காள மொழி) என்று ஒரு சிறுவன் தனது பூர்வ ஜென்ம நிகழ்ச்சிகளை நினைவுகொள்வதாகச் செல்லும் ஒரு துப்பறியும் கதை. சிறந்த படமெல்லாமில்லை. ஆனால் பல நல்ல விசயங்கள் தெரியவந்தன. தமிழில் இது போன்று (சமீபத்தில்) ஏன் செய்யவில்லை என்று கேட்கத்தூண்டுபவை.

1. ரேயின் புகழ்பெற்ற பெலூடா, தோப்ஷே மற்றும் லால் மோகன் என்னும் பாத்திரங்கள் இப்படத்தில் இருக்கிறார்கள். பெலூ - துப்பறிவாளர், தோப்ஷே அவருக்கு உதவும் உறவுக்காரப் பையன், லால் மோகன் - ஜடாயு என்ற பெயரில் குழந்தைகளுக்கான கதைகள் எழுதுபவர். ரேயின் பல படங்களில் இந்த மூன்று பாத்திரங்களும் இடம்பெறுகிறார்கள்.

கேள்விகள்: தமிழில் ஏன் இத்தகைய பாத்திரங்கள் உருவாக்கப்படவில்லை? சாம்பு என்று அந்த காலத்தில் செய்திருந்தார்களே? ஆங்கிலத்தில் வவ்வால் மனிதன், சிலந்தி மனிதன், ஜேம்ஸ் பாண்ட், போர்ன் என்று பட்டை கிளப்புகிறார்களே? சுஜாதாவின் கணேஷ் வசந்தை வைத்து பல படங்கள் எடுத்திருக்கலாமே? ஒரே கதையை பல படங்களாக எடுத்த சங்கர் ஒரே நடிகர், பாத்திரத்தைப் பயன்படுத்தியிருக்கலாமே?

2. இந்தப்படமே ஒரு கோட்டையைப் பற்றியது என்பதால் இராஜஸ்தானிலுள்ள ஜெய்ப்பூர், ஜோத்பூர், ஜெய்சல்மேர் கோட்டைகளைக் காட்டுகிறார்கள். அவற்றின் வரலாறும் ஒரளவு தெரிகிறது.

கேள்வி: தமிழ் நாட்டிலுள்ள கோட்டைகளான சென்னை புனித ஜார்ஜ், வேலூர், செஞ்சி, தரங்கம்பாடி, தஞ்சை, மதுரை நாயக்கர் மகால், அறந்தாங்கி, பாஞ்சாலங் குறிச்சி, திண்டுக்கல், வட்டக்கோட்டை, உதயகிரி பற்றியயெல்லாம் தமிழர்களுக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு எதாவது தெரியுமா?

3. இந்தப்படத்தை மேற்கு வங்காள அரசு தயாரித்திருக்கிறது.

இடி அமீன் கதையான The Last King of Scotland படத்தை ஐக்கிய ராச்சிய அரசு சேர்ந்து தயாரித்து இருந்தது! தமிழர் வரலாறு சம்பந்தப்பட்ட படைப்புகளை அரசே படமாக எடுக்கலாமே? பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், இராவண காவியம் (?!), செஞ்சிக் கோட்டை பற்றிய கல்கியின் சிறுகதை போன்றவை உடனே நினைவுக்கு வருகின்றன.

பெரியார் படத்துக்கு அரசு பணம் கொடுத்ததென்று நினைக்கிறேன். ஆனால் அந்தப் படத்தை ஐந்து நிமிடங்கள்கூட என்னால் பார்க்கமுடியவில்லை. அவ்வளவு மட்டமாக பெரியார் படத்தை எடுத்திருக்கத் தேவையில்லை!

Saturday, November 17, 2007

சாவதற்கென்றே பிறந்தோம்...


சிதர் என்று பெயரிடப்பட்டள்ள புயல் பங்களாதேஷைத் தாக்கி ஆயிரத்துக்கும் அதிகமானோரை பலிகொண்டிருக்கிறது. 'வருங்கால வல்லரசான' இந்தியா ஆபத்திலிருப்போரைக் காப்பாற்றவும், மீட்புப் பணியிலும் விரைந்து இறங்கியிருக்கும் என்று நீங்கள் நினைத்தால், அதுதான் இல்லை!

இந்தியாவின் தமாசு பத்திரிக்கைகள் பற்றிச் சொல்லவா வேண்டும்? அவர்கள் பங்களாதேஷ் பற்றி தெரிவிக்கவோ, கவலை கொள்ளவோ இல்லை. இந்தியா தப்பித்ததை இரண்டு நாட்களுக்குக் கொண்டாடிவிட்டு, இராகுல் காந்திக்கு முடிசூடக் கிளம்பிவிட்டன! வெட்கம் கெட்டவர்கள்.

ஆனால் நல்லெண்ணம் கொண்டவர்கள் உலகில் இருக்கத்தான் செய்கிறார்கள். Scienceblogs என்னும் வலைப்பதிவில் கடந்த சில நாட்களாக புயல் அபாயம் குறித்தும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது குறித்தும் எழுதிவருகிறார்கள்.

அபாயம் வருகிறதென்று நன்கு தெரிந்திருந்தும், அரசாங்கங்களும், ஊடகங்களும் மெத்தனமாக இருந்ததால், பலியான நூற்றுக் கணக்காணோர் சாவதற்கே பிறந்தனரோ? உயிர் பிழைத்தவர்களையாவது காப்பாற்றுவோம் வாருங்கள்.

Friday, November 16, 2007

பிப்ரவரியில் எத்தனை நாள்?

இந்தியாவில் அதுவும் நீங்கள் மோடியை வெறுக்கும் 'நல்ல' இந்தியராக இருந்தால் பிப்ரவரியில் 31 நாட்கள்! யோசாரின் சுட்டிக்காட்டும் "254 இந்துக்களை கொன்றது யார்?" என்ற தலைப்பில் அர்விந்த் லவாகரே கேட்கும் கேள்விகள் யோசிக்கவேண்டியவை.

மோடி குஜராத் சம்பவங்களுக்குகாக பகிரங்க மன்னிப்பு கேட்பது நலம் என்று நான் சமீபத்தில் எழுதிய ஆங்கிலப் பதிவு இங்கே.

Monday, November 12, 2007

புத்தம் சரணம்...

சிறு வயதிலிருந்தே எங்கள் ஊர் கோயிலில் சிதைக்கப்பட்ட சிற்பங்களைப் பார்த்துப் பழகியவன்தான். ஆனாலும் மேலுள்ள படம் வலிக்கிறது! பாகிஸ்தானின் ஸ்வாத் பகுதியில் சில மதவெறி பிடித்த வீணர்கள் இந்த ஏழாம் நூற்றாண்டு புத்தர் சிலையை சேதப்படுத்தியுள்ளார்கள். புத்தரின் சிந்தனைகள் அவர்களை ஆட்கொள்ளட்டும்! இவர்களைப் பார்த்துத் திருந்தட்டும்.

படம் நன்றி: நிதின் வழியாக இம்ரான்.

Friday, November 09, 2007

படிப்பும் இனிக்கும்!

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

பேச்சுத்தமிழ் செத்துவருவது பற்றி ஏற்கனவே புலம்பியாகிவிட்டது. இப்போது முதலுக்கே மோசம் என்றபடி, பள்ளி மாணவர்களுக்கே தமிழில் எழுதப்படிக்கத் தெரியவில்லையாம்! கோவை மாவட்டப் பள்ளிகளில் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரியவந்திருக்கிறது. இந்து பத்திரிக்கை செய்தி இங்கே.

நல்ல வேலையாக இந்த விவரங்கள் அதே பிரச்சனையை எதிர்கொள்ள தொடங்கப்பட்ட ஒரு தன்னார்வுத் திட்டத்தில்தான் தெரியவந்திருக்கிறது. Aid India அமைப்பு அரசு உதவியுடன் ஆரம்பித்திருக்கும் 'படிப்பும் இனிக்கும்' என்னும் குழந்தைகளுக்கு படிப்பை மகிழ்ச்சியான ஒரு அனுபவமாக மாற்றும் திட்டத்தில்தான் மேற்படி விசயம் தெரியவந்திருக்கிறது. இந்த திட்டம் வெற்றிபெறவும், தமிழகம் முழுவதும் இது விரிவடைந்து தமிழையும் குழந்தைகளையும் காப்பற்றவும் எனது வாழ்த்துக்கள்!

படிப்பை இலகுவாக்கும் ஜிகாம்பிரிஸ் முயற்சி பற்றிய என்னுடைய முந்தைய பதிவு இங்கே!

Monday, November 05, 2007

சூரியன் இன்னும் மிளிர்கிறது!

நிழலாக...

என்னை மிகவும் பாதித்த Sophie Scholl - Die letzten Tage என்னும் ஜெர்மானிய படத்தைப் பற்றி விலாவரியாக எழுதவேண்டும் என்று நினைத்திருந்தேன். பல வாரங்கள் உருண்டோடிவிட்டன. நாசிக்களை எதிர்த்து நின்ற ஒரு 21 வயது மாணவி சோபி ஸ்கோலின் உண்மைக்கதை. அவளும், அவளது சகோதரனின் நண்பர்களும் செய்த தியாகங்கள், என்னைப் போல் தினந்தோறும் திண்றுவிட்டுத் தூங்கிக்கொண்டிரும் உருப்படாத கேஸ்களுக்கு நல்ல பாடம்.

நிஜமாக...

அநியாயத்தை எதிர்த்துப் போராடாவிட்டால் நாம் மனிதராய்ப் பிறந்ததில் அர்த்தமேயில்லை என்பதை சோபி பொட்டில் அடித்தார்போல் சொல்கிறாள். இத்தனைக்கும் அவளும் அவளது நண்பர்களும் ஜெர்மானிய கிறிஸ்தவர்கள்தான். தனக்காக அன்றி பிறர்காக, இவ்வயகத்திற்காகப் போராடும் குணம் எல்லோர்க்கும் வாய்ப்பதில்லை. தான் தூக்கிலிடப்படுவதற்கு (இல்லை Guillotine) முன்னால் சோபி கடைசியாகச் சொன்னது - "சூரியன் இன்னும் மிளிர்கிறது!" (The Sun still shines!)

பி.கு: இப்படத்தின் நாயகி ஜூலியா ஜென்ட்ச் நடித்த The Edukators என்ற மற்றொரு ஜெர்மானிய படமும் பார்க்கவேண்டியதுதான்.

நாய் பிழைப்பு... அருமை!


Mitt liv som hund (My Life as a Dog) என்றொரு ஸ்வீடன் நாட்டு திரைப்படம் பார்த்தேன். அருமை! சொல்லவியலா குடும்பத் துயரத்தை ஒரு சிறுவனின் பார்வையில் செதுக்கியிருக்கிறார்கள். சிரித்து, சிந்தித்துக்கொண்டே பார்க்கலாம்.

இங்க்மார் (சிறுவன்) தன் வாழ்க்கையை துணுக்குச்செய்திகளோடு ஒப்பிட்டுக்கொள்வது கவிதை. "லைக்கா என்னும் நாய் தன்னை விண்வெளிக்கு அனுப்புமாறு கேட்டதா என்ன? மனித முன்னேற்றத்துக்காக (?!) லைக்காவை பட்டினி போட்டு சாகடித்தது உலகம்!" இக்கதையை கொடுத்த நாவல், அதன் ஆசிரியரின் சொந்தக்கதை என்பது சோகம்.

கட்டாயம் பார்க்கவேண்டிய படம். இப்படத்தின் இயக்குனர் Chocolat என்னும் 'சுவை'யான படத்தையும் கொடுத்தவர்.

Saturday, November 03, 2007

மனதை பாதித்த மரணம்

சொன்னால் நம்பமாட்டீர்கள். நேற்றிரவு விகடனில் இராசையா இளந்திரையனின் பேட்டி படித்தேன். பின்னர் அதுபற்றி மனதில் அசைபோட்டுக் கொண்டிருந்தபோது ஒரு பெயர் நினைவுக்கு வராமல் கொஞ்சம் மூலையைக் கசக்கிக்னேன். ஒரு கூகுள் தேடலில் கிடைத்திருக்கும். தூங்கிவிட்டேன்.

காலையில் எழுந்தவுடன் (இல்லை படுத்துக்கொண்டே) நான் செய்வது இணையத்தில் செய்தி படிப்பதுதான். முதல் செய்தியாக அதே பெயர். தமிழ்ச்செல்வன். மரணமடைந்திருந்தார்.

தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய தாக்குதல். பிரபாகரன் கொல்லப்பட்டு தமிழ்ச்செல்வன் புலிகளின் தலைவராவதுதான் அமைதிக்கான நிரந்தர வழியாகயிருந்திருக்கும். அனுராதபுரம் தாக்குதலுக்குப் பழிவாங்க எளிதான ஒரு இலக்கை இலங்கை இராணுவம் அடித்துவிட்டதாகத் தெரிகிறது. ஈழம் இனி எங்கு செல்லுமென்று வருத்தமாயிருக்கிறது. அந்தப் புன்னகை மறைந்திருக்கத் தேவைவில்லை.